புதுகையில் புதிய மின்மாற்றி… எம்எல்ஏ துவக்கி வைத்தார்

புதுக்கோட்டை மாநகரம் 39வது வட்டம் அரிமழம் சாலை அந்தோணியார் கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றினை மக்களின்பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா துவக்கி வைத்தார். நிகழ்வில் மாநகர உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, பால்ராஜ். மாநகர திமுக அமைப்பாளர் ராஜேஸ், வட்ட திமுக செயலாளர் அண்ணாதுரை ,இளைஞர் அணி கருணாநிதி, தெய்வானை மற்றும் பகுதி மக்கள் பலர் பங்கேற்றனர்.

லால்குடியில் புதிய பயணியர் நிழற்குடை… எம்எல்ஏ ஏற்பாடு

திருச்சி மாவட்டம், புள்ளம்பாடி ஒன்றியம் இலால்குடி சட்டமன்ற உறுப்பினர் தொகுதி வளர்ச்சி நிதியில் இருந்து மா.கண்ணனூர் ஊராட்சியில் ரூபாய் 10 லட்சத்தில் பயணியர் நிழற்குடை கட்டிடம் கட்டுவதற்கான பணியை எம்எல்ஏ சௌந்தரபாண்டியன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் கருப்பையா, முன்னாள் ஊராட்சி தலைவர் தனசெல்வம், தன்ராஜ்‌, உதயசூரியன் ,சேகர் ,கருப்பையா, மணி, உட்பட பலர் கலந்து கொண்டனர்….