பொங்கல் தொகுப்பு-பெரம்பலூர் எம்பி அருண் வழங்கினார்
பெரம்பலூர் மாவட்டம் வேலூர், ஊராட்சி தம்பிரான்பட்டி, கிராமத்திலும், ஆலம்பாடி சாலை சமத்துவபுரத்திலும் உள்ள நியாய விலைக்கடைகளில் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு தலா ரூ.3 ஆயிரம் ரொக்கத்துடன்கூடிய பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் பணிகளை பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் கே.என்.அருண்நேரு மாவட்டகலெக்டர் மிருணாளினிதலைமையில் பார்வையிட்டு ஆய்வு செய்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத்தொகுப்பினை வழங்கினர். இந்நிகழ்ச்சியில் சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் , மாவட்ட வழங்கல் அலுவலர் சக்திவேல், வருவாய் கோட்டாட்சியர் அனிதா, அட்மா தலைவர் ஜெகதீசன்,பெரம்பலூர் நகர மன்றத் […]
படுத்த படுக்கையாக இருக்கும் 90 வயது மூதாட்டிக்கு பொங்கல் தொகுப்பு- நெகிழ்ச்சி
மதுரை மாவட்டம், திருமங்கலம் அருகே உள்ள மைக்குடியைச் சேர்ந்தவர் சுப்பையா. இவரது மனைவி இருளாயி (90). கணவர் சில வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டதால் இருளாயி மட்டும் தனியாக வசித்து வருகிறார். வயது முதிர்வு மற்றும் உடல்நலக் குறைவால் இருளாயி படுத்தபடுக்கையாக இருந்து வருகிறார். பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கனை இருளாயிக்கு உறவினர்கள் வாங்கி வந்து கொடுத்தனர். ஆனால், அவரால் ரேஷன் கடைக்குச் சென்று பொங்கல் பரிசு பெற முடியவில்லை. இதையடுத்து, அக்கம்பக்கத்தினர் மற்றும் உறவினர்கள் ரேஷன் […]
5 நாட்களுக்குள் பொங்கல் பரிசு தொகை வழங்கப்படும்- உதயநிதி ஸ்டாலின்
ஐந்து நாட்களுக்குள் பொங்கல் பரிசு பணம் மற்றும் பொங்கல் தொகுப்பு பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்று துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்க நியாய விலை கடையில்,பொங்கல் தொகுப்பு மற்றும் பொங்கல் பரிசு தொகை 3000 ரூபாயை தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பொது மக்களுக்கு வழங்கினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், “ஐந்து நாட்களில் பொங்கல் பரிசு பணம் மற்றும் […]