கார்கள் நேருக்கு நேர் மோதி விபத்து…8 பேர் படுகாயம்

கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் உள்ள நெடுஞ்சாலையில் கர்நாடக பதிவெண் கொண்ட காரில் 5 பேர் பயணித்தனர். ஊத்தரங்கரை அருகே சென்றபோது சாலையில் எதிரே வந்த மற்றொரு கார் மீது இந்த கார் மோதியது. இந்த கோர விபத்தில் 2 கார்களிலும் பயணித்த 8 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து, காயமடைந்தவர்களை அப்பகுதியை சேர்ந்தவர்கள் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பி வைத்தனர். இந்த விபத்து குறித்து தகவலறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று […]

பஸ்-ஆட்டோ நேருக்கு நேர் மோதல்… 3 பேர் பலி

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சல் தாழமேல் கிராமத்தை சேர்ந்தவர் அக்ஷய் (23). ஆட்டோ டிரைவர். இவரது ஆட்டோவில் கவரலூர் பள்ளிவடக்கம் பகுதியை சேர்ந்த சுனில் பினி-நீலம்மாள் தம்பதியின் மகளான 10-ம் வகுப்பு மாணவி ஸ்ருதி லட்சுமி (16) மற்றும் ஜோதிலட்சுமி(21) ஆகிய இருவரும் பணயம் செய்தனர். அவர்கள் அஞ்சல் பகுதியில் இருந்து கரவலூருக்கு வந்து கொண்டிருந்தனர். அவர்களது ஆட்டோ மாவிலா கோவில் பகுதியில் வந்தபோது, அந்த வழியாக எதிரே அய்யப்ப பக்தர்கள் குழுவை அழைத்துவந்த சுற்றுலா […]

ஆட்டோ மீது லாரி மோதி விபத்து…6 பேர் பலி…

பீகார் மாநிலம் ஷேக்புரா மாவட்டம் ஷிவாரா நகரில் இருந்து ஷேக்புராவுக்கு இன்று மதியம் ஆட்டோவில் 12 பேர் பயணித்தனர். ஷேக்புரா – சிகந்தரா நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்தபோது சாலையில் எதிரே வந்த லாரியும், ஆட்டோவும் நேருக்கு நேர் மோதியது. இந்த கோர விபத்தில் ஆட்டோவில் பயணம் செய்த 6 பேர் உடல் நசுங்கி உயிரிழந்தனர். மேலும், 6 பேர் படுகாயமடைந்தனர்.இதையடுத்து, அந்த பகுதியை சேர்ந்த கிராம மக்கள் படுகாயமடைந்தவர்களை மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்த விபத்து […]