மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மதுரைக்கு வருகை தர உள்ளார். மதுரை அலங்காநல்லூரில நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டியை முதல்-அமைச்சர் தொடங்கி வைத்து பார்வையிடுகிறார். இதனையொட்டி பாதுகாப்பு காரணங்களுக்காக மதுரையில் இன்று டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. இதன்படி மதுரை விமான நிலையம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் டிரோன்கள் பறக்க தடை விதித்து மதுரை மாவட்ட கலெக்டர் உத்தரவிட்டுள்ளார்.
2 நாட்கள் டிரோன்கள் பறக்க தடை
கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று வருகை தர உள்ளார். புதிய ஆட்சியர் அலுவலகம் திறப்பு உட்பட, அரசு நிகழ்ச்சிகளில் முதலமைச்சர் கலந்துகொள்ள உள்ளார்.இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வருகையை முன்னிட்டு, கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 2 நாட்களுக்கு டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. இன்றும், நாளையும் டிரோன்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.