அஜித் பவார் மரணத்தில் சந்தேகம் கிளப்பிய மம்தா

பாராமதி விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்தது குறித்து மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி சந்தேகத்தை கிளப்பியுள்ளார். அதில், “பாஜக கூட்டணியில் இருந்து விலகத் தயார் என சில தினங்களுக்கு முன்பு அஜித் பவார் கூறியிருந்த நிலையில் இச்சம்பவம் நடந்துள்ளது. ஆளுங்கட்சியில் உள்ளவருக்கே இந்த நிலைமை என்றால் எதிர்க்கட்சியினரின் நிலை என்ன?. அஜித் பவார் மரணம் குறித்து உச்சநீதிமன்றத்தின் மேற்பார்வையில் விசாரணை நடத்தப்பட வேண்டும்”, இவ்வாறு தெரிவித்தார்.

மன்னிச்சிக்கோங்க- மெஸ்ஸி ரசிகர்களிடம் மம்தா வேண்டுகோள்

அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரியுள்ளார். மெஸ்ஸியைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்த நிலையில், மெஸ்ஸி சிறிது நேரம் மட்டுமே இருந்து சென்றதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்து பொருட்களை வீசியெறிந்து, மைதானத்தில் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பதிவில், “சால்ட் லேக் மைதானத்தில் ஏற்பட்ட […]