தூய்மை பணியாளர்களுக்கு காலை உணவு திட்டம்… முதல்வருக்கு நன்றி
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் திருவள்ளூர் மாவட்டம், போளிவாக்கத்தில் மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கான உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்து, அவர்களுக்கான நலத்திட்ட உதவிகளை வழங்கினார். இதன் தொடர்ச்சியாக, திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், நகராட்சி தூய்மை பணியாளர்கள் 291 பேருக்கான காலை உணவு திட்டத்தை மாவட்ட ஆட்சியர் சிவசௌந்தரவல்லி தொடங்கி வைத்தார். இந்த திட்டத்தின் கீழ், தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல், இட்லி, வடை, […]
சாலையோரம் சாப்பிட்டுக் கொண்டிருந்த தூய்மைப் பணியாளர்கள் மீது கார் மோதல் – 5 பெண்கள் பலி
மத்திய பிரதேச மாநிலம் ஜபல்பூர் நகரின் பரேலா பகுதியில் உள்ள ஏக்த சவுக் அருகே நிகழ்ந்த கோர விபத்தில், தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த 5 பெண்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மண்ட்லா மாவட்டத்தின் பாம்ஹோரி கிராமத்திலிருந்து தூய்மைப் பணிக்காகப் பணியாளர்கள் சிலர் ஜபல்பூர் வந்திருந்தனர். அவர்கள் பரேலா பகுதியில் சாலையோரமாக அமர்ந்து மதிய உணவு சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது, அதிவேகமாக வந்த கார் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து அவர்கள் மீது பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் நிற்காமல் அந்த கார் […]
புதுகை-தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு வழங்கிய அமைச்சர்கள்
புதுக்கோட்டை மாவட்டம் /ஊராட்சி ஒன்றியம் வாராப்பூர் ஊராட்சியில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் சார்பில் சமத்துவ பொங்கல் விழாவினை ஆட்சியர் மு.அருணாதலைமையில்இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் ஆகியோர் இன்றுதுவக்கி வைத்து பொதுமக்களுடன் இணைந்து சமத்துவபொங்கலிட்டு தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் பரிசு மற்றும் வேஷ்டி,சேலைகளைவழங்கினர். உடன் சட்டமன்ற உறுப்பினர்கள் வை.முத்துராஜா,எம்.சின்னத்துரை, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்பா. ஜெயசுதா, செய்தி மக்கள் தொடர்பு […]
தூய்மை பணியாளர்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு
தூய்மை பணியாளர்கள் தலைமைச் செயலகத்தில் எதிரே சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிப்பு சென்னை தலைமைச் செயலகத்தில் எதிரே உள்ள காமராஜர் சாலையில் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை முழங்க சாலை மறியல் ஈடுபட்டனர் பின்பு போலீசார் வந்து அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினர் பணியில் ஈடுபட்ட போலீசார் தூய்மை பணியாளர்களை குண்டு கட்டாக தூக்கி வேனில் ஏற்றினர் இதனால் சில மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளதுஇவர்கள் தலைமை செயலகத்திற்கு எதிரே வந்து ஆர்ப்பாட்டத்தில் […]
தூய்மை பணியாளர்களுக்கு நவம்பர் 15 முதல் இலவச உணவு
சென்னை மாநகராட்சி மேயர் பிரியா செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடந்த 2021ஆம் ஆண்டு ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்து தற்போது வரை கல்விக்கும், மருத்துவத்திற்கும் அதிக முக்கியத்துவம் அளித்து வருகிறார்கள். அதன்படி, சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட கல்வி நிலையங்களின் கட்டடங்கள் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி ஒவ்வொரு நிதிநிலை அறிக்கையிலும் அறிவிப்புகள் வெளியிடப்பட்டு பணிகள் முடுக்கி விடப்படுகின்றன. பள்ளிகளின் கல்வித் தரமும் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்த சூழலில் மாநகராட்சியின் பல்வேறு பகுதிகளில் உள்ள சமுதாய […]