திருச்சி கிரைம்…உறையூரில் ஆட்டோ டிரைவர் தூக்கு போட்டு தற்கொலை

திருச்சி தென்னூர் சின்னச்சாமி நகரைச் சேர்ந்தவர் முகமது ரபீக் (46). இவர் ஆட்டோ ஓட்டுநராகவும், ஆட்டோ மெக்கானிக்காகவும் பணிபுரிந்து வந்தார். கடந்த சில காலமாக நீரிழிவு நோய் மற்றும் குடலிறக்கம் உள்ளிட்ட உடல்நலக் கோளாறுகளால் இவர் அவதிப்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது. இதற்கிடையில், வாங்கிய கடன்கள் காரணமாகக் கடும் நிதி நெருக்கடியிலும் அவர் இருந்து வந்துள்ளார். உடல்நல பாதிப்பு மற்றும் கடன் தொல்லையால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த முகமது ரபீக், வீட்டில் நைலான் கயிற்றால் மரக்கட்டையில் தூக்கிட்டு […]

குடும்பத் தகராறில் கூலித் தொழிலாளி தற்கொலை

தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரம் அருகே உள்ள தாப்பாத்தி இலங்கைத் தமிழர் மறுவாழ்வு மையத்தைச் சேர்ந்தவர் ரகுநாத் (25). கூலித் தொழிலாளியான இவருக்குத் திருமணமாகி மனைவியும், இரண்டு வயதில் ஒரு ஆண் குழந்தையும் உள்ளனர். இந்நிலையில், நேற்று முன்தினம் மாலை ரகுநாத்திற்கும் அவரது மனைவிக்கும் இடையே குடும்பத் தகராறு ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த ரகுநாத், வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். நீண்ட நேரம் வீடு திறக்கப்படாததால் சந்தேகமடைந்த அக்கம் பக்கத்தினர், கதவை உடைத்து […]

கல்லூரி பேராசிரியை தற்கொலை

கோயம்புத்தூர் வெள்ளலூர் கே.ஆர். கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி (36). இவர் கோவையில் உள்ள ஒரு தனியார் கல்லூரியில் பேராசிரியையாகப் பணியாற்றி வந்தார். இவரது கணவர் மணிகண்டன் ஒரு தனியார் நிறுவன ஊழியர். இவர்களுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். தனலட்சுமிக்கும் அவரது கணவர் மணிகண்டனுக்கும் இடையே கடந்த சில நாட்களாகக் குழந்தைகளைப் பராமரிப்பது தொடர்பாகத் தொடர்ந்து கருத்து வேறுபாடு இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று முன்தினம் காலையும் இது தொடர்பாக இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் […]

மருத்துவ மாணவி தூக்குப்போட்டு தற்கொலை

தர்மபுரி மாவட்டம் கொண்டகரஅள்ளியை சேர்ந்த வெங்கடேசன், விவசாயி. இவரது மகள் காவியா (17). இவர் தர்மபுரி அரசு மருத்துவ கல்லூரியில் முதலாம் ஆண்டு பாராமெடிக்கல் மயக்கவியல் படித்து வந்தார். மயக்கவியல் படிப்பு ஆங்கிலத்தில் இருந்ததால் காவியாவால் படிக்க முடியாமல் தவித்துள்ளார். இதுகுறித்து அவர் பெற்றோரிடம் தெரிவித்துள்ளார். இதற்கு பெற்றோர் உன்னால் படிக்க முடியும் என கூறி அவரை கண்டித்ததாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்த காவியா நேற்று முன்தினம் வீட்டில் தனது துப்பட்டாவால் தூக்குப்போட்டு தற்கொலை […]