சென்னை-ராமேஷ்வரம் சென்ற பஸ்-லாரியில் மோதி விபத்து-7 பேர் காயம்

சென்னையில் இருந்து ராமேஸ்வரம் நோக்கி 41 பயணிகளை ஏற்றிகொண்டு சென்ற தனியார் ஆம்னி பேருந்து புதுக்கோட்டை அடுத்த சத்தியமங்கலம் மேலூர் அருகே சென்ற போது எம்.சாண்ட் ஏற்றிக்கொண்டு முன்னே சென்ற டிப்பர் லாரியை முந்த முயன்ற போது விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் பேருந்தின் ஒருபகுதி முழுமையாக சேதமடைந்த நிலையில் பேருந்தில் பயணித்த 7 பேர் காயமடைந்தனர். இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வெள்ளனூர் காவல்துறையினர் மற்றும் […]

புதுகை- பஸ்சில் இருந்து ரூ.4.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்

புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி ஆவுடையார்கோவில் மீமிசல் வழியாக தொண்டி சென்ற தனியார் பஸ்சில் உயர் ரக போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதாக தொண்டியை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சுங்கத்துறை இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் தொண்டி அதிகாரிகள், நேற்று மதியம் எஸ்.பி.பட்டினத்தை அடுத்த கலியநகரி கிராமத்தின் அருகே சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் இருந்து தொண்டி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ்சை மறித்தும் சோதனை செய்தனர். அந்த பஸ்சில் பயணிகள் உடைமைகள் […]