திருச்சியில் போதை மாத்திரை வேட்டை: பெண் உட்பட 2 பேர் கைது
திருச்சி பாலக்கரை பகுதியில் சட்டவிரோதமாகப் போதை மாத்திரைகள் விற்கப்படுவதாகப் போலீசாருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில், நேற்று போலீசார் பாலக்கரை பெல்ஸ் கிரௌண்ட் (Bells Ground) பகுதியில் தீவிர சோதனை மேற்கொண்டனர். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒரு பெண்ணைப் பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பாலக்கரை காஜாபேட்டை பசுமடம் பகுதியைச் சேர்ந்த பரகத் நிஷா (41) என்பது தெரியவந்தது. அவரிடம் நடத்திய சோதனையில், விற்பனைக்காக வைத்திருந்த 16 போதை மாத்திரை ஊசிகளை […]