திருச்சி மன்னார்புரம் அருகே விபத்து: முதியவர் பலி
திருச்சி மன்னார்புரம் அருகே இன்று அதிகாலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் சாலையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக அதிவேகமாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் உடல் சிதைந்து அந்த நபர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இது குறித்து எடமலைப்பட்டி புதூர் கிராம நிர்வாக அலுவலர் ஸ்டீபன் அளித்த புகாரின் பேரில், தெற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். […]
மாடு முட்டி முதியவர் பலி
சென்னை மணலியை அடுத்த மாத்தூர் பகுதியை சேர்ந்தவ முதியவர் ஆனந்தன். இவர் கடந்த நாட்களுக்குமுன் தெருவில் நடந்து சென்றபோது அவரை மாடு முட்டியது. இதில் கீழே விழுந்து படுகாயமடைந்த ஆனந்தனை அக்கம்பக்கத்தினர் மீட்டு அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். இந்நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ஆனந்தன் இன்று சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனிடையே, மாத்தூர் பகுதியில் சாலையில் சுற்றித்திரிந்த மாடுகளை மாநகராட்சி ஊழியர்கள் விரட்டிப்பிடித்தனர். அப்போது மாடுகளின் உரிமையாளர்கள் மாநகராட்சி ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். சாலையில் […]
தஞ்சை அருகே ஆற்றில் மூழ்கி முதியவர் பலி
தஞ்சாவூர் மாவட்டம் தெற்கு வாண்டையார் இருப்பு பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (60). விவசாயி. இவர் கடந்த 17ம் தேதி மாலை அதே பகுதியில் உள்ள கல்யாணஓடை ஆற்றில் குளிக்கச் சென்றுள்ளார். ஆனால் ஆற்றில் தண்ணீர் வேகம் அதிகமாக இருந்ததால் சக்திவேல் நீரில் மூழ்கி இழுத்து செல்லப்பட்டுள்ளார். குளிக்கச்சென்றவரை காணவில்லையே என அவரது குடும்பத்தினர் தேடி வந்து பார்த்தபோது சக்திவேல் ஆற்றில் அடித்து செல்லப்பட்டது தெரிய வந்துள்ளது. உடன் இதுகுறித்து தாலுகா போலீசாருக்கும், தீயணைப்பு படை அலுவலகத்திற்கும் தகவல் […]