சென்னையில் 11 விமானங்கள் ரத்து.. பயணிகள் அவதி

டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் நிலவும் கடும் பனிமூட்டத்தால் சென்னையில் 11 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி சென்னையில் இருந்து டெல்லி, ஜெய்ப்பூர், கொல்கத்தா செல்லும் 4 விமானங்கள் ரத்து செய்யப்பட்டதுடன், டெல்லி, பாட்னா உள்ளிட்ட இடங்களில் இருந்து சென்னைக்கு வரவேண்டிய 7 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.விமானங்கள் ரத்து செய்யப்பட்டதால் பயணிகள் பரிதவிப்புக்கு ஆளானார்கள். எனினும், விமானங்கள் ரத்து குறித்து பயணிகளுக்கு முன் கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு விட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

இண்டிகோ விமான சேவை பாதிப்பு- சென்னை ஏர்போட்டில் பயணிகள் அவதி

சென்னை சர்வதேச விமான நிலையத்தில் இருந்து இயக்கப்பட வேண்டிய இண்டிகோ விமானங்களில் சுமார் 31 விமானங்கள் இன்று ரத்து செய்யப்பட்டுள்ளன. விமானி மற்றும் பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக இந்த ரத்து தொடர்வதாகத் தெரிகிறது. விளைவு: விமான சேவை பாதிக்கப்பட்டதால், வெளிநாடுகளுக்குச் செல்லவிருந்த பயணிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பல பயணிகள் மற்ற விமானங்களில் அதிக கட்டணம் கொடுத்து டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பயணிகள் ஆவேசம்: அதிகக் கட்டணம் காரணமாக, சென்னை – கோயம்புத்தூர் போன்ற […]