புளியங்குடி அருகே சோகம்: டிராக்டர் கலப்பையில் மோதி கல்லூரி மாணவர் பரிதாப பலி

புளியங்குடி அருகேயுள்ள முள்ளிக்குளம் வடக்குத் தெருவைச் சேர்ந்தவர் சுபாஷ். அரசு விரைவுப் போக்குவரத்துக் கழக ஓட்டுநரான இவருடைய மகன் தருண்குமார் (18). இவர் புளியங்குடியில் உள்ள தனியார் கலை அறிவியல் கல்லூரியில் முதலாமாண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் இரவு 9.30 மணியளவில், தருண்குமார் தனது நண்பர் சூர்யா (18) என்பவருடன் பைக்கில் பெட்ரோல் நிரப்புவதற்காகப் புளியங்குடி-சங்கரன்கோவில் சாலையில் உள்ள பெட்ரோல் பங்கிற்குச் சென்றுள்ளார். பெட்ரோல் நிரப்பிவிட்டு இருவரும் பாம்புகோவில் விலக்கு பகுதியில் திரும்பிக் கொண்டிருந்தனர். சூர்யா […]