பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம்….பெண்ணிடம் ரூ.19.84 லட்சம் மோசடி
விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் தாலுகா பெலாக்குப்பம் கிராமத்தை சேர்ந்த 28 வயது பெண்ணிடம் அடையாளம் தெரியாத நபர் வாட்ஸ்-அப் மூலம் தொடர்பு கொண்டு ஒரு வாட்ஸ்-அப் குழுவில் இணைத்துள்ளார். பின்னர் அந்த பெண்ணிடம் சிறிய தொகையை பங்குச்சந்தையில் முதலீடு செய்தால் அதிக லாபம் தருவதாக அந்த நபர் கூறியுள்ளார். தினமும் பங்குச்சந்தை நிலவரங்களையும், எந்த பங்குச்சந்தையில் பணத்தை முதலீடு செய்தால் அதிக லாபம் பெறலாம் என்றும் அந்த வாட்ஸ்-அப் குழுவில் அனுப்பியுள்ளார். இதை உண்மையென நம்பிய அப்பெண், […]