“இலக்கு 200 தொகுதிகள்”: 7-வது முறையாக திமுக ஆட்சி அமைக்கும்: முதல்வர் ஸ்டாலின்
தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெற வாய்ப்பு உள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஓரிரு மாதங்களே உள்ள நிலையில் அரசியல் கட்சிகள் தேர்தல் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி வருகின்றன.பிரசாரம், பொதுக்கூட்டம், கூட்டணி, தொகுதி பங்கீடு, நலத்திட்டப்பணிகள், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை என பல்வேறு நடவடிக்கைகளை அரசியல் கட்சிகள் மேற்கொண்டு வருகின்றன.தமிழக சட்டசபை தேர்தலில் திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு உள்பட பல்வேறு கட்சிகள் இடம்பெற்றுள்ளன.இந்நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை பொன்னேரியில் […]
திருப்பத்தூர் சுற்றுலா மாளிகைக்கு முதல்வர் வருகை
திருப்பத்தூர், ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் இருந்து பொதுமக்கள் தமிழக முதல்வருக்கு உற்சாக வரவேற்பு அளித்த நிலையில் பொதுமக்கள் மற்றும் பெண்கள் மகளிர் உரிமை தேவை ஐந்தாயிரம் பெற்றது மகிழ்ச்சியும் தமிழக முதல்வருக்கு இனிப்புகள் ஊட்டி சிறப்பாக வரவேற்பு அளித்த திருப்பத்தூர் பொதுமக்கள் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக சார்பில் திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த மண்டலவாடி பகுதியில் வாக்குச்சாவடி முகவர்களுக்கான பயிற்சி மாநாடு இன்று மாலை 4 மணி அளவில் நடைபெற உள்ளது. […]
திருப்பத்தூர் ஜிஎச்-ல் பரபரப்பு- மேற்கூரை இடிந்து விழுந்து பெண் காயம்
திருப்பத்தூர் மாவட்டம், பொன்னேரி அடுத்த மண்டலவாடி பகுதியைச் சேர்ந்த பத்மா என்பவரின் மகள் நவீனா, தனது ஆறு மாத குழந்தையை காய்ச்சல் மற்றும் சளி காரணமாக கடந்த நான்கு நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளார். இந்த நிலையில், இன்று அதிகாலை சுமார் 4 மணியளவில் பத்மா மற்றும் அவரது மகள் நவீனா நான்கு மாத குழந்தையுடன் மருத்துவமனையில் ஓய்வெடுத்து கொண்டிருந்த போது, திடீரென அரசு மருத்துவமனை கட்டிடத்தின் மேற்பகுதியில் இருந்து பூச்சி […]
அண்ணாவின் நினைவு தினம்- திருப்பத்தூரில் திமுக அமைதி பேரணி
பேரறிஞர் அண்ணாவின் 57வது நினைவு தினத்தை முன்னிட்டு திருப்பத்தூரில் திமுக சார்பில் அமைதி பேரணி நடைபெற்றது திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூரில் முன்னாள் முதலமைச்சர் பேரறிஞர் அண்ணாவின் 57-வது நினைவு தினத்தை முன்னிட்டு திமுக நகர செயலாளர் ராஜேந்திரன் தலைமையில் அமைதி பேரணி நடைபெற்றது. இந்த அமைதி பேரணி திருப்பத்தூர் புதிய பேருந்து நிலையத்திற்கு அருகே உள்ள கலைஞர் திருவுருவ சிலையில் இருந்து புதுப்பேட்டை சாலையில் அமைந்துள்ள அண்ணா திருவுருவ சிலைக்குதிருப்பத்தூர் மாவட்ட செயலாளருமான ஜோலார்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் […]
விளையாடியபோது கடப்பா கல் விழுந்து 3வயது சிறுமி பலி
திருப்பத்தூர் மாவட்டம், ஆம்பூர் ரபீக் நகர் பகுதியை சேர்ந்த வாஹித். இவருக்கு திருமணம் ஆகி 4 குழந்தைகள் உள்ள நிலையில், நேற்று இரவு இவரது 3 வயது மகள் ஹாபியா தஸ்கின் வீட்டின் கேட் அருகே விளையாடி கொண்டிருந்த போது, அங்கு கேட் மீது வைக்கப்பட்டிருந்த கடப்பா கல் எதிர்பாராவிதமாக குழந்தை ஹாபியா தஸ்கீன் தலை மீது விழுந்து சிறுமி படுகாயம்டைந்தார். உடனடியாக குழந்தையை அவரது பெற்றோர் ஆம்பூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்த நிலையில், குழந்தை சிகிச்சை […]
திருப்பத்தூர் அருகே காளான் பாறைகள் கண்டுபிடிப்பு-
திருப்பத்தூர் மாவட்டம், கந்திலி அருகே உள்ள புதூர் பகுதியில் அறிவியல் விந்தையாகக் கருதப்படும் “காளான் பாறைகள்” (Mushroom Rock) புதிதாகக் கண்டறியப்பட்டுள்ளன. உலகின் சில நாடுகளிலும், இந்தியாவில் ஒரு சில பகுதிகளிலும் மட்டுமே காணப்படக்கூடிய இந்த அபூர்வமான இயற்கை அமைப்புகள், திருப்பத்தூர் மாவட்டத்தில் ஏற்கனவே தோக்கியம் என்ற பகுதியில் கண்டறியப்பட்ட நிலையில், தற்போது கந்திலி வட்டாரத்தில் புதூரில் மேலும் மூன்று காளான் பாறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மேலும் காளான் பாறைகள் என்பது இயற்கையாக உருவாகும் ஒரு அபூர்வமான பாறை […]
காவல் நிலையம் முன்பு வாலிபர் தற்கொலை முயற்சி -பரபரப்பு
சமூகவலைதளங்களில் இழிவான பதிவு – மன உளைச்சலில் விஷம் குடித்த வாலிபர் – நடவடிக்கை எடுக்காததால் காவல் நிலையம் முன்பு டீசல் ஊற்றி தற்கொலை முயற்சி திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த சுண்ணாம்பு குட்டை பகுதியைச் சேர்ந்த ராமமூர்த்தியின் மகன் மோகன்ராஜ் (27) என்பவர், தன்னை சமூக ஆர்வலராக காட்டிக் கொண்டு செயல்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அதே பகுதியைச் சேர்ந்த சிலர், மோகன்ராஜ் சமூக ஆர்வலர் என்ற பெயரில் பொதுமக்களிடம் பணம் பறிக்கும் செயல்களில் […]
திருப்பத்தூர் மாவட்டத்தில் போகி பண்டிகை கோலாகலம்
திருப்பத்தூர் மாவட்டம் முழுவதும் தை பொங்கலை வரவேற்கும் விதமாக, அனைத்து வீடுகளிலும் பழைய பொருட்கள் மற்றும் துணிகளை எரித்து, வீடுகளை சுத்தம் செய்து மக்கள் போகி பண்டிகையை பாரம்பரிய முறையில் உற்சாகமாக கொண்டாடினர். மேலும் போகி பண்டிகை என்பது மார்கழி மாதத்தின் நிறைவு நாளில் கொண்டாடப்படும் பண்டிகையாகும். தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையின் துவக்க நாளாக போகி பண்டிகை கருதப்படுகிறது. “தை பிறந்தால் வழி பிறக்கும்” என்ற பழமொழியைப் போல, “பழைய கழிதலும், புதியன புகுதலும்” என்பதே […]
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பொங்கல் விழா- கோலாகலம்
திருப்பத்தூர் தூய நெஞ்சக் கல்லூரியில் பொங்கல் விழா – பாரினர்ஸ் மாணவர்களுடன் கோலாகல கொண்டாட்டம் தமிழர் திருநாளாம் பொங்கல் விழா தமிழக முழுவதும் பள்ளி, கல்லூரிகளில் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வரும் நிலையில், திருப்பத்தூர் மாவட்டம் தூய நெஞ்சக் கல்லூரியில் பொங்கல் விழா சிறப்பாக நடைபெற்றது. மேலும் இந்த விழாவில் கல்லூரியின் ஆயிரக்கணக்கான மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு பொங்கலிட்டு, “பொங்கலோ பொங்கல்” என முழக்கமிட்டு மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். கல்லூரியில் பயிலும் வெளிநாட்டு (பாரினர்ஸ்) மாணவ, மாணவிகளும் தமிழர்களின் […]
வந்தே பாரத் ரயிலில் சசி தரூரை வியக்க வைத்த 16 வயது மாணவன்!
காங்கிரஸ் எம்பி சசி தரூர் வெளியிட்டுள்ள அறிக்கை: வந்தே பாரத் ரயிலில் பயணம் செய்தபோது, ஏஐ துறையில் நம்பமுடியாத சாதனைகளை செய்து வரும் 16 வயது ரவுல் ஜான் அஜூவை சந்தித்ததில் மகிழ்ச்சி. இருவரும் செயற்கை நுண்ணறிவு எல்லைகளைக் கடந்து, மிக முக்கியமாக, நமது பன்முகத்தன்மை கொண்ட நாட்டின் வட்டார மொழிகளில் பேச வேண்டியதன் அவசியம் குறித்து நாங்கள் பேசினோம். வந்தே பாரத் ரயிலில் ஏற்படும் சந்திப்புகள் பெரும்பாலும் இனிமையானவையாக இருக்கும். ஆனால் இந்த நிகழ்வு மிகவும் […]
ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு பூட்டு-துப்புரவு பணியாளர்கள் தர்ணா
பாச்சல் ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டு போட்ட நபரால் பரபரப்பு! துப்புரவு பணியாளர்கள் அலுவலகம் வெளியே அமர்ந்து தர்ணா போராட்டம்! திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பாச்சல் ஊராட்சியின் ஊராட்சி மன்ற தலைவராக கவிதா திருப்பதி உள்ளார். இந்த நிலையில் சாந்தி நகர் பகுதியில் சேர்ந்த சம்பத் என்பவர் திடீரென ஊராட்சி மன்ற அலுவலகத்தில் உள்ளே புகுந்து துப்புரவு பணியாளர்களை வெளியே அனுப்பிவிட்டு ஊராட்சி மன்ற அலுவலகத்தை பூட்டு போட்டு எடுத்துச் சென்றார். இந்த நிலையில் […]
சுய உதவிக்குழு பணத்தை சுருட்டிய பெண் மீது புகார்-பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த குனிச்சி பெரியார் வட்டம் பகுதியில் பெண்கள் ஒன்றிணைந்து முல்லை சுய உதவி குழு உருவாக்கியுள்ளனர். இதில் தலைவராக மகேஸ்வரி என்பவரும் செயலாளராக விஜயா உட்பட 12 உறுப்பினர்கள் கொண்ட குழு அமைத்துள்ளனர். இந்த நிலையில் இவருடைய குழு கணக்கு திருப்பத்தூரில் உள்ள இந்தியன் வங்கியில் உருவாக்கப்பட்டு குழுவை நடத்தி வந்துள்ளனர். அதனைத் தொடர்ந்து வங்கியில் 13 லட்சத்து 20ஆயிரம் கடனாக பெற்று 12 பேருக்கு ஒரு லட்சத்து 10 […]
திருப்பத்தூர்..கடும் பனிப்பொழிவு- பொதுமக்கள் அவதி
திருப்பத்தூர் பகுதியில் இன்று அதிகாலை முதல் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், பொதுமக்கள் கடும் அவதிக்குள்ளாகியுள்ளனர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் சுற்று வட்டார பகுதிகளில் பனிமூட்டம் காரணமாக வீடுகளை விட்டு வெளியே வர முடியாமல் முதியவர்கள், குழந்தைகள் மற்றும் தொழிலாளர்கள் சிரமம் அடைந்துள்ளனர். குறிப்பாக அதிகாலை நேரங்களில் பள்ளி செல்லும் மாணவர்கள், பணிக்குச் செல்லும் அரசு மற்றும் தனியார் நிறுவன ஊழியர்கள் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளனர். திருப்பத்தூர் நகரம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப்புற பகுதிகளில் பார்வைத் […]
திருப்பத்தூர்-”ஹெல்மெட்” குறித்த விழிப்புணர்வு பேரணி
திருப்பத்தூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து தலைக்கவசம் (ஹெல்மெட்) அணிவதின் அவசியம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இந்த பேரணியில் மாவட்ட திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி மற்றும் ஆர்டிஓ பன்னீர்செல்வம் வெங்கட்ராமன் ஆகியோர் கலந்து கொண்டு பேரணியை தொடங்கி வைத்தனர். சாலை விபத்துகளில் உயிரிழப்பை குறைக்கும் வகையில் தலைக்கவசம் அணிவதின் முக்கியத்துவம் குறித்து பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் 250க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்களில் ஹெல்மெட் அணிந்து பேரணி நடத்தப்பட்டது. […]
திருப்பத்தூரில் 51 ரேசன் கடைகள் திறப்பு..
திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் மொத்தம் 51 நியாய விலை கடைகள் திறந்து வைக்கப்பட்டுள்ளதாக திருப்பத்தூர் சட்டமன்ற உறுப்பினர் நல்லதம்பி தெரிவித்தார். திருப்பத்தூர் மாவட்டம், 30-வது வார்டு சிவசக்தி நகரில், திருப்பத்தூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கத்தின் சார்பில் செயல்படும் பகுதி நேர நியாய விலை கடையை, குத்துவிளக்கு ஏற்றி எம்.எல்.ஏ நல்லதம்பி தொடங்கி வைத்தார். இதனைத் தொடர்ந்து பேசிய அவர், திருப்பத்தூர் சட்டமன்றத் தொகுதி முழுவதும் பொதுமக்களின் வசதிக்காக 51 நியாய விலை […]
சொத்துக்காக-தாயின் தலையில் கல்லை போட்டு கொன்ற மகள்-மருமகன்
திருப்பத்தூர் மாவட்டம், புதூர்நாடு மலை பகுதியில் உள்ள நடுகுப்பம் என்ற கிராமத்தை சேர்ந்த சாம்பசிவம் அவருக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில் அவர்கள் இரண்டு பேருக்கும் திருமணம் செய்து கொடுத்த பிறகு அவரவர் அவரது குடும்பத்தினருடன் வாழ்ந்து வரும் நிலையில் சாம்பசிவம் கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு உடல் நிலை குறைபாடு காரணமாக இறந்து உள்ளார். இந்த நிலையில் அவரது மனைவி சின்னகாளி (45) என்பவர் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். அப்போது அவருக்கு […]
எழுதி கொடுத்ததை அப்படியே பேசிய விஜய்- கஸ்தூரி விமர்சனம்
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பைபாஸ் சாலையில் தனியார் பல்நோக்கு மருத்துவமனையை திறந்து வைக்க வந்திருந்த பாஜக கலை மற்றும் கலாச்சார பிரிவு மாநில செயலாளர் நடிகை கஸ்தூரி மருத்துவமனையை திறந்து வைத்த பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேட்டி அளித்தார். அப்போது பேசிய அவர், “இந்து முஸ்லீம் நல்லிணக்கத்தோடு இருப்பது ஆம்பூர் நகரில் கண்கூடாக பார்த்தேன்.தேவையில்லாமல் இந்துவுக்கும் முஸ்லிம்களிடையே பிரிவினியை ஏற்படுத்துவது திமுக தான். திருப்பரங்குன்றம் விவகாரத்தில் அங்குள்ள இந்து முஸ்லிம் மக்கள் இத்தனை ஆண்டு காலமாக கண்டுகொள்ளாத […]
அழகில் மயங்கி 11 ஏக்கர் நிலத்தை பறிகொடுத்த நபர்.. பெண் கைது
திருப்பத்தூர் மாவட்டம், சுந்தரம்பள்ளி பகுதியில் கிருஷ்ணகிரி மாவட்டம், மத்தூர் அடுத்த மோட்டூர் பகுதியை சேர்ந்த பழனி (55) என்பவருக்கு சொந்தமாக சுமார் 11 ஏக்கர் நிலம் உள்ள நிலையில் அந்த இடத்தை அடமானம் வைத்து 6 கோடி ரூபாய் பெற திட்டமிட்டு பழனியின் நண்பரின் கொடுத்த ஆலோசனை பேரில் சென்னை ஜாபர்கான்பேட்டை பகுதியில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் 11 ஏக்கர் நிலத்தை அடமானம் போட திட்டம் போட்டு அங்கு விரைந்துள்ளனர். லோன் அங்கீகரிக்கும் இடத்தில் இருந்த […]
பிரியாணி மாஸ்டருக்கு ரூ. 18 கோடி GST வரி கடிதம்..பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த பால்னங்குப்பம் துரைசாமி வட்டம் பகுதியைச் சேர்ந்த பாபு மகன் அமீர்பாஷா(33)என்பவர் பிரியாணி மாஸ்டராக பணிபுரிந்து வருகிறார்.இவருக்கு திருமணம் ஆகி இரண்டு குழந்தைகள் உள்ள நிலையில், மேலும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வருமான வரித்துறை அலுவலகத்தில் கடிதம் ஒன்று வந்துள்ளது. அதில் அமீர் பாஷா சென்னையில் அமீர் டிரேடிங் கோ என்கிற நிறுவனம் நடத்தி அதில் 18 கோடி ரூபாய் ஜி.எஸ்.டி வரிஏய்ப்பு செய்துள்ளதாகவும், அதனை உடனடியாக செலுத்த வேண்டும் என […]
திருப்பத்தூரில் மாநில அளவில் NCC மாநாடு- 600 மாணவ-மாணவிகள் பங்கேற்பு
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தமாவட்டம்நெஞ்சக் கல்லூரியின் 75ஆம் ஆண்டு பிளாட்டினம் ஜூப்ளி விழாவை முன்னிட்டு, மாநில அளவிலான தேசிய மாணவர் படை (NCC) மாநாடு டிசம்பர் 04, தூய நெஞ்சக் கல்லூரியில் நடைபெற்றது. கஇம்மாநாட்டில் மாநிலம் முழுவதும் உள்ள இருபதிற்கும் மேற்பட்ட கல்லூரிகளைச் சார்ந்த சுமார் 600க்கும் மேற்பட்ட தேசிய மாணவர் படை மாணவர்கள் பங்கேற்று சிறப்பித்தனர். மாநாட்டின் சிறப்பு விருந்தினராக சேலம் 12 தமிழ் நாடு பட்டாலியன் தேசிய மாணவர் படை பிரிவு கமாண்டிங் அதிகாரி கர்னல் […]
பிளாஸ்டிக் ட்ரம்மிற்குள் நாகபாம்பு -வனத்துறை மீட்பு
திருப்பத்தூர் அருகே பிளாஸ்டிக் ட்ரம்மில் பதுங்கி இருந்த நாகப்பாம்பை பிடித்த தீயணைப்புத் துறையினர். திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சக்தி நகர் பகுதியை சேர்ந்த குரு மகன் இளங்கோ என்பவர் புதிய வீடு கட்டப்பட்டு வரும் நிலையில், அந்த வீட்டில் இருந்த பிளாஸ்டிக் ட்ரம்மை திறந்து பார்த்துள்ளனர். அப்போது உள்ளே நாகப்பாம்பு இருந்துள்ளது. இதனைப் பார்த்த வீட்டின் உரிமையாளர் திருப்பத்தூர் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் கொடுத்துள்ளார். இத்தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்புத்துறையினர் பிளாஸ்டிக் ட்ரம்மில் […]
ஏலகிரி மலை பனிப்பொழிவின் ரம்மியகாட்சி.. குரங்குடன் சுற்றுலா பயணிகள் செல்பி
வழக்கமாக ஒவ்வொரு வருடமும் கார்த்திகை மாதம் துவங்கி தை மாத இறுதிவரை குளிர்காலம் என்பதால் அதிகாலை முதலே பனிப்பொழிவு இருக்கும். இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த ஏலகிரி மலை சுற்றுலா தளமாக விளங்கி வருகிறது மேலும் ஏழைகளின் ஊட்டி எனவும் அழைக்கப்படுகிறது. இதன் காரணமாக தமிழகம் மட்டுமின்றி அண்டை மாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர். இந்த நிலையில் ஏலகிரி மலையில் அதிகாலை முதலே சாரல் மழை பொழிந்து கரு மேக மூட்டத்துடன் […]
பெட்ரோல் குண்டு வெடிக்க செய்து ரீல்ஸ்… போலீசாரிடம் வாலிபர் மன்னிப்பு
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த பால்னாங்குப்பம் பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (21). இவர் இன்ஸ்டாவில் அவ்வப்போது அதிக லைக்குகள் பெறுவதற்காக ஆபத்தான வீடியோக்களை எடுத்து பதிவு செய்து வந்துள்ளார். அதேபோன்று அண்மையில் ஒரு வீடியோவை பதிவு செய்திருந்தார். அதில் ஒரு இடத்தில் பிளாஸ்டிக் கவரில் பெட்ரோல் நிரப்பி அதன் மீது பவுடரை கொட்டி வெடிமருந்து வைத்து வெடிக்கச்செய்கிறார். அது வெடித்துச்சிதறுகிறது. அதன் வீடியோவை பதிவேற்றம் செய்தார். அதன்பின்னர் ஜோலார்பேட்டை போலீஸ் நிலையம் முன் நடந்து வருவதை போன்று […]
திருப்பத்தூர்.. கொய்யா-எலுமிச்சை செடிகளை வெட்டியதால்-கதறிய மூதாட்டி-புகார்
திருப்பத்தூர் மாவட்டம் பெரியமூக்கனூர் பகுதியை சேர்ந்த ராமமூர்த்தி மகன் தினகரன் (51) இவர் கடந்த 2015 ஆம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த அண்ணாதுரை என்பவரிடம் 51 சென்ட் அளவிலான நிலத்தை வாங்கியுள்ளார். இந்நிலையில் அண்ணாதுரையின் மச்சான் ஆன உதயகுமார் (35) என்பவருக்கும் இடையே நில தகராறு இருந்து வந்துள்ளது. மேலும் உதயகுமார் தன்னுடைய அம்மாவிற்கு சேர வேண்டிய சொத்து எனக் கூறிய நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார். அதேபோல முறையான பத்திரம் பதிவு செய்துள்ளதால் தினகரனும் […]
இறந்தவரின் ஈமசடங்கு பணம் வாங்குவதற்கு ரூ.2 ஆயிரம் லஞ்சம்-அதிகாரி கைது
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி பகுதியைச் சேர்ந்த பெருமாள் மனைவி மலர். இவர் கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இயற்கை மரணம் அடைந்துள்ளார். இயற்கை மரணம் அடைந்த நபருக்கு ஈமச்சடங்குக்காக அரசு அறிவித்துள்ள உழவர் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 25 ஆயிரம் பணத்தை பெற பெருமாள் மகன் சேகர் என்பவர் நாட்றம்பள்ளி தனி வட்டாட்சியர் வள்ளியம்மாவிடம் கையெழுத்திற்காக அணுகி உள்ளார். இதன் காரணமாக கையெழுத்திட சேகரிடம் சமூக நல பாதுகாப்பு திட்ட தனி வட்டாட்சியர் மூன்றாயிரம் பேரம் பேசியுள்ளார் […]
திருப்பத்தூர்-சட்டவிரோதமாக மண் விற்பனை… பல கோடி மோசடி- மனு
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த காங்கரை பகுதியைச் சேர்ந்த சுரேஷ்குமார் (47) பிஜேபியில் மாவட்ட பிரச்சார பிரிவு இணை அமைப்பாளராக உள்ளார். இவர் திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மக்கள் குறை தீர்ப்ப கூட்டத்தில் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் திருப்பத்தூர் மாவட்டத்தில் ரிங் ரோடு பணிக்காக அரசு வழங்கிய மண் அள்ளுவதற்கான பர்மீட்டை தவறாக பயன்படுத்தி திருப்பத்தூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் நாளொன்றுக்கு சுமார் 1000 முதல் 1500 வரை போலி பர்மிட் […]
மாணவியின் தலையில் ஏறி இறங்கிய டிப்பர் லாரி-மேலும் 2 பேர் படுகாயம்
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த சி கே ஆசிரமம் பகுதியை சேர்ந்த சக்திவேல் என்ற மாணவன் இன்று கரியம்பட்டி பகுதியில் உள்ள திருவள்ளுவர் கலைக்கல்லூரிக்கு அரியர் எக்ஸாம் எழுத சென்றபோது தன்னுடைய தோழிகளான ஆந்திர மாநிலம் குப்பம் பகுதி யைச் சேர்ந்த ரம்யா என்ற வரையும் அதேபோல ஜெய் பீம் நகர் பகுதியைச் சேர்ந்த பிரியங்கா என்பவரையும் ஒரே இருசக்கர வாகனத்தில் அழைத்துக் கொண்டு கல்லூரிக்கு சென்றுள்ளார். அப்போது கந்திலி அருகே வந்து கொண்டிருந்த டிப்பர் லாரியை […]
திருப்பத்தூரில் லாட்டரி விற்ற திமுக பிரமுகர் கைது..
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த கோனாப்பட்டு கிராமத்தை சேர்ந்த நடேசன் (61) திமுக பிரமுகரான இவர் அப்பகுதியில் மளிகை கடை நடத்தி வரும் நிலையில், கடைக்கு வரும் வாடிக்கையாளர்களிடம் லாட்டரி விற்பனையை சைடு பிசினஸ் ஆக செய்து வந்துள்ளார். இது குறித்து திருப்பத்தூர் டிஎஸ்பி சௌமியாவிற்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. தகவலின் பேரில் டி.எஸ்.பி தனிப்படை போலீசார் விசாரணை நடேசனின் செல் போன் என்னை வைத்து லொகேஷன் பார்த்து உள்ளனர். அப்போது கேரளாவிற்கு சென்று லாட்டரி சீட்டு […]
கணவனை வெட்டிய மனைவியின் காதலன்- குழந்தைகள் முன்பு கொடூரம்
திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி மில்லத் நகர் பகுதியை சேர்ந்தவர் அப்புன்ராஜ், இவரது மனைவி ஜீவா. இவர்களுக்கு 7 வயதில் ஒரு மகள், மற்றும் 2 வயதில் ஒரு மகன், என இரு குழந்தைகள் உள்ள நிலையில், ஜீவா திருமணத்தை மீறி பிரேம்குமார் என்ற வாலிபருடன் உறவில் இருந்து உள்ளார். இதனை அறிந்த ஜீவாவின் கணவர் அப்பன் ராஜ் சில மாதங்களுக்கு முன்பு பிரேம்குமாரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஜீவா பிரேம்குமார் உடனான உறவை துண்டித்ததாகவும், இதனால் ஆத்திரமடைந்த […]
மின்கசிவு…திமுக கவுன்சிலர் வீடு எரிந்து முற்றிலும் நாசம்
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் அடுத்த சக்தி நகரில் வசித்து வருபவர் குட்டி(எ) சீனிவாசன் என்பவர் திமுக கட்சியின் 2 வார்டு கவுன்சிலராக செயல்பட்டு வரும் நிலையில், இன்று அவரது வீட்டில் மின் கசிவு காரணமாக திடீரென வீடு தீப்பற்றி எரிந்துள்ளது. இதனைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தகவலின் பெயரில் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மாவட்ட தீயணைப்பு துறை அலு வலர் ஜாஸ்மின் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் 2 மணி நேரம் […]
மாற்றுதிறனாளிகளுக்கு உதவித்தொகை உயர்த்தி வழங்க கோரி.. திருப்பத்தூரில் போராட்டம்
ஆந்திர மாநிலத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்கப்படும் மாதாந்திர உதவித்தொகையைப் போல் தமிழ்நாட்டிலும் உயர்த்தி வழங்கிட கோரி, தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திறனாளிகள் மற்றும் பாதுகாப்பு உரிமைக்கான சங்கம் (TARATDAC) சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களை முற்றுகையிட்டு போராட்டங்கள் நடைபெற்றன. இதன் ஒரு பகுதியாக, திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை நூற்றுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மாற்றுத்திறனாளிகளுக்கான உதவித்தொகையை உயர்த்தி வழங்க வேண்டும் என்ற கோரிக்கையுடன் போராட்டக்காரர்கள் கோஷமிட்டனர். ஆந்திர மாநிலத்தில் ஊனத்தின் […]
மின்கசிவு… ரூ.25 ஆயிரம்-வீடு முழுவதும் எரிந்து நாசம்
திருப்பத்தூர் மாவட்டத்தில் திருப்பத்தூர் ஒன்றியம்கொடுமாம்பள்ளி பகுதியில் மின் கசிவின் காரணமாக திடீரென ஏற்பட்ட தீ விபத்தில் ஒரு குடும்பம் பெரிய அளவில் பாதிக்கப்பட்டது. திருப்பத்தூர் மாவட்டம் கொடும்பள்ளி பகுதியில் வசித்து வரும் சிவகாமி கணவர் அன்பு (35) என்பவர் திருப்பத்தூரில் பிரபலமான கிருஷ்ணா சில்க்ஸ் துணிக்கடையில் பணியாற்றி வருகிறார். இன்று காலை வழக்கம்போல் வேலைக்குச் சென்றுள்ளார் இவரது வீட்டில் திடீரென சத்தம் கேட்டு வீட்டில் அருகில் இருக்கும் மோகன் சென்று பார்த்தபோது திடீரென மின் கசியின் காரணமாக […]
எங்களுக்கு சாலை வசதி தான் வேண்டும்- அப்பகுதி மக்கள் சாலை மறியல்
திருப்பத்தூர் மாவட்டம், நாட்றம்பள்ளி அடுத்த கோமுட்டியூர் கூட்டுச்சாலையில் அரசனப்பள்ளி, பாலன் வட்டம், வண்டிக்கார வட்டம் பகுதியைச் சேர்ந்த மக்கள் பச்சூர் – டோல்கேட் செல்லும் சாலையில் அமர்ந்து எங்கள் பகுதிக்கு முறையான சாலை வசதி வேண்டும் என்று அவ்வழியாக செல்லும் பள்ளி கல்லூரி பேருந்துகள், லாரிகளை வழிமறித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்து விரைந்து சென்ற நாட்றம்பள்ளி போலீசார் ரயில்வே நிர்வாகத்திடம் பேசி உங்களுக்கு உரிய ஏற்பாடு செய்து தரப்படும் என்று […]
மாட்டு லோனுக்காக எம்டி செக்… 3 லட்சம் வாங்கியதாக பிளாக் மெயில்.. கலெக்டரிடம் மனு
திருப்பத்தூர் மாவட்டம் நாட்றம்பள்ளி அடுத்த பகுதியைச் சேர்ந்த வேணுகோபால் மகன் கௌதம் (21) இவர் வாணியம்பாடி அடுத்த ஆயர்பாடி கிராமத்தைச் சேர்ந்த ஹரி என்பவர் நடத்தி வரும் ஹாலோ பிரிக்ஸ் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் கௌதம் தன்னுடைய வீட்டில் சண்டை போட்டதன் காரணமாக மூன்று மாதங்களாக ஹாலோ பிரிக்ஸ் கம்பெனியிலேயே தங்கி இருந்ததாக கூறப்படுகிறது. அப்போது ஓனர் ஹரி உனக்கு மாட்டு லோன் வாங்கி தருகிறேன் எனக் கூறியுள்ளார் இதனை நம்பிய கௌதம் […]
குருசிலாப்பட்டு அருகே அடிப்படை வசதி கோரி பொதுமக்கள் சாலை மறியல்
திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு அடுத்த பாப்பானூர் மேடு பகுதியில் சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. ஆனால், இருணா பட்டு மற்றும் குருசிலாப்பட்டு எனும் இரண்டு பஞ்சாயத்துகளுக்கு இடையில் இப்பகுதி அமைந்துள்ளதால், இரண்டு பஞ்சாயத்து நிர்வாகங்களும் இப்பகுதிக்கு சாலை, குடிநீர், மின்வசதி உள்ளிட்ட அடிப்படை வசதிகளை வழங்காமல் புறக்கணித்து வருவதாக பொதுமக்கள் குற்றம்சாட்டினர். இதனைத் தொடர்ந்து பலமுறை துறை சார்ந்த அதிகாரிகள் மற்றும் ஊராட்சி நிர்வாகத்திடம் மனுக்கள் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாததால், இன்று காலை […]
பாமக மகளிர் அணி தலைவியின் கணவர் கொலை… திருப்பத்தூர் அருகே பரபரப்பு
திருப்பத்தூர் மாவட்டம், லட்சுமி நகர் பகுதியைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் மகளிர் அணி தலைவி நூறு நிஷா இவருடைய கணவர் அலி ஜான் என்கிற அந்தோணி (65) இவரும் அதே பகுதியை சார்ந்த கார்த்திக் (50) என்பவரும் திருப்பத்தூரில் உள்ள பிரபல கோல்டன் சூப்பர் மார்க்கெட் என்ற கடையில் செக்யூரிட்டிகளாக பணி புரிந்து வந்தனர். அந்தோணி என்பவர் இரவு நேரத்தில் பணி செய்துள்ளார். அவரை மாற்றுவதற்காக கார்த்திகேயன் சென்றுள்ளார். அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு […]
சாலையில் சுற்றிதிரியும் மாடுகள்… கவனிப்பார்களா? அதிகாரிகள்
திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் நகர பகுதிகளில் பகல் மற்றும் இரவு நேரங்களிலும் முறையான பராமரிப்பு இல்லாமல் மாடுகளை உரிமையாளர்கள் அவிழ்த்து விட்டு காரணத்தால் முக்கிய பிரதான சாலைகளில் கால்நடைகள் சுற்றித்திரியும் அவலம் ஏற்பட்டுள்ளது. உரிமையாளர்கள் பசு மாடுகள் மற்றும் கன்று குட்டிகள் உள்ளிட்டவையை அவிழ்த்து விட்டுவதன் காரணமாக முக்கிய சாலைகளிலின் நடுவே நின்று கொண்டும் படுத்து கொண்டும் சாலையில் பயணிக்கும் வாகன ஓட்டிகளுக்கு இடையூறு ஏற்படுத்தி வருகிறது. இதன் காரணமாக வாகன ஓட்டிகள் பயணிக்க முடியாமல் விபத்துக்குள்ளாகும் […]
திருப்பத்தூரில் வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம்!.. கலெக்டர் ஆய்வு
தமிழகத்தில் தற்போது வாக்காளர் சிறப்பு தீவிர திருத்தம் தொடங்கப்பட்டுள்ளது திமுக கட்சிகளின் எதிர்ப்பை தாண்டி தேர்தல் ஆணையம் பணிகளை தொடங்கியுள்ளது. இந்த நிலையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் நகர் பகுதி 14 வது வார்டு திரு வி கா ரோடு பகுதியில் வாக்கு சாவடி நிலை அலுவலர்கள் மூலம் கணக்கெடுக்கும் படிவம் வீடு வீடாக சென்று வழங்கினர். இதனை திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார் தமிழகத்தில் தேர்தல் நெருங்கி வரும் வேலையில் […]
மனநிலை பாதிக்கப்பட்ட பெண்ணிடம் அத்துமீறல்-வாலிபர் கைது
சித்தூர் மாவட்டம் குப்பம் பகுதியைச் சேர்ந்த முனியப்பன் மகன் வல்லரசு (26) இவர் திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த பூனைக்குட்டி பள்ளம் பகுதியில் உள்ள அக்கா வீட்டிற்கு வந்துள்ளார். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த மனநல பாதிக்கப்பட்ட பெண்ணை ஆள் இல்லாத இடத்திற்கு அழைத்துச் சென்று தவறாக நடந்து கொண்டுள்ளார் . இதனை அறிந்த அக்கம்பக்கதவர் கத்தி கூச்சலிட்டதால் வாலிபர் அங்கு இருந்து தப்பி சென்றார். பின்னர் அந்த வாலிபரை விரட்டிப்பிடித்து ஜோலார்பேட்டை போலீஸாரிடம் ஒப்படைத்தனர் இதன் காரணமாக […]
திருப்பத்தூர் அருகே தொடர் கஞ்சா விற்பனை… வாலிபர் கைது
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் கஞ்சா விற்பனை செய்வதாக திருப்பத்தூர் டிஎஸ்பி சௌமியாவிற்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பெயரில் டிஎஸ்பி தனி படை போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது ரயில் நிலையம் அருகே உள்ள புத்துமாரியம்மன் கோயில் பகுதியில் முட்புதர்களின் மறைவில் ஒரு கிலோ கஞ்சாவை சிறிய பாக்கெட்டுகளாக பேக்கிங் செய்து விற்பனை செய்ய 2வாலிபர்கள் ஈடுபட்டிருந்தனர். மேலும் தனிப்படை போலீசார் சென்றபோது இருவரும் தப்பி ஓடி உள்ளனர். பின்னர் அவர்களை […]