பள்ளிகளிலும் மொபைலுக்கு நோ! 15 வயது வரை சோஷியல் மீடியா கிடையாது – பிரான்ஸ் அரசின் அதிரடி சட்டம்

உலக அளவில் சிறுவர்கள் ஸ்மார்ட்போன் மற்றும் சமூக வலைதளங்களுக்கு அடிமையாகி வருவதால், அவர்களின் மனநலன் மற்றும் உடல்நலம் கடுமையாகப் பாதிக்கப்படுவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதனைத் தடுக்கும் நோக்கில், பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் தலைமையிலான அரசு ஒரு புரட்சிகரமான சட்டத்தைக் கொண்டு வந்துள்ளது. இந்த புதிய சட்டத்தின்படி, 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் பேஸ்புக், இன்ஸ்டாகிராம், டிக்டாக் போன்ற சமூக வலைதளங்களைப் பயன்படுத்தத் தடை விதிக்கப்படுகிறது. இந்த மசோதா தற்போது செனட் சபையின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. செனட் […]

​கமல்ஹாசன் பெயர், புகைப்படங்களை வணிக ரீதியில் பயன்படுத்த அதிரடித் தடை – சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

கமல்ஹாசனின் பெயர், புகைப்படம், பட்டங்கள் மற்றும் அவரது புகழ்பெற்ற வசனங்களை அவரது அனுமதியின்றி வணிக ரீதியாகப் பயன்படுத்த சென்னை உயர்நீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளது. சென்னையைச் சேர்ந்த ‘நீயே விடை’ என்ற நிறுவனம், கமல்ஹாசனின் புகைப்படம், ‘உலகநாயகன்’ என்ற பட்டம் மற்றும் அவரது சினிமா வசனங்களை அச்சிட்டு டி-ஷர்ட்கள் மற்றும் சட்டைகளை விற்பனை செய்து வந்தது. தனது அனுமதியின்றி இவற்றை வணிக ரீதியாகப் பயன்படுத்துவது தனது தனி உரிமையைப் பாதிப்பதாகக் கூறி நடிகர் கமல்ஹாசன் சென்னை உயர்நீதிமன்றத்தில் […]

ஆஸி-யில் சமூக வலைதளங்கள் பயன்படுத்த தடை ..

ஆஸ்திரேலிய அரசு உலகின் முதல் நாடாக, 16 வயதுக்குக் கீழ் உள்ள சிறார்களுக்கு சமூக வலைதளங்களைப் பயன்படுத்த தடை விதித்துள்ளது. இந்த சட்டம் இன்று (டிசம்பர் 10) அதிகாரப்பூர்வமாக அமலுக்கு வந்துள்ளது. இதன் நோக்கம், சிறார்களின் மனநலனைப் பாதுகாக்கவும், சமூக வலைதளங்களின் ஆபத்துகளான சைபர் புருலிங், போலி தகவல்கள், போதைப்பொருள், பாலியல் துன்புறுத்தல் போன்றவற்றிலிருந்து குழந்தைகளைப் பாதுகாக்கவும். அரசு இதை “குழந்தைகளுக்கு அவர்களின் குழந்தைப் பருவத்தைத் திரும்ப அளிப்பது” என்று விவரித்துள்ளது. இந்தத் தடை, டிக்டாக், இன்ஸ்டாகிராம், […]

இனி இளையராஜா படங்களை பயன்படுத்தக் கூடாது… கோர்ட் அதிரடி

இசையமைப்பாளர் இளையராஜா, சமூக வலைதளங்களில் தனது புகைப்படம், பெயர், “இசைஞானி” என்ற பட்டம், குரல் போன்றவற்றை தன்னை அடையாளப்படுத்தும் வகையில் பயன்படுத்துவதைத் தடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நவம்பர் 21, 2025 அன்று நீதிபதி ச.ம.சுப்ரமணியன் அவரது மனுவை விசாரித்து, யூடியூப் சேனல்கள், சோனி மியூசிக், சபாஸ், ஸ்பாடிஃபை, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) போன்ற சமூக வலைதளங்களுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இளையராஜாவின் வழக்கறிஞர் அரவிந்த் பாண்டே, […]