எம்பி துரை வைகோ ஏற்பாடு- சவுதியில் இறந்த புதுகை வாலிபர் உடல் தமிழகம் வந்தது
திருச்சி நாடாளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையை சேர்ந்த அயலகத்தில் வேலை செய்து வந்த தேவராஜ் வேலு அங்கே திடீரென மரணமடைந்தார். இதுகுறித்து திருச்சி எம்பி மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோவிடம் கோரிக்கை வைத்தனர். இதையடுத்து அவரது குடும்பத்தினர் கேட்டுக்கொண்டதன் பேரில், அவரது உடலை தாயகம் கொண்டு வர உதவுவதற்காக உடனடியாக வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரின் அலுவலகத்தை தொடர்பு கொண்டு நடவடிக்கை எடுக்குமாறு கேட்டுக்கொண்டார். அதன் தொடர்ச்சியாக ரியாத்தில் உள்ள இந்திய தூதரகம் 11.02.2026 […]
புதுகையில் அனைத்து தொழிற்சங்கத்தினர் பொது வேலைநிறுத்த மறியல்
புதுக்கோட்டையில் தலைமை தபால் நிலையம் முன்பு ஒன்றிய பா.ஜ.க.மோடி அரசின் நாசகாரதொழிலாளர் விரோத விவசாயிகள் விரோத சட்டங்களை முறியடிப்போம் என முழக்கமிட்டுதொ.மு.ச., சில.டி.யூ,ஏ.ஐ.டி.யூ.சி,ஏ.ஐ.சி.சி.யூ.,எஸ்.கே.எம் ஆகிய தொழிற்சங்ககூட்டமைப்பின்சார்பில் மறியல் போராட்டம் நடைபெற்றது. சாலையில் அமர்ந்து நடைபெற்ற மறியல்போராட்டத்திற்கு மத்திய தொழிற்சங்க ஒருங்கிணைப்பாளர்அ.ரெத்தினம் (தொ.மு.ச. ), மாவட்ட ஒருங்கிணைப்பாளர் த.செல்வராஜ் (எஸ்.கே.எம்) ஆகியோர் தலைமை வகித்தனர். மறியல் போராட்டத்தில் கந்தர்வகோட்டை சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னத்துரை சிறப்புரையாற்றினார். மறியல் போராட்டத்தில் ஏ.ஸ்ரீதர் ,முகமதலிசின்னா, (சி.ஐ.டி.யூ,) ப.ஜீவானந்தம் (ஏ.ஐ.டி.யூ.சி), கந்தசாமி (தொ.மு.ச.,) உள்ளிட்ட […]
புதுகை அருகே வேன் கவிழ்ந்து விபத்து… 3 குழந்தைகள் உள்பட 22 பேர் படுகாயம்
புதுக்கோட்டை அருகே வேன் தலைகுப்புற கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 3குழந்தைகள் உள்ளிட்ட 22 பேர் படுகாயம் அடைந்தனர்.சென்னை காஞ்சிபுரத்தை சேர்ந்த 22 பேர், நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு காரைக்குடி செல்வதற்காக நேற்று காலை சுற்றுலா வேனில் புறப்பட்டனர். இந்த வேனை காஞ்சிபுரத்தை சேர்ந்த தினேஷ் என்பவர் ஓட்டினார். தஞ்சாவூர்- புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை தேசிய நெடுஞ்சாலையில் அரியாணிப்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே பிற்பகல் 12 மணியளவில் சென்ற போது டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த வேன் சாலை ஓர பள்ளத்தில் […]
புதுகை- பள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு
புதுக்கோட்டை மாவட்டம் , பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைபள்ளியில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வு நடத்தப்பட்டது. புதுக்கோட்டை மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர் சண்முகம் வழிகாட்டுதலில்படி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் வசந்தகுமார் ஆலோசனையின்படி தமிழ்நாடு மது விலக்கு ஆயத்தீர்வுத்துறை மற்றும் புதுக்கோட்டை ரூரல் டெவலப்மென்ட் ஆர்கனைசேஷன் (RDO) தொண்டு நிறுவனம் மூலமாக பொன்னமராவதி வலம்புரி வடுகநாதன் மேல்நிலைபள்ளியில் நடைபெற்ற போதைப்பொருள் தடுப்பு விழிப்புணர்வுக்கு அப்பள்ளி தலைமையாசிரியர் கணேசன் தலைமை வகித்தார்.ஆடிஒ தொண்டு நிறுவன திட்ட இயக்குனர் குழந்தைவேலு முன்னிலை வகித்தார். உதவி […]
புதுகையில் நகர்புற நலவாழ்வு மையம் திறப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் தலைமைச் செயலகத்தில் இன்று காணொளி காட்சி வாயிலாக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் ரூ4,778.75 கோடி செலவிலான 183 முடிவுற்ற திட்டப்பணிகளை திறந்து வைத்து 10 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார் . அதனைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தேர்வு நிலைப்பேரூராட்சி அமரகண்டான் வடகரையில் ரூ1.20கோடி மதிப்பீட்டில் புதிதாக கட்டப்பட்டுள்ள நகர்புற நல்வாழ்வு மையத்தினை திறந்து வைத்த நிகழ்ச்சியில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு கர்ப்பிணி பெண்களுக்கு ஊட்டச்சத்து […]
புதுகையில் தேமுதிக சார்பில் பேரறிஞர் அண்ணாவுக்கு மரியாதை
சுப்பிரமணியபுரத்தில் தேமுதிக சார்பில் பேரறிஞர் அண்ணாவுக்கு நினைவஞ்சலி. புதுக்கோட்டை பிப் 04-தேசிய முற்போக்கு திராவிட கழக பொதுச் செயலாளர் ஆணைக்கிணங்க பேரறிஞர் அண்ணாவின் 57 வது நினைவு நாளையொட்டி அறந்தாங்கி தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட சுப்பிரமணியபுரத்தில் புதுக்கோட்டை தெற்குமாவட்ட செயலாளர் ஏ.சசிகுமார் தலைமையில் அறந்தாங்கி தெற்கு ஒன்றிய செயலாளர் பெரி.கலைஞர் அறந்தாங்கி தொகுதி பொறுப்பாளர் மாவட்ட அவைத் தலைவர் ஆவுடையார் கோவில் வி. மணிமுத்து , ஆலங்குடி தொகுதி பொறுப்பாளர் பழ.நேதாஜி சீனிவாசன், மணமேல்குடி ஒன்றிய செயலாளர் ஏ. […]
புதுகை- அண்ணாவின் திருவுருவ சிலைக்கு திமுகவினர் மரியாதை
புதுக்கோட்டையில் பேரறிஞர் அண்ணா அவர்களின் 57வது நினைவு தினத்தையொட்டிமாவட்ட திமுக அலுவலகம் பெரியண்ணன் மாளிகையில் இருந்து வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் தலைமையில் திமுகவினர் அமைதி ஊர்வலமாக புறப்பட்டு வந்து பேரறிஞர் அண்ணா அவர்களின் திருவுருவச் சிலைக்கு வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன் மாலைஅணிவித்து மரியாதை செலுத்தினர் நிகழ்ச்சியில் வடக்கு மாவட்ட திமுக அவைத்தலைவர் அரு.வீரமணி, மேயர் திலகவதிசெந்தில் ,முன்னாள் எம்.எல்.ஏக்கள் கவிதைப்பித்தன், கார்த்திக் தொண்டைமான் , சட்டமன்ற உறுப்பினர்வை.முத்துராஜா, துணைமேயர் லியாகத்தலி, மற்றும் […]
புதுகை- ஸ்ரீ தண்டாயுதபாணி கோவில் தைப்பூச சிறப்பு வழிபாடு
புதுக்கோட்டை நகரில் மேல ராஜவீதி தெற்கு நான்காம் வீதி சந்திப்பில் அருள் பாலித்துவரும் அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் தைப்பூச திருவிழா வெகு சிறப்பாக நடைபெற்றது ஆலயத்தில் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கு திருநீர் பால் தயிர் தேன் பஞ்சாமிர்தம் மஞ்சள் நீர் சந்தனம் உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடைபெற்று, சிறப்பு அலங்காரத்தில் மகா தீபாரதனை வெகு சிறப்பாக நடைபெற்றது. ஆலயத்தில் உற்சவர் ஸ்ரீ தண்டாயுதபாணி சுவாமிக்கும் சிறப்பு அலங்காரம் மகா தீபாரதனை நடைபெற்றது. முன்னதாக பக்தர்கள் […]
புதுகை திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்.
புதுக்கோட்டையில் திராவிடர் மாணவர் கழகம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம். புதுக்கோட்டை மாவட்ட திராவிடர் மாணவர் கழகம் சார்பில் பாராமெடிக்கல்படிப்புகளிலும் நீட்தேர்வை திணிக்கும் ஒன்றிய அரசைக் கண்டித்து புதுக்கோட்டை அண்ணா சிலை அருகில் கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட தலைவர் நே.குட்டிவீரமணி தலைமையில் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்தில் தலைமைக் கழகப் பேச்சாளர் மாங்காடு மணியரசன், திராவிடர் கழக மாவட்ட தலைவர் அறிவொளி,துணைத்தலைவர் எஸ்.கண்ணன் மற்றும் அரசுஇளங்கோ, வீரப்பன் உள்ளிட்ட பலர் கண்டன உரையாற்றினார்.
புதுகையில் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வுத் தேர்வு
புதுக்கோட்டை அரசுப்பள்ளிகளில் 10-ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு முதலமைச்சர் திறனாய்வு தேர்வு நடத்தப்பட்டு அதில் தேர்வு செய்யப்படும் மாணவர்களுக்கு பதினொன்றாம் வகுப்பு பயிலும்போது மாதந்தோறும் ரூ ஆயிரம் வீதம் 10 ஆயிரமும், பன்னிரெண்டாம் வகுப்பு பயிலும்போது மாதந்தோறும் ரூ ஆயிரம் வீதம் 10 ஆயிரமும் ஆக மொத்தம் ரூ 20 ஆயிரம் கல்வி உதவித்தொகையாக அரசால் வழங்கப்படுகிறது. அந்த முறையில் இந்த ஆண்டு புதுக்கோட்டை மாவட்டத்தில் சனிக்கிழமை நடைபெற்ற தேர்விற்கு 5574 மாணவர்கள் […]
புதுகை முனீஸ்வரர் ஆலய ஜல்லிக்கட்டு போட்டி துவக்கம்
புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதி, தெற்கு ஒன்றியத்திற்குட்பட்ட காட்டுப்பட்டியில் நடைபெற்ற முனீஸ்வரர் ஆலய ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. புதுக்கோட்டை வடக்கு மாவட்ட கழக செயலாளர கே கே செல்லபாண்டியன் ,புதுக்கோட்டை எம்எல்ஏ. வை. முத்துராஜா ஆகியோர்கள் துவக்கி வைத்தனர், பின்னர் சிறந்த காளைகளுக்கும், வீரர்களுக்கும் பரிசு வழங்கினர். நிகழ்வில் அரசு அதிகாரிகள், திமுக நிர்வாகிகள், விழா குழுவினர் மாடுபிடி வீரர்களும், பார்வையாளர்களும், கலந்துகொண்டனர்.
புதுகை- பெண் போலீஸ் வீட்டில் 30 பவுன் தங்க நகைகள் கொள்ளை
.புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் காவல்நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிபவர் அபர்ணா ,இவரது கணவர் கலை ராஜன் இவர்பு புதுக்கோட்டையில் கம்யூட்டர் சென்டர் வைத்துள்ளார். இவர்களது வீடு புதுக்கோட்டை கம்பன் நகர் பகுதியில் உள்ளது.இருவரும் நேற்று பணிக்கு சென்று விட்டனர். வீட்டில் கலைராஜன் தாயார் தமிழ்செல்வி வயது 65, இவர் மட்டும் இருந்துள்ளார். இவர் வீட்டின் பின்புறம் வேலைபார்த்துக்கொண்டு இருந்துள்ளார்.அப்போது வீட்டினுள் சத்தம் கேட்டுள்ளது.அதனைத்தொடர்ந்து வீட்டினுள் தமிழ்செல்வி பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு கிடந்தது அதிர்ச்சி அடைந்தார். உடனடியாக மகன், […]
புதுகையில் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட கலெக்டர்
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுநகர் ஊராட்சியில் குடியரசு தினத்தை யொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்பா. ஜெயசுதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
புதுகையில் தேசிய கொடியை ஏற்றி கலெக்டர் மரியாதை
புதுக்கோட்டை சேமப்படைமைதானத்தில் இன்று நடைபெற்ற குடியரசு தினவிழாவில்மாவட்ட ஆட்சியர் மு.அருணா தேசியக் கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தினார்கள்.உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
புதுகை- சத்துணவு ஊழியர்கள் 700 பேருக்கு மேல் கைது
தமிழ்நாடு சத்துணவு ஊழியர்கள் சங்கத்தின் சார்பில் மாநிலம் தழுவிய அளவில் மாவட்டத் தலைநகரங்களில் இன்று சாலை மறியல் ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத் தலைநகரான புதுக்கோட்டை பழைய பேருந்து நிலையம் அருகே இச்சங்கத்தின் மாவட்ட தலைவர் பாஸ்கர் தலைமையில் மாவட்ட செயலாளர் ராஜகோபாலன் மாவட்ட பொருளாளர் பிச்சை முத்து, மாநில மேனாள் பொதுச்செயலாளர் மலர்விழி ஆகியோர் முன்னிலையில் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அரசாங்க ஊழியர்களாக பணி புரியும் மற்ற ஊழியர்களுக்கு வழங்கப்படுவது போல் […]
புதுகையில் புதிய மின்மாற்றி… எம்எல்ஏ துவக்கி வைத்தார்
புதுக்கோட்டை மாநகரம் 39வது வட்டம் அரிமழம் சாலை அந்தோணியார் கோவில் அருகில் அமைக்கப்பட்டுள்ள புதிய மின்மாற்றினை மக்களின்பயன்பாட்டிற்காக சட்டமன்ற உறுப்பினர் வை. முத்துராஜா துவக்கி வைத்தார். நிகழ்வில் மாநகர உறுப்பினர்கள் ராஜேஸ்வரி, பால்ராஜ். மாநகர திமுக அமைப்பாளர் ராஜேஸ், வட்ட திமுக செயலாளர் அண்ணாதுரை ,இளைஞர் அணி கருணாநிதி, தெய்வானை மற்றும் பகுதி மக்கள் பலர் பங்கேற்றனர்.
புதுகை.. மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பா.சூரியபிரபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
புதுகை-புதிய தார்சாலை அமைக்கும் பணி-அமைச்சர்கள் அடிக்கல்
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டத்திக்காடு மற்றும்கரு.வடதெரு பகுதிகளில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் புதுக்கோட்டை நெடுஞ்சாலை (நபார்டு )கிராம சாலைகள் மூலம் புதிதாக அமைக்கப்படவுள்ள தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், ஆகியோர் அடிக்கல் நாட்டினர். உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மற்றும் த.சந்திரசேகரன்,தல.பாஞ்சாலன்,மு.க.ராமகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் உள்ளனர்.
புதுகை-சமத்துவ பொங்கல் விழா நடத்த கோரி இந்திய மாணவர் சங்கம் போராட்டம்
வழக்கம் போல இந்த ஆண்டும் புதுக்கோட்டை அரசு மாமன்னர் கல்லூரியில் சமத்துவப் பொங்கல் விழா நடத்த வேண்டுமென வலியுறுத்தி இந்திய மாணவர் சங்கத்தினர் திங்கள்கிழமை கல்லூரி முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாட்சிமை தங்கிய அரசு மன்னர் கல்லூரில் அனைத்துத் துறைகளின் சார்பிலும் தனித்தனியாக சமத்துவப் பொங்கல் விழா நடத்துவது வழக்கம். ஆனால், கல்லூரி நிர்வாகம் இந்த ஆண்டு பெங்கல் விழா நடத்துவதற்கு மறுப்புத் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனைத் தொடர்ந்து இந்திய மாணவர் சங்கத்தின் சார்பில் சமத்துவப் […]
புதுகை- கல்லூரி மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கிய அமைச்சர் ரகுபதி
புதுக்கோட்டை மாவட்டம், திருமயம் அரசு கலை அறிவியல் கல்லூரியில் இலவச லேப்டாப் வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு கல்லூரி முதல்வர் மோகனசுந்தரம். தலைமை வகித்தார். விழாவில் மாநில இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி கலந்து கொண்டு “உலகம் உங்கள் கையில்” திட்டத்தின் கீழ் திருமயம் அரசினர் கலைக் கல்லூரி மாணவர்கள் 195 பேருக்கும், மேலைச்சிவல்புரி கணேசர் அரசு உதவி பெறும் கல்லூரி மாணவர்கள் 186 பேருக்கும் அரசின் விலையில்லா லேப்டாப்களை வழங்கிப்பேசினார். விழாவில் ஊரக வளர்ச்சி […]
புதுகை-தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டு.. 71 பேர் காயம்
புதுக்கோட்டை, தச்சங்குறிச்சி ஜல்லிக்கட்டில் மாடுபிடி வீரர்கள், காளை உரிமையாளர்கள் உள்பட 71 பேர் காயம் அடைந்துள்ளனர். காயமடைந்த 71 பேரில் 15 பேர் மேல் சிகிச்சைக்காக தஞ்சை அரசு மருத்துவக் கல்லூரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
புதுகையில் திருநங்கைகளுக்கான சிறப்பு குறைதீர் முகாம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறைசார்பில் திருநங்கை களுக்கான சிறப்பு குறைதீர்க்கும் முகாம் ஆட்சியர் மு.அருணாதலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன்,தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) கே.முத்துச்சாமி, மாவட்ட சமூக நல அலுவலர் மே.சியாமளா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
குளத்தில் மூழ்கி 2 சிறுமிகள் பலி.. புதுகை அருகே சோகம்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகேயுள்ள கப்பத்தான்பட்டிகிராமத்தில் உள்ளகுளத்தில் குளிக்கச்சென்ற 2 சிறுமிகள் நீரில் மூழ்கிபலி…புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் தாலுகாலேணாவிளக்கை அடுத்த கப்பத்தான்பட்டி கிராமத்தைச் சேர்ந்த சுந்தர்ராஜ் மகள் பாண்டிச்செல்வி(14) 9 வது படிக்கிறார்.அதே ஊரைச் சேர்ந்த சேகர் மகள் கனிஷ்கா(13). 8 வது படிக்கிறார் .இருவரும்கிராமத்தில்உள்ள வண்ணியன் கண்மாயில் குளித்த போது நீரில் மூழ்கி பரிதாபமாக இறந்து போனார்கள். சம்பவம் தொடர்பாக நமணசமுத்திரம் போலீஸார் வழக்குபதிவு செய்து பிரேதத்தைகைப்பற்றிவிசாராணை நடத்திவருகின்றனர்.
வாகன ஓட்டிகளுக்கு திமுக சார்பில் விழிப்புணர்வு பேரணி
புதுக்கோட்டை மாவட்டம் அன்னவாசல் ஒன்றியம் எண்ணை ஊராட்சி மேலப்பட்டி பகுதியில்கழக இளைஞரணிச் செயலாளரும் தமிழ்நாடு துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளினை முன்னிட்டு, அன்னவாசல் தெற்கு ஒன்றிய திமுக சார்பில் நடைபெற்ற, வாகன ஓட்டிகளுக்கு தலைக்கவசம் வழங்கும் விழா மற்றும் இருசக்கர வாகன விழிப்புணர்வு பேரணியை தமிழ்நாடு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி துவக்கி வைத்தார். இதில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி , பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ. வீ. மெய்யநாதன் […]
மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுக்களை பெற்ற கலெக்டர்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில்ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், தனித் துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம் ) கே.முத்துச்சாமி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் ப.புவனா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
புதுகையில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
புதுக்கோட்டை மாவட்ட கிறிஸ்துவ நல்லிணக்க பேரவை சார்பாக நடத்தப்பட்ட சமத்துவ கிறிஸ்துமஸ் விழா நடந்தது. முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கவிச்சுடர் கவிதைப்பித்தன் ஏற்பாட்டில் நடத்தப்பட்டது. விழாவில் அனைத்து சமுதாய மத குருமார்களும் கலந்துகொண்டு கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடும் விதமாக பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கினர். இந்நிகழ்வில் இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ். ரகுபதி தலைமை வகித்தார். வடக்கு மாவட்ட கழக செயலாளர்கேகே. செல்லபாண்டியன் முன்னிலை வகித்தார், இந்த நிகழ்வில் மாநகர மேயர் திருமதி. திலகவதி செந்தில்,மாநகர […]
புதுகையில் போதைப்பொருட்களால் ஏற்படும் தீய விளைவு குறித்து விழிப்பணர்வு
புதுக்கோட்டை மாநகராட்சி பழைய பேருந்து நிலையத்தில் மாவட்ட நிர்வாகம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை ஆகியவை சார்பில் மதுப்பழக்கம் மற்றும் போதைப் பொருட்கள்ஆகியவற்றால் ஏற்படும் தீய விளைவுகள் குறித்து மாவட்ட அளவிலான விழிப்புணர்வு பேரணியினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து துவக்கி வைத்தார். இதனை தொடர்ந்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களை வழங்கினார். உடன் உதவி கலால் ஆணையர் திருமால், மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
புதுகை- பள்ளி மாணவர்களுக்கான ரோபோடிக் ஆய்வகம் திறப்பு
புதுக்கோட்டை மச்சுவாடியில் அமைந்துள்ள அரசு முன்மாதிரி மேல்நிலைப் பள்ளியில் இயந்திரவியல் ஆய்வகமானது (Robotic)துவங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித் துறையின் சார்பில் 6 முதல் 9 வகுப்பு வரை பயிலும் மாணவர்களின் செயல்முறை அடிப்படையிலான கற்றலின் மூலம் அறிவியல் தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் சார்ந்த கருத்துக்களை வலுப்படுத்தவும் பிரச்சனைகளைத் தீர்க்கும் திறனை வளர்க்கவும் குழுவாக இணைந்து செயல்படக்கூடிய திறனை கற்றுக் கொள்ளவும் படைப்பாற்றலை ஊக்குவிக்கவும் இந்த ஆய்வகமானது ஏற்படுத்தப்பட்டுள்ளது.இதன்படி சென்னை, கோவை ,சேலம் மற்றும் புதுக்கோட்டை […]
புதுகை- ரூ.3000 லஞ்சம் வாங்கிய ஊராட்சி தலைவர் கைது
புதுக்கோட்டை மாவட்டம், கறம்பக்குடி அருகே உள்ள ஒரு ஊராட்சியைச் சேர்ந்தவர் . இதே பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் தனது வீட்டு மனையை வரன்முறைப்படுத்துவதற்காக ஊராட்சி அலுவலகத்தை அணுகியுள்ளார். லஞ்சக் கோரிக்கை: அந்தச் சான்றிதழை வழங்குவதற்கு ஊராட்சி தலைவர் ரூ.3,000 லஞ்சமாக தர வேண்டும் என வற்புறுத்தியதாகக் கூறப்படுகிறது. லஞ்சம் கொடுக்க விரும்பாத அந்த நபர், இது குறித்து புதுக்கோட்டை மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் அளித்தார். இப்புகாரை பெற்றுக்கொண்ட போலீசார், ஊராட்சி தலைவரைப் பிடிக்கத் […]
புதுகையில் நூலகத்தில் புரவலராக இணைத்துகொண்ட ஓய்வு அதிகாரி..
புதுக்கோட்டை மாவட்ட மைய நூலகத்தில் தமிழ்நாடு மின்சார வாரிய உதவி செயற்பொறியாளர் (ஓய்வு) பா. இளவரசன் புதுக்கோட்டை மாவட்டம் மைய நூலகத்தில் ரூ 5ஆயிரம் செலுத்தி பெரும் புரவலராக இணைத்துக்கொண்டார். அதற்கான ரசீதை உடன் மாவட்ட மைய மூன்றாம்நிலை நூலகர் எஸ். கண்ணன் வழங்கினார். உடன் மூன்றாம் நிலை நூலகர் குமுதா,எஸ் ஆர். அரங்கநாதன் நூலக நிர்வாகி கோ. சாமிநாதன் உள்ளனர்.
புதுகை- BSNL கேபிள் காப்பர் வயர் திருடிய 6 பேர் கைது..
புதுக்கோட்டை நகர காவல் நிலையத்துக்கு உட்பட்ட மேல ராஜா வீதியில் பி.எஸ்.என்.எல் அலுவலகத்திற்கு முன்பாக பூமிக்கு அடியில் புதைத்திருக்கும் கேபிள் காப்பர் வயர்களை பிஎஸ்என்எல் பணியாளர்கள் போல் பணி செய்து, அதை தோண்டி பழுது பார்ப்பது போல் அதில் உள்ள காப்பர் வயர்களை திருடுவதை வழக்கமாகக் கொண்ட தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த இராமியம்பட்டி கிராமத்தை சேர்ந்த பிரகாசம் மகன் சூர்யா மற்றும் காத்தவராயன் மகன் செல்லதுரை குப்புசாமி மகன் மணிகண்டன் பிரகாஷ் மகன் மகேந்திரன் சேட்டு மகன் […]
நடமாடும் இலவச மருத்துவ முகாம்.. அமைச்சர் ரகுபதி துவங்கி வைத்தார்
புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் சட்டமன்ற தொகுதியில் திமுக சார்பில் நடமாடும் இலவச மருத்துவ முகாம் நடத்த வந்துள்ள மருத்துவ சேவை பிரச்சார வாகனத்தை தெற்கு மாவட்ட திமுக. செயலாளரும், இயற்கை வளங்கள்துறை அமைச்சருமான எஸ். ரகுபதி தொடங்கி வைத்தார்.உடன் மாநில திமுக. மருத்துவர் அணி இணைச் செயலாளர் டாக்டர் அண்ணாமலை ரகுபதி உள்ளார்.
புதுகை-திருப்புனவாசல் சிவன் கோவிலில் திருவிளக்கு வழிபாடு
புதுக்கோட்டை மாவட்டம் ஆவுடையார்கோவில் தாலுகா திருப்புனவாசல் அருள்மிகு பெரிய நாயகி உடனுறை அருள்தரும் பழம்பதிநாதர் எனும் விருத்தபுரீஸ்வரர் ஆலயத்தில் உலக நலன் வேண்டியும், ஒவ்வொருவர் குடும்பமும் உயர்வு பெற வேண்டியும் கூட்டுப் வழிபாடு திருவிளக்கு பூஜை திருவருள் கருணையால் சிறப்பாக நடைபெற்றது, முத்துக்குடா ,புதூர் தீர்த்தாண்டம் ,மீமிசல்,தீயத்தூர் சுற்று வட்டார 600க்கும் மேற்பட்ட அன்பர்கள் கலந்து கொண்டனர்.
அடையாளம் தெரியாத 35 வயது ஆண் சடலம் மீட்பு… புதுகையில் பரபரப்பு
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி தாலுகா அரசமலைகிராமம் எடையன் பாறை அருகில் அடையாளம் தெரியாத ஆண் நபர் ஒருவர் மர்மமான முறையில் இறந்து கிடக்கிறார். வயது சுமார் 35 இருக்கும். விசாரணையில் மேற்படி நபர் அன்னவாசல் பகுதியை சேர்ந்தவர் என தெரிகிறது.இச்சம்பவம் தொடர்பாக காரையூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.
புதுகையில் மரக்கன்றுகளை நட்டு வைத்த அமைச்சர்கள்
புதுக்கோட்டை மாவட்டம்/ மாநகராட்சி 9A நத்தம்பண்னை பகுதியில் நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையின் சார்பில் தமிழ்நாடு நகர்ப்புற வேலைவாய்ப்பு திட்டம் 2025-2026ன்கீழ்புதுக்கோட்டை மாநகராட்சி பகுதிகளில் மேற்கொள்ளப்படவுள்ள பல்வேறு திட்டப்பணிகளைஇயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், ஆகியோர் மரக்கன்றுகளை நட்டு துவக்கி வைத்தனர். உடன் புதுக்கோட்டை மாநகராட்சி மேயர் திலகவதிசெந்தில் , புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா,வடக்கு மாவட்ட திமுக செயலாளர் கே.கே.செல்லபாண்டியன், துணை மேயர் எம்.லியாகத்தலி,ஆணையர் நாராயணன் , […]
புதுகையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில், மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுக் கூட்டம் (DISHA) மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்பு குழுத் தலைவர்/ சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி ப.சிதம்பரம் தலைமையில், மாவட்ட கலெக்டர் மு.அருணா மற்றும் குழு உறுப்பினர்/திருச்சி பாராளுமன்ற உறுப்பினர் துரை வைகோ அவர்கள் ஆகியோர் முன்னிலையில் இன்று (29.11.2025) நடைபெற்றது. உடன், சட்டமன்ற உறுப்பினர்கள் மரு.வை.முத்துராஜா (புதுக்கோட்டை), எம்.சின்னத்துரை (கந்தர்வக்கோட்டை), எஸ்.டி.ராமச்சந்திரன் (அறந்தாங்கி), மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட […]
பாஜ.,அரசை கண்டித்து- புதுகையில் கண்டன ஆர்ப்பாட்டம்
புதுக்கோட்டையில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சார்பில் 29தொழிலாளர் சட்டங்களை4 சட்டதொகுப்பாக மாற்றிய ஒன்றிய பா.ஜக அரசைக் கண்டித்து அண்ணா சிலை அருகில் மாவட்ட கவுன்சில் செயலாளர் கி.கணபதி தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட கவுன்சில் தலைவர் அ.ரெத்தினம், மாவட்ட கவுன்சில் துணைத்தலைவர்பி. சண்முகம், துணைச்செயலாளர்கள் எஸ்.அருள்ஞானசேகரன், எம்.நாகராஜன், போக்குவரத்து தொ.மு.ச.பொதுச்செயலாளர் மு.வேலுச்சாமி ,தலைவர் ஆ.அடைக்கலம், பொருளாளர் சி.கோபாலன் உள்ளிட்ட தொ.மு.ச.வினர்பங்கேற்றனர். புதுக்கோட்டையில் தொழிலாளர் முன்னேற்ற சங்க பேரவை சார்பில் 29தொழிலாளர் சட்டங்களை4 […]
புதுகையில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு பிரசார பேரணி
புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்திலிருந்து தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சார்பில் மழைநீர் சேகரிப்பு விழிப்புணர்வு குறித்த பிரச்சார பேரணி மற்றும் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தின் அதிநவீனமின்னனு வீடியோ வாகனத்தினை ஆட்சியர் மு.அருணா கொடியசைத்து துவக்கிவைத்தார். குடிநீர் பரிசோதனைக்கருவியின் செயல்பாடுகள்குறித்து பார்வையிட்டு கேட்டறிந்தார். உடன் தமிழ்நாடு குடிநீர் வழங்கல் வாரிய நிர்வாகப் பொறியாளர் ஜீவாசங்கர், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா ,உதவிநிர்வாகப்பொறியாளர்கள் ஜெயச்சந்திரன், செல்வி பவித்ரா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.
புதுகை- பஸ்சில் இருந்து ரூ.4.50 கோடி மதிப்புள்ள போதைப்பொருள் பறிமுதல்
புதுக்கோட்டையில் இருந்து அறந்தாங்கி ஆவுடையார்கோவில் மீமிசல் வழியாக தொண்டி சென்ற தனியார் பஸ்சில் உயர் ரக போதைப்பொருள் கடத்தி செல்லப்படுவதாக தொண்டியை சேர்ந்த சுங்கத்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் ராமநாதபுரம் சுங்கத்துறை இணை ஆணையர் பிரகாஷ் மற்றும் தொண்டி அதிகாரிகள், நேற்று மதியம் எஸ்.பி.பட்டினத்தை அடுத்த கலியநகரி கிராமத்தின் அருகே சோதனையில் ஈடுபட்டனர். புதுக்கோட்டையில் இருந்து தொண்டி நோக்கி வந்து கொண்டிருந்த தனியார் பஸ்சை மறித்தும் சோதனை செய்தனர். அந்த பஸ்சில் பயணிகள் உடைமைகள் […]
புதுகையில் வஉசி படத்திற்கு மரியாதை
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதியில் சுதந்திரப் போராட்ட தியாகி. உ. சிதம்பரம் பிள்ளையின்89வது நினைவு தினம் அனுஷ்டிக்கப்பட்டது. அனைத்து வெள்ளாளர் கூட்டமைப்பு சார்பில் காந்தி சிலை அருகில் வ. உ சி. படத்திற்கு மாலை அணிவித்து அவரை நினைவுகூர்ந்து பலரும் பேசினர். ஓய்வுபெற்ற வட்டார வளர்ச்சி அலுவலர் பி. தங்கராஜ் பிள்ளை தலைமை வகித்தார்.
திருச்சி – புதுகை ரோட்டில் இறங்கிய குட்டி விமானம் .. பரபரப்பு
சேலத்திலிருந்து வந்த பயிற்சி விமானத்தில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக புதுக்கோட்டை மாவட்டம், நார்த்தாமலை அருகே சாலையில் பயிற்சி விமானம் தரையிறக்கப்பட்டது. இந்த சிறிய ரக பயிற்சி விமானத்தில் 2 பேர் பயணித்துள்ளனர். விமானத்தின் பாகம் சேதமடைந்ததால், சாதூர்யமாக செயல்பட்டு விமானத்தை தரையிறக்கினார் விமானி. அதிர்ஷ்டவசமாக எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. தரையிறங்கிய சிறிய ரக விமானத்தை பொதுமக்கள் அச்சத்தோடு பார்த்து வருகின்றனர் . மேலும் இந்த விமானம் தரையிறங்கியதால் அப்பகுதியில் எந்த ஒரு விபத்துகளும் ஏற்படாமல் உள்ளது. இதனால் […]