தென்கிழக்கு வங்கக்கடலில் 15ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 15ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவும் பகுதியில், புதிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகிறது. தென் தமிழகம் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இன்றும், பிப்.14லும் தென்தமிழக கடலோர மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யும்

தமிழகத்தில் கனமழைக்கு வாய்ப்பு

தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தெற்கு அந்தமான் கடல் பகுதியில் நிலவிய குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலுப்பெற்றுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது தற்போது தென்கிழக்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இந்திய பெருங்கடல் பகுதியில் நிலவுகிறது. இந்தத் தாழ்வுப் பகுதி அடுத்த 48 மணி நேரத்தில் மேற்கு – வடமேற்கு திசையில் நகரும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இந்தத் தாழ்வுப் பகுதி மேலும் வலுப்பெற்று தாழ்வு மண்டலமாக மாற […]