சிவகங்கையில் மின்சாரம் பாய்ந்து பெண் பலி

சிவகங்கை மாவட்டத்தில் உள்ள அசிஸ் நகர் பகுதியில், வீட்டில் மின் மோட்டாரை இயக்கியபோது மின்சாரம் பாய்ந்ததில், லூசியா (48) என்ற பெண் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்தச் சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தத் துயரச் சம்பவம் இன்று அதிகாலையில் நடந்துள்ளது. சிவகங்கை, அசிஸ் நகர் லூசியா தனது வீட்டில் அன்றாடத் தேவைக்காகத் தண்ணீர் நிரப்புவதற்காக மின் மோட்டாரின் ஸ்விட்ச்-ஐ ஆன் செய்துள்ளார்.அப்போது எதிர்பாராத விதமாக, ஸ்விட்ச் பாக்ஸ் அல்லது மோட்டார் இணைப்புகளில் […]

சென்னை வந்த விமானத்தில் மாரடைப்பால் பெண் பலி

வங்கதேசத்தைச் சேர்ந்த அக்லிமா அக்தர் (32) என்ற பெண், நுரையீரல் புற்றுநோய் சிகிச்சைக்காக நேற்று சென்னைக்கு தனியார் விமானத்தில் அழைத்து வரப்பட்டார். சென்னைக்கு வந்து கொண்டிருந்தபோது நடுவானில் அவருக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டது. விமானம் தரையிறங்கியதும் மருத்துவக் குழுவினர் பரிசோதித்தபோது, பெண் உயிரிழந்தது தெரியவந்துள்ளது. மாரடைப்பால் உயிரிழந்ததாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து பெண் பலி.. கணவன்-மகன் காயம்

திருவள்ளூர் அருகே மண்ணெண்ணெய் ஸ்டவ் வெடித்து காயமடைந்து சிகிச்சை பெற்று வந்த பெண் உயிரிழந்தார். வீட்டில் மண்ணெண்ணெய் ஸ்டவ் திடீரென்று வெடித்தபோது தீ விபத்து ஏற்பட்டு வச்சலா என்பவர் படுகாயம் அடைந்தார். வச்சலாவை காப்பாற்ற முயன்ற அவரது கணவர் சுகுமார், மகன் லத்திஸ் காயமடைந்தனர். இந்தநிலையில் வச்சலா பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.