வள்ளலார் வழியில் திராவிட மாடல்”- முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னையில் வள்ளலார் மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைத்தார். பின்னர் அனைத்துலக வள்ளலார் மாநாட்டில் சன்மார்க்கிகளுக்கு விருதுகள் வழங்கினார். பின்னர் திருவொற்றியூர் நெடுஞ்சாலைக்கு “வள்ளலார் நெடுஞ்சாலை” என பெயர் சூட்டி பெயர்ப் பலகையை காணொலிக் காட்சி வாயிலாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார். தொடர்ந்து பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “தமிழர்கள் முன் பெரியார் ஒரு கேள்வியை முன்வைத்தார்… வடநாட்டு சாமியார்களை போற்றும் தமிழனே வடலூர் வள்ளலார். எந்தவிதத்தில் தாழ்ந்தவர் என்று கேட்டார். வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் […]

காவல்துறை சார்பில் ரூ.122.19 கோடி செலவில் புதிய கட்டிடத்திற்கு முதல்வர் அடிக்கல்

காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் துறை மற்றும் தடய அறிவியல் துறை சார்பில் ரூ.122.19 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள கட்டடங்களை திறந்து வைத்து, ரூ.55 கோடி மதிப்பீட்டில் கட்டப்படவுள்ள தாம்பரம் காவல் ஆணையர் அலுவலகத்திற்கு அடிக்கல் நாட்டி, சிறந்த அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கு கலைஞர் காவல் கோப்பையை வழங்கி, காவல் நிலைய அதிகாரிகள் மற்றும் மோப்ப நாய் பிரிவின் பயன்பாட்டிற்காக மொத்தம் 360 புதிய வாகனங்களை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார் […]

மகளிர் உரிமைத்தொகை ரூ.2000 – முதல்வர் ஸ்டாலின் வாக்குறுதி

முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில் : தமிழக மகளிருக்கு இந்த ஸ்டாலின் தந்த உறுதிமொழிதான் உரிமைத்தொகை. யார் தடை ஏற்படுத்தினாலும் அதிலிருந்து பின்வாங்க மாட்டேன். தேர்தலைக் காரணம் காட்டி, மூன்று மாதங்களுக்கு உரிமைத்தொகையை முடக்கப் பார்க்கிறார்கள். முந்திக்கொண்டது நமது திராவிட மாடல் அரசு. பிப்ரவரி, மார்ச், ஏப்ரல் மாதங்களுக்கான முன்பணமாக ரூ.3 ஆயிரம் + கோடைக்காலச் சிறப்புத் தொகுப்பாக ரூ.2 ஆயிரம்.1.31 கோடி மகளிர் உரிமைத் திட்டப் பயனாளிகளுக்கும் இன்று காலை 5 ஆயிரம் ரூபாய் வரவு […]

ஆட்சியில் பங்கு ஒத்து வராது- காங்கிரஸ்-க்கும் தெரியும்-முதல்வர் ஸ்டாலின்

ஆட்சியில் பங்கு ஒத்து வராது என்பது எங்களுக்கும் தெரியும், காங்கிரசிற்கும் தெரியும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் சிலர் ஆட்சியில் பங்கு குறித்து பேசி வரும் நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இவ்வாறு தெரிவித்துள்ளார். காங்கிரஸ் உடனான கூட்டணி உறுதியாக உள்ளது என்றும் கூட்டணியில் பிளவை ஏற்படுத்த திட்டமிட்ட சதி என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றம் சாட்டி உள்ளார்.

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் அமைச்சரவை கூட்டம் துவங்கியது

 தமிழகத்தில் வரும் ஏப்ரல் மாதத்தில் சட்டசபைத் தேர்தல் நடைபெற உள்ளது. எனவே தற்போது சட்டசபையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. தமிழக சட்டப்பேரவை கூட்டத் தொடர் கடந்த மாதம் ஜனவரி 20ம் தேதி ஆளுநர் உரையுடன் தொடங்கி 24-ம் தேதி வரை நடைபெற்றது. இதைத் தொடர்ந்து தமிழக அரசின் பட்ஜெட்டும் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு வரும் […]

இளைஞர்களை கொள்கை வடிவமைப்பாளர்களாக மாற்ற ‘என் கனவு-முதல்வர்

இளைஞர்களைக் கொள்கை வடிவமைப்பாளர்களாக மாற்ற ‘என் கனவு, என் எதிர்காலம்’ திட்டம்! இளைஞர்கள் தங்கள் கருத்துகளை பதிவுசெய்ய இளைஞர் கனவு தளத்தைத் தொடங்கி வைத்தார் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் தமிழ்நாடு அரசு பொதுமக்களின் கனவுகளை நேரடியாக கேட்டு அவற்றின் அடிப்படையில் திட்டங்களை செயல்படுத்தும் நோக்குடன் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜனவரி 9 அன்று ‘உங்க கனவு சொல்லுங்க’ என்ற திட்டத்தை தொடங்கிவைத்தார். இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ்நாடு முழுவதும் உள்ள 1.91 கோடி குடும்பங்களை நேரடியாகச் சந்தித்து […]

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

மத்திய அரசின் நிதிநிலை அறிக்கை, நாடாளுமன்றத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் அதனை தொடர்ந்து, தமிழ்நாடு சட்டமன்றத்திலும் இடைக்கால நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட உள்ளது.இந்த நிலையில், நிதிநிலை அறிக்கையில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து விவாதிக்கவும், முடிவெடுக்கவும் அமைச்சரவை கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் நாளை தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம் நடைபெறுகிறது. இடைக்கால பட்ஜெட்டில் இடம்பெற வேண்டிய அம்சங்கள் குறித்து அமைச்சரவை கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் கடந்த […]

அரசியலில் நான் யாரையும் எதிரியாக பார்ப்பதில்லை- முதல்வர்

முதல்வர் ஸ்டாலின் இன்று தனது சொந்த தொகுதியான கொளத்தூரில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். கொளத்தூர் தொகுதியில் பல்வேறு முடிவுற்ற பணிகளை ஸ்டாலின் தொடங்கி வைத்தார். 6 புதிய ரேஷன் கடைகள், ரத்தி சுத்திகரிப்பு நிலையம், மறுவாழ்வு மையம் ஆகியவற்றை ஸ்டாலின் திறந்து வைத்தார். இதையடுத்து கொளத்தூரில் நடந்து சென்று மக்களையும் சந்தித்தார்.அப்போது முதல்வர் ஸ்டாலினிடம் பல்வேறு தரப்பு மக்களும் மீண்டும் இதே தொகுதியில் போட்டியிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர். இதனால் ஸ்டாலின் மட்டுமல்லாமல் அவருடன் இருந்த நிர்வாகிகளும் […]

பாஜகவுக்கு மக்கள் பாடம் புகட்டுவார்கள்… முதல்வர் ஸ்டாலின்

மத்திய பட்ஜெட்டில் தமிழகத்தின் நீண்டகாலக் கோரிக்கைகளான மெட்ரோ ரயில் நிதி, கல்வி நிதி (₹3,548 கோடி) மற்றும் பேரிடர் நிவாரண நிதி ஆகியவை மீண்டும் ஒருமுறை நிராகரிக்கப்பட்டுள்ளன. “இந்தத் துரோகத்தை தமிழக மக்கள் மறக்க மாட்டார்கள்; வரும் சட்டமன்றத் தேர்தலில் பாஜக மற்றும் அதன் கூட்டணிக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்” என முதலமைச்சர் எச்சரித்துள்ளார். தமிழக அரசு ‘தேசிய கல்விக் கொள்கை’ மற்றும் ‘மூன்று மொழிக் கொள்கையை’ ஏற்காததால், கல்விக்கான நிதியை மத்திய அரசு நிறுத்தி […]

அண்ணா நினைவிடத்தில் முதல்வர் ஸ்டாலின் மரியாதை

அண்ணாவின் நினைவு நாளில் முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் சென்னையில் அமைதிப் பேரணி நடைபெற்றது. இந்த அமைதிப் பேரணியானது சென்னை வாலாஜா சாலையில் உள்ள அண்ணா சிலை அருகில் இருந்து புறப்பட்டு அண்ணா சதுக்கத்தைச் சென்றடைந்தது. இந்நிகழ்ச்சியில், அமைச்சர் நேரு, தயாநிதி மாறன், ஆ.ராசா மற்றும் கட்சியினர் பங்கேற்றனர். தொடர்ந்து, காமராஜர் சாலையில் அமைந்துள்ள அண்ணா நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து முதல்-அமைச்சர் ம்.க. ஸ்டாலின், பொதுச் செயலாளர் துரைமுருகன், திமுக எம்.பி.ராசா .அமைச்சர்கள் மற்றும் கட்சியினர் அஞ்சலி […]

திமுக தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் கடிதம்

தி.மு.க. தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு எழுதி உள்ள கடிதத்தில்,உங்களில் ஒருவனான என்னுடைய இந்தப் பயணத்திற்கும் ஓயாத உழைப்பிற்கும் உந்து விசையாக இருப்பவர்கள் அண்ணாவும், கலைஞரும், பேராசிரியர் அன்பழகன் உள்ளிட்ட கழகத்தின் முன்னோடிகள்தான். அதனால்தான் எதிர்ப்புகளையும் வஞ்சகத்தையும் எதிர்கொள்ளும் போராட்டமாகவே முதலமைச்சர் பொறுப்பை அனுபவித்தபடி, தமிழ்நாட்டு மக்களின் முன்னேற்றத்திற்கு உழைத்து வருகிறேன். உடன்பிறப்புகளான உங்களின் ஆதரவே என்னுடைய வலிமை. 1967-ல் தொடங்கி, 2026-ல் இன்று நடைபெறுகிற திராவிட மாடல் அரசு வரை, அண்ணா வகுத்துத் தந்த திராவிடப் […]

பாஜ., ஆட்சியில் மாணவர் தற்கொலை அதிகரித்துள்ளது-முதல்வர்

பாஜக ஆட்சிக்கு வந்ததிலிருந்து, இந்திய உயர்கல்வி நிறுவனங்களுக்குள் மாணவர் தற்கொலைகள் அதிகரித்துள்ளது என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் குற்றசாட்டு வைத்துள்ளார். UGC (உயர்கல்வி நிறுவனங்களில் சமத்துவ ஊக்குவிப்பு) விதிகள், 2026 தாமதமான நடவடிக்கை என்றாலும், பாகுபாட்டிலும், நிறுவனங்களின் அக்கறையின்மையிலும் தோய்ந்துபோன உயர்கல்வி அமைப்பினைச் சீர்ப்படுத்துவதை நோக்கிய வரவேற்கத்தக்க நகர்வாகும். ஒன்றிய அளவில் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து, இந்திய உயர்கல்வி நிறுவனங்களில் மாணவர் தற்கொலைகள், குறிப்பாகப் பட்டியல், பழங்குடியின மாணவர்களின் தற்கொலைகள் அதிகரித்திருப்பது கண்கூடு. மேலும், தென்னிந்திய மாநிலங்கள் […]

அஜித் பவார் மறைவு- முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

மராட்டிய துணை முதல்வர் அஜித் பவார் மறைவுக்கு முதல்வர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். விமான விபத்தில் அஜித் பவார் உயிரிழந்த செய்தி கேட்டு மிகவும் வருத்தமடைந்தேன். அஜித் பவாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

பெண்கள் முன்னேறாமல் எந்த நாடும் வளரமுடியாது- முதல்வர்

சென்னை நந்தம்பாக்கத்தில் உலக மகளிர் உச்சி மாநாட்டை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில், பிங்க் பேருந்துகள், அனைத்து மகளிர் காவல் நிலையங்களுக்கான வாகனங்கள் மற்றும் பிங்க் ஆட்டோக்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொடியசைத்து தொடங்கி வைத்தார். இந்தியாவில் முதன்முறையாக, உலக வங்கியின் உதவியுடன் தமிழ்நாட்டின் அனைத்து வயது பெண்களையும் உள்ளடக்கிய,’தமிழ்நாடு மகளிர் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு’ திட்டத்தை (TNWESafe) முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார். மேலும் அரியலூர், பெரம்பலூர், தருமபுரி மாவட்டங்களில் 14 […]

திருச்சி ஏர்போர்ட்டில் முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு

தஞ்சாவூர் மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெறும் வெல்லும் பெண்கள் திமுக மகளிர் அணி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து தனி விமான மூலம் புறப்பட்டு இன்று திருச்சி விமான நிலையத்திற்கு வந்தடைந்தார். திருச்சியில் இருந்து சாலை மார்க்கமாக கார் மூலம் தஞ்சாவூர் புறப்பட்டு சென்றார். தஞ்சாவூர் மாவட்டத்தில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ளும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் இ ன்று மாலை நடைபெறும் மகளிர் அணி மாநாட்டில் பங்கே இருக்கிறார். திருச்சி […]

பகுதிநேர டீச்சர்களுக்கு சிறப்பு மதிப்பெண்- முதல்வர் ஸ்டாலின்

ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்போது பகுதிநேர ஆசிரியர்களின் பணிக் காலத்தை அடிப்படையாக கொண்டு சிறப்பு மதிப்பெண் வழங்கப்படும் என பேரவையில் CM ஸ்டாலின் அறிவித்துள்ளார். பகுதிநேர ஆசிரியர்களுக்கு மாதம் ₹15,000, மே மாதம் கோடை விடுமுறையின்போது ₹10,000 ஊதியம் வழங்கப்படும் என அன்பில் மகேஸ் அறிவித்திருந்தார். ஆனாலும், பணி நிரந்தர வாக்குறுதியை நிறைவேற்ற கோரி அவர்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

தேர்தல் சீசனில் மட்டும் மோடியின் சீன்.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

தமிழக சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் சூழலில் கூட்டணி பேச்சுகள், தொகுதிப் பங்கீடு உடன்பாடுகள் தீவிரமாக நடந்து வருகின்றன. இந்நிலையில், இன்று செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகத்தில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். இந்தநிலையில் தேர்தல் சீசன் வந்தால் மட்டும், தமிழ்நாடு பக்கம் அடிக்கடி வரும் மாண்புமிகு பிரதமர் மோடி அவர்களே? என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தனது X-தளப்பதிவில் கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார். அவர் கூறியதாவது.. தேர்தல் சீசன் […]

நகர்புற குடியிருப்புகளை திறந்து வைத்தார் முதல்வர்

வடசென்னை வளர்ச்சித் திட்டத்தின்கீழ் ஏழுகிணறு பகுதியில் நவீன வசதிகளுடன் ரூ.147 கோடி மதிப்பில் கட்டப்பட்டுள்ள 776 அடுக்குமாடி குடியிருப்புகள் கொண்ட முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். மேலும் “முதல்வர் நகர்ப்புற குடியிருப்புகள்” வளாகத்தில் உள்ள அங்கன்வாடி மையங்களை பார்வையிட்டு, அங்குள்ள குழந்தைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பரிசுகள் வழங்கினார்.

ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல-முதல்வர்

ஆளுநர் என்பவர் மாநில நலனில் அக்கறை கொண்டவராக இருக்க வேண்டும் என சட்டப்பேரவையில்முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியுள்ளார். ஆளுநர் ஏற்கனவே நடந்துகொண்டது போலவே மீண்டும் நடந்து கொண்டது வருத்தத்துக்குரியது. ஆளுநரின் செயல் அவர் வகிக்கும் பதவிக்கு அழகல்ல என முதல்வர் கூறினார்.

சென்னை சங்கமம் நிகழ்ச்சிக்காக பாடல் எழுதிய எம்பி கனிமொழி

சென்னையில் கலாச்சாரத் திருவிழாவான ‘சென்னை சங்கமம்-நம்ம ஊரு திருவிழா’ இன்று தொடங்குவது கலை ஆர்வலர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்த விழாவின் சிறப்பம்சங்கள் இதோ: தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று மாலை இந்த விழாவை அதிகாரப்பூர்வமாகத் தொடங்கி வைக்கிறார். கனிமொழி எம்.பி. எழுதிய பாடல்: இவ்விழாவிற்காக தூத்துக்குடி நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கருணாநிதி அவர்கள் ‘வானமில்லை பூமியில்லை’ என்ற தலைப்பில் ஒரு சிறப்புப் பாடலை எழுதியுள்ளார். நாட்டுப்புறக் கலைகள், பாரம்பரிய இசை மற்றும் உணவுகளை […]

அரசு ஊழியர்களுடன் சமத்துவ பொங்கல் விழா கொண்டாடிய முதல்வர்

சென்னை தலைமைச் செயலகத்தில் அரசு ஊழியர்களுடன் சமத்துவ பொங்கல் விழாவை முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டாடினார். பொங்கல் விழாவில் அவர் பேசுகையில், “அனைவருக்கும் வணக்கம், தமிழகம் முழுவதும் சமத்துவ பொங்கல் விழாவை கொண்டாடி கொண்டு இருக்கிறோம். எல்லாருக்கும் எல்லாம் என்ற இலக்கை நோக்கி, சமத்துவ நிலையை அனைவரும் அடைந்து விட வேண்டும் என்ற நோக்கத்தோடு, திமுக அரசு பணியாற்றி கொண்டு இருக்கிறது நாங்கள் மட்டுமல்ல, நீங்களும் சேர்ந்து தான் உழைத்து கொண்டு இருக்கிறீர்கள். தமிழக மக்களின் தேவைகளை பூர்த்தி […]

17ம் தேதி அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு.. முதல்வர் நேரில் பார்வை

அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியை பார்க்க ஜனவரி.17ல் நேரில் செல்கிறேன் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். சென்னை சங்கமம் கலை விழாவை நாளை தொடங்கி வைக்கிறேன். எல்லோருக்குமான திருநாள் பொங்கல்; எல்லோருக்குமான அரசு திராவிட மாடல் அரசு. சாதி, பேதமற்ற சமத்துவப் பொங்கல் தமிழ்நாடு எங்கும் பொங்கட்டும். பொங்கல் விழா, விளையாட்டுப் போட்டி, கோலப் போட்டிகளை எழுச்சியோடு நடத்தி திமுகவினர் பரிசு வழங்க வேண்டும். 2026 பொங்கல் மகிழ்ச்சிப் பொங்கலாக, திராவிடப் பொங்கலாக, நமக்கு வெற்றிப் பொங்கலாக இருக்கட்டும். […]

முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து

முதல்வர் ஸ்டாலின் பொங்கல் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரது அறிக்கை: தை முதல்நாள் தமிழர் வாழ்வில் சிறப்புமிக்க நாள். இல்லங்களிலும் உள்ளங்களிலும் இன்பம் பொங்கிடும் பொங்கல் விழா தொடங்குகிற நன்னாள். உழைப்பைப் போற்றுகின்ற திருநாள். தமிழ்ப் பண்பாட்டை உலகம் அறிந்திடும் வகையில் மகிழ்ச்சியான கலை, பண்பாட்டு நிகழ்வுகளும் பாரம்பரியமிக்க விளையாட்டுப் போட்டிகளுமாகக் கொண்டாடப்படுகிற நாள். அந்த மகிழ்ச்சி இந்த ஆண்டில், இன்னும் கூடுதலாக இருப்பதை தமிழகம் முழுவதும் காண முடிகிறது. இயற்கை சீற்றங்கள் ஏற்பட்ட போதும், விவசாயிகளுக்கும் தொழிலாளர்களுக்கும் […]

ஃபியட் செலக்ட்’ காரை ஒட்டி மகிழ்ந்த முதல்வர் ஸ்டாலின்

‘ஃபியட் செலக்ட்’ காரை ஒட்டி மகிழ்ந்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின். முதல்வர் கார் ஓட்டிய வீடியோவை தனது எக்ஸ் தளத்தில பகிர்ந்தார் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா, தனது எக்ஸ் தளத்தில் கூறி இருப்பதாவது; ”நமது அன்புக்குரிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மிகவும் எளிமையான, பக்கத்து வீட்டுக்காரரைப் போன்ற ஒரு மனிதர். குளிர்காலத்தின் இதமான காலைப் பொழுதில் நிதானமாக நடைப்பயிற்சி செய்வது, ஈ.சி.ஆர் சாலையில் சைக்கிள் ஓட்டுவது, அவ்வப்போது சாதாரணமாக காரில் பயணம் செய்வது போன்ற வாழ்க்கையின் எளிய இன்பங்களை […]

பெண்களிடம் செல்வாக்குமிக்க தலைவராக முதல்வர் திகழ்கிறார்.. அமைச்சர் சிவசங்கர்

எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதாவுக்கு அடுத்தபடியாக பெண்களிடம் செல்வாக்குமிக்க தலைவராக முதலமைச்சர் ஸ்டாலின் திகழ்கிறார்: அமைச்சர் எஸ்‌.எஸ்.சிவசங்கர் பேச்சு. அரியலூர் மாவட்ட திமுக செயற்குழு கூட்டம் மாவட்ட செயலாளரும், போக்குவரத்து மற்றும் மின்துறை அமைச்சருமான எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் இன்று அரியலூரில் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று பேசிய அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் இந்தியாவிலேயே பெண்களுக்கான மகத்தான திட்டங்களை தருவதில் சிறந்த முதலமைச்சராக நம்முடைய முதலமைச்சர்தான் இருக்கிறார். அதனால்தான் கடந்த காலங்களில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதாவுக்கு இருந்ததைப் போன்று பெண்களின் செல்வாக்கு இன்று நம்முடைய […]

திருச்சி வந்தடைந்தார் முதல்வர் ஸ்டாலின்

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மேற்கொள்ளும் ‘சமத்துவ நடைபயணத்தை’ தொடங்கி வைப்பதற்காகத் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று காலை திருச்சி வந்தடைந்தார். இன்று காலை 8 மணியளவில் சென்னையில் இருந்து தனி விமானம் மூலம் முதலமைச்சர் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தார். அவருக்கு அமைச்சர்கள் கே.என். நேரு, அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் திமுக, மதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ரோடு ஷோ: விமான நிலையத்தில் இருந்து நிகழ்ச்சி நடைபெறும் இடத்திற்குச் செல்லும் வழியில், திருச்சி […]

ஜன.,6ம் தேதி தமிழ்நாடு அமைச்சரவை கூட்டம்

தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் ஜனவரி 6-ஆம் தேதி சென்னை தலைமைச் செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. புத்தாண்டு தொடக்கத்தில் நடைபெறும் முதல் அமைச்சரவைக் கூட்டம் என்பதால், இதில் பல முக்கிய முடிவுகள் எடுக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிகிறது:

இந்த செய்தியில் வரும் படங்கள் அனைத்தும் தவெகவிற்கு சமர்ப்பணம்…

தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் சூழலில், மீண்டும் ஆட்சியைத் தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என்ற இலக்குடன் திமுக தேர்தல் பணிகளில் முழுவீச்சில் ஈடுபட்டு வருகிறது. கட்சியின் அமைப்பு பலத்தையும், மக்கள் ஆதரவையும் வெளிப்படுத்தும் வகையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாநாடுகள், விழாக்கள், கூட்டங்கள் என தொடர்ச்சியாக நடத்தப்பட்டு வருகின்றன. மதுரையில் நடைபெற்ற பொதுக்குழு கூட்டம், கரூரில் நடைபெற்ற முப்பெரும் விழா, திருவண்ணாமலையில் நடந்த வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு ஆகியவை அதன் முக்கிய எடுத்துக்காட்டுகளாகும். திமுக […]

கள்ளக்குறிச்சி மாவட்டத்திற்கு 8 புதிய அறிவிப்புகள்

ரிஷிவந்தியத்தில் ரூ.6.50 கோடி மதிப்பில் புதிய ஊராட்சி ஒன்றியம் கட்டடம் கட்டப்படும். உளுந்தூர்பேட்டையில் புதியதாக உருவாக்கப்பட்ட அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுரிக்கு ரூ.18 கோடி ரூபாயில் புதிய கல்லூரி கட்டடம் கட்டப்படும். உளுந்தூர்பேட்டை சேந்தநாடு கிராமத்தில் 50 ஏக்கரில் ரூ.10 கோடியில் புதிய சிட்கோ தொழிற்பேட்டை அமைக்கப்படும். சங்கராபுரம் மக்களுக்காக புதுபாலப்பட்டில் ரூ.18.50 கோடியில் புதிய துணை மின் நிலையம் அமைக்கப்படும். சின்னசேலம் வட்டத்தில் ரூ.3.90 கோடி மதிப்பீட்டில் புதிய தீயணைப்பு மீட்பு பணிகள் கட்டடம் […]

68 நூலக கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை- ரூ.17.82 கோடியில் கட்டப்பட்டுள்ள 68 நூலகக் கட்டடங்களை திறந்து வைத்தார் முதல்வர் ஸ்டாலின். கடலூர், தஞ்சை, நாகையில் ரூ.1.9 கோடியில் கட்டப்பட்டுள்ள 3 கிளை நூலகக் கட்டடங்கள் திறக்கப்பட்டது. உத்திரமேரூர், வேளாங்கண்ணி, பள்ளிப்பாளையம் ஆகிய 3 புதிய காவல் உட்கோட்டங்கள் திறக்கப்பட்டன. சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து, பள்ளிக் கல்வித் துறை சார்பில் 20 மாவட்டங்களில் உள்ள 60 அரசுப் பள்ளிகளில் 96.49 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 392 புதிய வகுப்பறைக் கட்டடங்கள், 4 […]

பேராசிரியர் க.அன்பழகன் படத்திற்கு முதல்வர் மரியாதை

திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் பொதுச்செயலாளரும், தமிழகத்தின் முன்னாள் அமைச்சருமான இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் 103-வது பிறந்தநாளை முன்னிட்டு, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று அவரது உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். கீழ்ப்பாக்கம் இல்லத்தில் மரியாதைசென்னை கீழ்ப்பாக்கத்தில் உள்ள பேராசிரியரின் இல்லத்திற்கு இன்று காலை நேரில் சென்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார் இந்த நிகழ்வின் போது அமைச்சர்கள், திமுக சட்டமன்ற மற்றும் நாடாளுமன்ற […]

663 பேருக்கு வேலைவாய்ப்பு- ஷ்னைடர் எலெக்ட்ரிக் குழுமத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்

முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில் இன்று தலைமைச் செயலகத்தில், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில், ஷ்னைடர் எலெக்ட்ரிக் குழுமம் 718 கோடி ரூபாய் முதலீட்டில் 663 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் அமைந்துள்ள Schneider Electric India Private Limited (SEIPL) நிறுவனத்தின் ஆலைகளின் விரிவாக்கம் மற்றும் ஓசூரில் Schneider Electric IT Business India Private Limited (SEITB) நிறுவனத்தின் மின்கலன்கள் (Batteries) மற்றும் […]

டில்லியை குளிர்விக்க ஈபிஎஸ் அறிக்கை.. முதல்வர் ஸ்டாலின் விமர்சனம்

தமிழக அரசியலில் ஆளும் தி.மு.க. மற்றும் எதிர்க்கட்சியான அ.தி.மு.க. இடையே அவ்வப்போது அறிக்கைப் போர் வெடிப்பது வழக்கம். தற்போது, அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி டில்லி விவகாரங்கள் குறித்து வெளியிட்ட அறிக்கையைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் எடப்பாடி பழனிசாமியை விமர்சித்துள்ளார். சமீபத்தில், மத்திய அரசின் சில திட்டங்கள் மற்றும் டெல்லி பயணம் குறித்துப் பேசிய இபிஎஸ், தமிழக அரசு மத்திய அரசுடன் மோதல் போக்கைக் கடைப்பிடிப்பதால் மாநில உரிமைகள் பாதிக்கப்படுவதாகக் குற்றம் சாட்டினார். குறிப்பாக, 100 நாள் […]

சிறுபான்மையினருக்கு ஆதரவாக நின்றவர் முதல்வர் ஸ்டாலின்- மதிவதனி புகழாரம்

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாளை ஒட்டி திமுகவினர் பல்வேறு நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக பொள்ளாச்சியில் திராவிடம் 2.0, ஏன் எதற்கு, வெல்லட்டும் திராவிடம் வீழட்டும் பாசிசம் என்ற கருத்தரங்கு நடைபெற்றது.கோவை தெற்கு மாவட்ட திமுக சார்பில் நடைபெற்ற இந்த கருத்தரங்கில் திராவிட கழக துணை பொதுசெயலாளர் மதிவதனி, பேசுகையில் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்தும், பொது மக்களுடைய விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் திமுகவின் நல்லாட்சி குறித்தும் மேடையில் பேசினர்.மேலும் […]

என் நண்பர் சூப்பர் ஸ்டாருக்கு பிறந்தநாள் வாழ்த்து…முதல்வர் ஸ்டாலின்

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் நடிகர் ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.இதுதொடர்பாக அவருடைய எக்ஸ் வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், ரஜினிகாந்த் = வயதை வென்ற வசீகரம்! மேடையில் ஏறினால் அனைவரையும் மகிழ்விக்கும் சொல்வன்மை! உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாத கள்ளம் கபடமற்ற நெஞ்சம்!ஆறிலிருந்து அறுபதுவரைக்கும் அரை நூற்றாண்டாகக் கவர்ந்திழுக்கும் என் நண்பர் #SuperStar @rajinikanth அவர்களுக்கு உளம் நிறைந்த பிறந்த நாள் வாழ்த்துகள்! மென்மேலும் பல வெற்றிப் படைப்புகளை அளித்து, […]

2-ம் கட்ட மகளிர் உரிமைத்தொகை திட்டம் நாளை தொடக்கம்..!

தமிழ்நாட்டில் குடும்பத் தலைவிகளுக்கு மாதம் ₹1,000 வழங்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டம் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2023, மார்ச் 27 அன்று சட்டமன்றத்தில் அறிவித்தார். அதன்படி, முதல் கட்டமாக 1 கோடியே 13 லட்சத்து 75 ஆயிரத்து 492 பெண்கள் தேர்வு செய்யப்பட்டு, ஒவ்வொரு மாதமும் 15ஆம் தேதி அவர்களின் வங்கிக் கணக்குகளில் நேரடியாக இந்தத் தொகை வரவு வைக்கப்பட்டு வருகிறது.இதற்கிடையில், மேலும் பல பெண்கள் தங்களையும் இந்தத் திட்டத்தில் இணைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்குத் […]

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக மா.செ. ஆலோசனை கூட்டம்

தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் சென்னையில் இருந்து காணொளி காட்சி வாயிலாக என் வாக்குச்சாவடி வெற்றி வாக்கு சாவடி என்ற அடிப்படையில் திமுக மாவட்ட கழக செயலாளர்கள் ஆலோசனை கூட்டத்தில் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினார். அதன் தொடர்ச்சியாக திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் தலைமையில் திருச்சி மத்திய மற்றும் வடக்கு மாவட்ட செயலாளர்கள் கலந்து கொண்டனர். இந்த கூட்டத்தில் மேயர் அன்பழகன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி, […]

முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுக எம்பிக்கள் கூட்டம் துவங்கியது

திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தலைமையில் கட்சி மக்களவை – மாநிலங்களவை உறுப்பினர்கள் கூட்டம், இன்று 29-11-2025 சனிக்கிழமை காலை 10.00 மணிக்கு, சென்னை, அண்ணா அறிவாலயம், ‘முரசொலி மாறன் வளாகத்தில்’ உள்ள கூட்ட அரங்கில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் தி.மு.க. மக்களவை, மாநிலங்களவை உறுப்பினர்கள் பங்கேற்றுள்ளனர். இக்கூட்டத்தில் 2 மாதங்களுக்கு ஒருமுறை பாராளுமன்ற உறுப்பினர்களிடம் பெறப்படும் பணி அறிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்படுகிறது. எம்.பி.க்களில் சிலர் மாவட்ட செயலாளர்களாகவும் உள்ளனர். இக்கூட்டத்தில், எஸ்ஐஆர் பணிகள் குறித்தும், […]

கோவைக்கு நாளை முதல்வர் வருகை… VSB தலைமையில் பிரம்மாண்ட ஏற்பாடு

முதல்வர் ஸ்டாலின், பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக, 2 நாள் பயணமாக, நாளை 25ம் தேதி கோவை செல்கிறார். அன்று காலை கோவையில் 45 ஏக்கரில், 208.50 கோடி ரூபாயில் அமைக்கப்பட்டுள்ள செம்மொழி பூங்காவை முதல்வர் ஸ்டாலின் திறந்து வைக்கிறார். மாலை, தொழில்துறை சார்பில் நடத்தப்படும், மண்டல முதலீட்டாளர்கள் மாநாட்டில் பங்கேற்கிறார். இம்மாநாட்டில், பல்வேறு தொழில் நிறுவனங்களுடன், புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற் கொள்ளப்பட உள்ளன. மறுநாள் 26ம் தேதி காலை, ஈரோடு மாவட்டம், மொடக்குறிச்சி ஜெயராமபுரத்தில், மாவீரன் […]

தந்தையுடன் போட்டோ எடுத்த முதல்வர் ஸ்டாலின்- திமுக நிர்வாகி மகிழ்ச்சி

தனது தந்தை புகைப்படம் எடுத்துக்கொள்ள விருப்பபடுவதாக மகன் வைத்த கோரிக்கையை ஏற்று மூத்த திமுக தொண்டரை நேரில் அழைத்து புகைப்படம் எடுத்துக் கொண்டார் முதலமைச்சர் மு க ஸ்டாலின். அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சரும் திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக திமுக நிர்வாகிகளை தனித்தனியாக ஒன் டூ  ஒன் சந்தித்து வருகிறார். இந்த நிலையில் புதன்கிழமை ஆலங்குளம் சட்டமன்ற தொகுதி நிர்வாகிகளை சந்தித்த போது தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமார் […]

ஆனந்தக் கண்ணீர் விட்ட திமுக ஒன்றிய செயலாளர்

தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், உடன்பிறப்பே வா என்ற தலைப்பில் சட்டமன்ற தொகுதி வாரியாக கட்சி நிர்வாகிகளை சந்தித்து வருகிறார்.  அப்போது ஆலங்குளம் தொகுதிக்கு உட்பட்ட ஆலங்குளம் தெற்கு ஒன்றிய செயலாளர் சிவக்குமாரை முதல்வர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசும்போது,  “எங்க அப்பா 1967 லில் இருந்து திமுக உறுப்பினர் ( முத்துவேல்). இப்பவும் டீக்கடையில் உட்கார்ந்து அரசியல் பேசிட்டு இருக்காரு.. அப்பாவை உங்க கூட போட்டோ எடுக்க கூட்டிட்டு வரவா எனக் கேட்ட ஒன்றியச் செயலாளர்.. அப்பாக்கு போன் […]

அதிமுக தொடர்பு… கோவை திமுக நிர்வாகி பதவி பறிப்பு

கோவை சுல்தான்பேட்டை மேற்கு திமுக ஒன்றிய செயலாளர் பி.வி மகாலிங்கம் பதவியை பறித்து அதிரடியாக முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். திமுகவில் இருந்து கொண்டே அதிமுகவினருடன் மகாலிங்கள் தொடர்பில் இருந்துள்ளார். நேற்று நடந்த ஒன்டூ ஒன் சந்திப்பின்போது இதுதொடர்பாக புகார் எழுந்தநிலையில் உடனே அவரின் கட்சிப்பதவியை முதல்வர் ஸ்டாலின் பறித்துள்ளார். மேலும் இதுபோல் நடந்தால் பதவி பறிப்பு நடவடிக்கை தொடரும் எனவும் திமுகவினரை எச்சரித்துள்ளார்.

மெட்ரோ விவகாரம்- முதல்வர் ஸ்டாலின் கண்டனம்

தமிழக முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் , கோயில் நகர்’ மதுரைக்கும், ‘தென்னிந்திய மான்செஸ்டர்’ கோவைக்கும் “NO METRO” என நிராகரித்துள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு! அனைவருக்கும் பொதுவானதாகச் செயல்படுவதுதான் அரசுக்கான இலக்கணம். அதற்கு மாறாக, பா.ஜ.க.வைத் தமிழ்நாட்டு மக்கள் நிராகரிப்பதற்காக இப்படி பழிவாங்குவது கீழ்மையான போக்கு. பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் உள்ள சிறிய இரண்டாம் நிலை மாநகரங்களுக்குக் கூட மெட்ரோ ரெயிலுக்கான ஒப்புதல் வழங்கிவிட்டு, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களைப் புறக்கணிப்பது அழகல்ல. கூட்டாட்சிக் […]