மகளிருக்கு ரூ.5000 வரவு..மனம் குளிர செய்யும் அறிவிப்பு…திருமா., பாராட்டு

மகளிருக்கு ரூ.5000 வரவு, எதிர்காலத்தில் உரிமைத் தொகையை ரூ.2000ஆக உயர்த்தும் முதலமைச்சரின் அறிவிப்பை வரவேற்கிறோம். இது மகளிரை மனம் குளிரச் செய்யும் அறிவிப்பு மட்டுமல்ல, கிராமப்புறப் பொருளாதாரத்தை மேம்படுத்தும் அறிவிப்பாகும்’ என விசிக தலைவர் தெரிவித்துள்ளார். மேலும் அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்; “மகளிர் உரிமைத்தொகை பெறும் பெண்கள் அனைவருக்கும் தமிழ்நாடு அரசால் இன்று அவர்களது வங்கிக் கணக்கில் ஐந்தாயிரம் ரூபாய் செலுத்தப்பட்டிருக்கிறது. பிப்ரவரி மார்ச் ஏப்ரல் மாதங்களுக்கான தொகை 3000, கோடைக்கால இடர்பாடுகளை எதிர்கொள்வதற்கு உதவித்தொகை 2000 […]