குழந்தையைப் பார்க்க மனைவி அனுமதி மறுப்பு: செங்கல்பட்டு அரசு டாக்டர் தற்கொலை

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்தவர் கார்த்திக் (37). இவர் செங்கல்பட்டு நகர் பகுதியில் தனது பெற்றோருடன் வாடகை வீட்டில் வசித்து வந்தார். செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் காசநோய் பிரிவு மருத்துவராகவும் பணியாற்றி வந்தார். இவருக்குத் திருமணமாகி ஒரு மனைவியும், 3 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். இவரது மனைவி கேரளாவில் மருத்துவ உயர்படிப்பு படித்து வருவதாகக் கூறப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக கணவன் – மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்ந்து […]