மோடியிடம் தமாகாவை அடகு வைத்த வாசன்- நாஞ்சில் சம்பத் தாக்கு

நெல்லை: தமிழக வெற்றிக் கழகம் சார்பில் நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் கொள்கை பரப்பு செயலாளர் நாஞ்சில் சம்பத் பேசியதாவது: இஸ்லாமிய மக்களுக்கு பாஜ அரசு பல இன்னல்களை இழைத்துள்ளதை எதிர்த்து குரல் கொடுத்தவன் நான். கொள்கைக்காக மூப்பனார் துவக்கிய தமாகாவை ஜிகே வாசன் மோடியிடம் அடகு வைத்துவிட்டார். விஜயகாந்த் துவக்கிய தேமுதிகவை அவரது மனைவி பிரேமலதா கூறுபோட்டு விற்பனை செய்யத் தயாராகிவிட்டார். ஆனால் பாவம் வாங்கத்தான் ஆளில்லை. முஸ்லிம்களின் மனதை புண்படுத்தும்படியாக மாட்டிறைச்சி உண்ணக்கூடாது, மாட்டு […]

தலைவர் விஜயை குறைகாணும் நேரு, முதலில் தன் முகத்தை கண்ணாடியில் காணட்டும்

எந்த அழுத்தத்திற்கும் அடிபணிகிறவன் நான் இல்லை என்று முழங்கிய எங்கள் தலைவரை பார்த்து அமைச்சர் நேருவுக்கு ஏன் ஆத்திரம்? என தவெக பரப்புரைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கேள்வி எழுப்பியுள்ளார். ஜெயலலிதாவிடம் கைகட்டி நின்றவர்தான் இன்றைக்கு வீர வசனம் பேசுகிறார் என அமைச்சர் நேரு தவெக தலைவர் விஜய்யை சாடிய நிலையில், இதற்கு கண்டனம் தெரிவித்துள்ள நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தளத்தில், “தலைவர் விஜயை குறைகாணும் நேரு, முதலில் தன் முகத்தை கண்ணாடியில் காணட்டும்..! எந்த […]

நாஞ்சில் சம்பத்துக்கு தவெக பரப்புரை செயலாளர் பொறுப்பு

தவெக தலைவர் விஜய் முன்னிலையில் திராவிட இயக்க பேச்சாளர் நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்துள்ளார். கடந்த சில வாரங்களாகவே விஜய்க்கு ஆதரவாக நாஞ்சில் சம்பத் பேசி வந்த நிலையில், நேற்று நாஞ்சில் சம்பத் தவெகவில் இணைந்தார். இதனை தொடர்ந்து தவெகவில் இணைந்த நாஞ்சில் சம்பத்திற்கு பரப்புரை செயலாளர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளதாக தவெக தலைவர் விஜய் அறிவித்துள்ளார்.

தம்பி விஜய் சொன்னதை கேட்டு மெய் சிலிர்தேன்….நாஞ்சில் சம்பத்

மதிமுக, அதிமுக, திமுக என பல்வேறு கட்சிகளில் பயணித்த நாஞ்சில் சம்பத் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்தார். தவெக தலைவர் விஜய் முன்னிலையில் தவெகவில் தன்னை இணைத்து கொண்டது தொடர்பாக நாஞ்சில் சம்பத் தனது எக்ஸ் தளத்தில், “தமிழக வெற்றிக் கழகத்தில் தம்பி விஜய் முன்னிலையில் என்னை இணைத்துக் கொண்டேன். என்னை பார்த்ததும் “நான் உங்கள் ஃபேன் தெரியுமா?”என்றார், நான் மெய்சிலிர்த்து போனேன். தமிழக வெற்றிக் கழகத்தை நாடு முழுக்க கொண்டு சேர்க்கின்ற பணியில் ஈடுபடுவேன். வெற்றி […]