திமுகவைப் போல வெற்றி பெறலாம் என சில அறிவிலிகள் பகல் கனவு காண்கின்றனர்.. முதல்வர் பேச்சு

சென்னை :  வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ‘திமுக – 75 அறிவுத் திருவிழா’வில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் உரையாற்றினார். திமுகவின் 75 ஆண்டு பயணத்தை நினைவுகூரும் இவ்விழாவுக்கு ‘அறிவுத் திருவிழா’ என்று பெயர் சூட்டியதை பெரிதும் பாராட்டிய அவர், இப்பெயரை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வைத்ததாகவும், அது மிகவும் பொருத்தமானது என்றும் தெரிவித்தார். அறிவை மையப்படுத்தி அறிவொளியை பரப்புவதே திமுகவின் தலையாய கடமை என்று முதல்வர் வலியுறுத்தினார். திமுகவைத் தொடங்கியவர் அண்ணா, கட்சியைக் கட்டிக் […]