ஊதிய உயர்வு வழங்ககோரி-திருச்சியில் மின் ஊழியரர்கள் போராட்டம்

மின்வாரியத்தில் 1.12.23 .ல் இருந்து பணி புரியும் பொறியாளர் தொழிலாளர்கள் , கேங்மேன் பணியாளர்கள் உட்பட 80 ஆயிரம் பேருக்கு ஊதிய உயர்வை தொடர் பேச்சுவார்த்தை நடத்தி அறிவித்திட கேட்டு தமிழகம் முழுவதும் கோரிக்கை பேட்ஜ் அணிந்து, பிரிவு அலுவலகங்களில் ஒலி முழக்க போராட்டம் நடைபெற்றது. திருச்சி தென்னூர் மண்டல தலைமை பொறியாளர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இன்ஜினியர் சங்கம், தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கம், சி.ஐ.டி.யு.தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு, எம்ளாய்ஸ் பெடரேஷன் […]

கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயமாக வேண்டும்- போராட்டம்

தமிழகத்தில் உள்ள கேந்திர வித்யாலயா பள்ளிகளில் தமிழை கட்டாயமாக வேண்டும் வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் தலைவர் ஈஸ்வரன் தலைமையில் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தமிழை மத்திய அரசு கட்டாயமாக்க வேண்டும் என வலியுறுத்திம் மத்திய அரசை கண்டித்து 50-க்கும் மேற்பட்டோர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய கேந்திரிய வித்யாலயா மற்றும் மத்திய அரசு சார்ந்த பள்ளிகளில் ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை பள்ளி மாணவர்களுக்கு சொல்லித் […]

தஞ்சையில் சத்துணவு, அங்கன்வாடி பணியாளர்கள் போராட்டம்

தஞ்சை மாவட்ட தமிழ்நாடு சத்துணவு, அங்கன்வாடி சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் மறியல் போராட்டம் தஞ்சை ரெயில் நிலையம் அருகே நடைபெற்றது. போராட்டத்திற்கு மாவட்ட தலைவர் மதியழகன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நாவரலசன் கோரிக்கைகளை விளக்கி பேசினார். அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் செபஸ்டின் போராட்டத்தை தொடங்கி வைத்தார். போராட்டத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநில தணிக்கையாளர் சுரேஷ்குமார், சதுணவு, அங்கன்வாடி ஓய்வூதியர் சங்க மாநில செயலாளர் முருகையன், சத்துணவு பணியாளர் சங்க மாநில […]

மத்திய அரசை கண்டித்து பொள்ளாச்சியில் காங்கிரஸ் போராட்டம்

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் பெயரை மாற்றிய மத்திய அரசின் நடவடிக்கையைக் கண்டித்து, பொள்ளாச்சி தெற்கு ஒன்றிய அலுவலகம் முன்பு காங்கிரஸ் கட்சியினர் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற காங்கிரஸ் கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் கந்தசாமி செய்தியாளர்களிடம் பேசுகையில், “மத்திய அரசு நூறு நாள் வேலைத் திட்டத்தின் பெயரை மாற்றியதை உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும். மீண்டும் இத்திட்டத்திற்கு ‘மகாத்மா காந்தி’ பெயரையே சூட்ட வேண்டும். ஏற்கனவே […]

தஞ்சை- வட்டாட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டம்

தஞ்சாவூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு இன்று தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர்கள் சங்கம் சார்பில் தொடர் காத்திருப்பு போராட்டம் நடைபெற்றது. இதற்கு வட்டத் தலைவர் பத்மநாதன் தலைமை தாங்கினார். வட்ட செயலாளர் சங்கர், பரமானந்த ஜோதி ஆகியோர் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் கிராம நிர்வாக அலுவலகத்தை கழிவறை, குடிநீர் மற்றும் இணைய வசதியுடன் கூடிய நவீன மயமாக்கம் செய்யப்பட்ட கிராம நிர்வாக அலுவலகமாக அமைத்து தர வேண்டும். கிராம நிர்வாக அலுவலர்களின் டிஎன்பிஎஸ்சி நேரடி நியமன முறையில் […]

தஞ்சையில் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த போராட்டம்

இந்திய வங்கிகள் சங்கத்துடன் கையெழுத்து இடம்பெற்ற 12-வது இருதரப்பு ஒப்பந்தம் மற்றும் 9 -வது கூட்டு குறிப்பில் வாரம் 5 நாட்கள் வேலை முறை ஒப்பந்தத்தை ஊழியர்கள் சங்கம் மற்றும் அதிகாரிகள் சங்கத்துடன் இணைந்து ஒப்புதல் பெறப்பட்டது, இந்திய வங்கிகள் சங்கம் மத்திய அரசாங்கத்தின் ஒப்புதல் பெற அனுப்பப்பட்ட வகையில் இது வரை செயலுக்கு நடைமுறைபடுத்தப்படவில்லை. இந்த 5 நாட்கள் வேலை என்ற கோரிக்கையை வலியுறுத்தி இன்று தமிழகம் முழுவதும் வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்த ஆர்ப்பாட்டத்தில் […]

கறிக்கோழி வளர்ப்பு போராட்டம் -சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம்

கறிக்கோழி வளர்ப்பு போராட்டம் குறித்து சட்டமன்றத்தில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டது. தமிழகத்தில் கறிக்கோழி வளர்ப்போர் தங்களுக்கு வளர்ப்பு கூலியை உயர்த்தி தரக்கோரி போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். பெரிய நிறுவனங்கள் கோழிக்குஞ்சுகளை விவசாயிகளிடம் கொடுத்து வளர்த்து 45 நாட்களுக்குப் பின் திரும்ப பெற்றுக் கொள்கிறார்கள். இதற்காக ஒரு கிலோ கோழிக்கு ரூ.6.50 கூலியாக கொடுக்கிறார்கள். இந்த கூலியை 20 ரூபாயாக உயர்த்தி தரும்படி பல்வேறு மாவட்டங்களில் கறிக்கோழி வளர்ப்பு உரிமையாளர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர் இந்த […]

25வது நாளாக ஆசிரியர்கள் போராட்டம்… குண்டுக்கட்டாக கைது

‘சம வேலைக்கு சம ஊதியம்’ என்ற ஒற்றைக் கோரிக்கையை வலியுறுத்தி சென்னையில் கடந்த மாதம் (டிசம்பர்) 26-ந்தேதியில் இருந்து இடைநிலை ஆசிரியர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த 5-ந்தேதி முதல் பள்ளிகள் திறந்தநிலையிலும், இடைநிலை ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தை விட்டபாடில்லை.பேச்சுவார்த்தை நடத்தியும், உடன்பாடு எட்டப்படவில்லை.ஆசிரியர்களின் இந்த போராட்டம் தொடர்பாக தொடக்கக்கல்வித்துறை அதிரடி நடவடிக்கைகளை கையில் எடுத்தது. அதாவது, பணிக்கு வராமல் போராட்டம் நடத்தும் இடைநிலை ஆசிரியர்களுக்கு சம்பளம் கிடையாது என்றும் அரசு எச்சரித்து […]

விசாரணையின்றி மரண தண்டனை: ஈரான் இளைஞரின் கடைசி மணித்துளிகள்

ஈரானின் தலைநகர் தெஹ்ரான் அருகே உள்ள கராஜ் பகுதியில், கடந்த வாரம் அரசுக்கு எதிராக நடைபெற்ற பிரம்மாண்ட போராட்டத்தில் 26 வயதான எர்பான் சொல்தானி என்பவர் கலந்து கொண்டார். இந்தப் போராட்டத்தின் போது ஈரானிய பாதுகாப்புப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டார். இந்நிலையில், எவ்வித முறையான விசாரணையும் இன்றி எர்பானுக்கு இன்று (ஜனவரி 14) மரண தண்டனை நிறைவேற்றப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. இது தொடர்பாக நார்வேயைத் தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் ஈரான் மனித உரிமைகள் அமைப்பு […]

குன்னூரில் மினி பஸ் டிரைவர்கள் வேலை நிறுத்த போராட்டம்

நீலகிரி மாவட்டம் குன்னூரில் மினி பேருந்து ஓட்டுநர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தனியார் மினி பேருந்து ஓட்டுநரை தாக்கியதாகக் கூறி மினி பேருந்து ஓட்டுநர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். னியார் மினி பேருந்து ஓட்டுநர் ஒருவர் மர்ம நபர்களால் அல்லது குறிப்பிட்ட சிலரால் தாக்கப்பட்டதே இந்தப் போராட்டத்திற்கு முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. ஓட்டுநர்களுக்குப் பணி பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்றும், தாக்குதலில் ஈடுபட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி ஓட்டுநர்கள் […]

ஈரானில் உள்நாட்டுப் போர் பதற்றம்: போராட்டக்காரர்கள் 51 பேர் சுட்டுக்கொலை

ஈரானில் நிலவி வரும் கடும் பொருளாதார நெருக்கடி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக அந்நாட்டு மக்கள் கடந்த மாதம் 28-ஆம் தேதி முதல் வீதியில் இறங்கிப் போராடி வருகின்றனர். இந்தப் போராட்டம் தற்போது வன்முறையாக மாறியுள்ள நிலையில், பலி எண்ணிக்கை 51 ஆக உயர்ந்துள்ளது. ஈரானின் உச்ச தலைவர் அயத்துல்லா அலி கமேனி தலைமையிலான ஆட்சிக்கு எதிராக மக்கள் தன்னெழுச்சியாகப் போராடி வருகின்றனர். அரசுக்கு எதிரான கோஷங்களை எழுப்பி வரும் போராட்டக்காரர்கள், சில இடங்களில் அரசு கட்டிடங்களுக்குத் […]

ஈரானில் போராட்டம் தீவிரம்.. 42 பேர் பலி?..

ஈரானில் பணவீக்கம், நாணய மதிப்பு வீழ்ச்சி, விலைவாசி உயர்வு போன்றவற்றுக்கு அரசு பொறுப்பேற்க வேண்டும் என்றும், கமேனி தலைமையிலான ஆட்சி அகற்றப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தி மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தலைநகர் டெஹ்ரான் உட்பட 31 மாகாணங்களில் போராட்டங்கள் பரவியுள்ளன. வன்முறையில் இதுவரை 42 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இணைய சேவைகள் மற்றும் தொலைபேசி இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளன.

ஈரானில் தீவிரமடையும் போராட்டம்..இணைய சேவை முடக்கம்

ஈரானில் தீவிரமடையும் போராட்டத்தால் அங்கு இணைய சேவை முடக்கம் செய்யப்பட்டுள்ளது. ஈரானில் நிலவும் கடும் பொருளாதார வீழ்ச்சி மற்றும் விலைவாசி உயர்வுக்கு எதிராக மக்கள் நடத்தி வரும் போராட்டம் 12வது நாளாக நீடித்து வருகிறது. வெளிநாட்டில் தஞ்சம் புகுந்துள்ள ஈரானின் முன்னாள் இளவரசர் Reza Pahlavi, ‘இதுவே கடைசிப் போர்’ என்று முழக்கமிட்டு மக்களைத் திரள அழைப்பு விடுத்ததால் போராட்டம் தீவிரம் அடைந்துள்ளது. மக்கள் தெருக்களில் இறங்கிப் போராடி வரும் சூழலில், வன்முறையில் சிக்கி இதுவரை 45 […]

தொழிலாளர்களை போராட்டத்திற்கு தூண்டும் இடைத்தரகர்கள்.. உஷார்.. அமைச்சர் மாசு

தேர்தல் நெருங்குகிறது என்பதால் தொழிலாளர்களின் உணர்வுகளை ஏமாற்றி போராட்டத்திற்கு தூண்டும் இடைத்தரகர்கள் அதிகரித்து வருகிறார்கள். சம்பந்தப்பட்டவர்கள் உஷாராக இருக்க வேண்டும் எனவும் கடந்தாண்டை விட இந்த ஆண்டு டெங்கு காய்ச்சல் பாதிப்பு மற்றும் டெங்கு உயிரிழப்புகள் கடுமையாக குறைந்துள்ளது, இது பொது சுகாதாரத் துறையின் நடவடிக்கைக்கும், டெங்கு விழிப்புணர்வுக்கும் கிடைத்த வெற்றி எனவும் கஞ்சா தமிழ்நாட்டில் ஜீரோ என்ற நிலையில் உள்ளது, போதைப்பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக தமிழ்நாடு மாற்றப்பட்டுள்ளது, போதைப்பொருள் குறித்து குற்றச்சாட்டு சொல்லும் எதிர்க்கட்சித் […]

சென்னை-தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டம்-தள்ளுமுள்ளு- கைது

சென்னை மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடம் அருகே தூய்மை பணியாளர்கள் திடீர் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கின்றனர். போராட்டத்தில் ஈடுபட்டவர்களை போலீசார் கைது செய்தனர்.பணி நிரந்தரம், தனியார்மயத்தை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தூய்மை பணியாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். தூய்மை பணியாளர்கள் கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில் போலீசாருக்கும் , தூய்மை பணியாளருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனை தொடர்ந்து தூய்மை பணியாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவியது.

செண்பகம்பேட்டை டோல்கேட்…விவசாயப் பயன்பாட்டு டிராக்டர்களுக்கு கட்டணம் … டிராக்டர்களை நிறுத்தி போராட்டம்

திருப்புத்தூர் அருகே, விவசாயப் பயன்பாட்டு டிராக்டர்களுக்கு கட்டணம் வசூலிப்பதை கண்டித்து, செண்பகம்பேட்டை டோல்கேட்டை அனைத்துக் கட்சியினர், விவசாயிகள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சிவகங்கை மாவட்டம், திருப்புத்தூர் அருகே, கீழச்சிவல்பட்டியில் செண்பகம்பேட்டை டோல்கேட் உள்ளது. 2017ம் ஆண்டு தொடங்கப்பட்ட இந்த டோல்கேட்டில் இதுவரை விவசாயப் பயன்பாடு டிராக்டர்களுக்கு கட்டணம் ஏதும் வாங்கப்படுவதில்லை. நேற்று முன்தினம் அந்த வழியாக டிராக்டர் ஓட்டி வந்த நபரிடம், டோல்கேட்டை கடந்து செல்ல ரூ.260 கட்டணம் செலுத்த வேண்டும் என வடமாநில தொழிலாளர்கள் கூறியுள்ளனர். […]

மத்திய அரசின் தொகுப்பு சட்டத்தை ரத்து செய்ய கோரி போராட்டம்

மத்திய அரசு கொண்டுவந்துள்ள தொகுப்பு சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வலியுறுத்தி தொழிற்சங்க கூட்டமைப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர் தமிழ்நாடு விவசாயிகள் தொழிலாளர் கட்சி மற்றும் தமிழகம் கட்டடத் தொழிலாளர்கள் மத்திய சங்கம் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டமைப்பு சார்ப்பில் கோவை தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு மத்திய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டத்தில் 50-க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டனர். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய மாநில பொதுச் செயலாளர் கவிஞர் குரு ராமலிங்கம்:- மத்திய அரசு தொழிலாளர்களுக்கு […]

திருச்சி கலெக்டர் அலுவலகம் முன்பு தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்.. பரபரப்பு

திருச்சி மெயின் கார்டு கேட் ,என்.எஸ்.பி. ரோடு தரைக்கடை வியாபாரிகள் 100 பேர் இன்று காலை திருச்சி மாவட்ட நீதிமன்றத்திற்கு திரண்டு வந்தனர்.பின்னர் தரைக்கடை வியாபாரிகள் அனைவரும் தரைக்கடை வியாபாரிகள் கூட்டமைப்பு நிர்வாகிகள் அஸ்ரப் அலி, ஜீவா, அன்சாரி, செந்தில், கபீர் அகமது, லதா ஆகியோர் தலைமையில் திருச்சி மாவட்ட முதன்மை நீதிபதியை சந்தித்து, தனித்தனியே மனு கொடுத்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:- .என்.எஸ்.பி ரோடு, மெயின் கார்டு கேட் பகுதியில் நாங்கள் 10 முதல் 40 […]

புதுகை கோர்ட் வளாகத்தில் வழக்கறிஞர்கள் மனித சங்கிலி போராட்டம்

புதுக்கோட்டை யில் நீதிமன்றம் வளாகத்தில் வழக்கறிஞர்கள் கோரிக்கைகளை நிறை வேற்ற வலியுறுத்தி மனித சங்கிலி போராட்டத்தில் வெள்ளிக்கிழமை ஈடுபட்டனர். வழக்கறிஞர் சங்க தலைவர் முத்தையன் தலைமை வகித்தார். செயலாளர் ரமேஷ் முன்னிலை வகித்தார்.வழக்கறிஞர் பாதுகாப்பு சட்டம் இயற்ற கோரியும், சேமநல நிதியை உயர்த்த வலியுறுத்தியும், இ. பைலிங் முறையினை ரத்து செய்யவும் வலிறுதி கோஷங்களை எழுப்பினர். மூத்த வழக்கறிஞர் கே கே. செல்ல பாண்டியன், சிற்றரசு, ஆதிமூலம், ராமநாதன், பழனிவேல், அருள்மொழிவேந்தன், சிவா, ராஜபாண்டி, சுஜாதா உள்ளிட்ட […]