வெளிநாட்டு வேலை மோசடி: 58 பேரை ஏமாற்றி ₹1.35 கோடி அள்ளிய கும்பல்
வெளிநாட்டிற்கு வேலைக்கு அனுப்புவதாகக் கூறி 58 பேரிடம் ரூ.1.35 கோடிக்கும் மேல் பணத்தைப் பெற்றுக்கொண்டு மோசடி செய்த சென்னையைச் சேர்ந்த தம்பதி உட்பட மூவர் மீது தஞ்சாவூர் மாவட்ட குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகே உள்ள தொண்டராம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த விமல் என்பவர் வெளிநாட்டு வேலைக்காகத் தனது நண்பர் மூலம் சென்னையைச் சேர்ந்த பிரசன்னா என்பவரை அறிமுகம் செய்துகொண்டார். பிரசன்னா, கனடா மற்றும் நியூசிலாந்து போன்ற நாடுகளில் பல லட்சம் […]
ரூ.40,000 கோடி வங்கி மோசடி: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் முன்னாள் தலைவர் புனித் கார்க் கைது
ரூ.40,000 கோடி வங்கி கடன் மோசடி வழக்கில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் (ஆர்.காம்) நிறுவனத்தின் முன்னாள் தலைவரும் இயக்குநருமான புனித் கார்க்கை அமலாக்கத்துறை அதிரடியாகக் கைது செய்துள்ளது. அனில் அம்பானி தலைமையிலான இந்த நிறுவனம் மற்றும் அதன் குழும நிறுவனங்கள் மீது சுமத்தப்பட்ட பணமோசடி புகாரின் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த வழக்கில் ஏற்கனவே ரூ.11,000 கோடி மதிப்பிலான சொத்துக்களை முடக்கியுள்ள அமலாக்கத்துறை, தற்போது புனித் கார்க்கின் மனைவியின் பெயரில் உள்ள பங்குகள் மற்றும் பரஸ்பர நிதிகளையும் […]
தீபாவளி சீட்டு நடத்தி 50 லட்சம் மோசடி- சகோதரர்கள் கைது
மதுரை ஒத்தக்கடை மேலக்குடியைச் சேர்ந்தவர் மலைச்சாமி, இவர் கோவை சின்ன தடாகம் பகுதியில் கடந்த 2015 ஆம் ஆண்டு செல்போன் விற்பனை கடை வைத்து இருந்தார். மேலும் மதுரை மேல சக்குப்பட்டியை சேர்ந்தவர் மூக்கன். உட்பட இவரது உறவினர்கள் பலர் கோவை சின்ன தடாகம் பகுதியில் உள்ள செங்கல் சூளையில் வேலை பார்த்து வந்தனர். இவர்களை அணுகிய மயில்சாமி தீபாவளி சீட்டு நடத்துவதாகவும், வாரம் ரூபாய் 2,000 வீதம் 52 வாரங்களுக்கு கட்டினால் நல்ல லாபம் தருவதாக […]
ஆன்லைன் உல்லாசத்திற்கு ஆசை காட்டி மோசடி: ராமநாதபுரம் இளம்பெண் சிக்கினார்
சமூக வலைதளங்களில் ஆபாச உரையாடல் மற்றும் உடலுறவுக்கு அழைப்பு விடுத்து, வாலிபர்களிடம் பணம் பறித்து வந்த ராமநாதபுரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணைச் சைபர் கிரைம் போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த நபிலா பேகம் (27) என்பவர், பேஸ்புக்கில் போலி ஐ.டி-களை உருவாக்கி அதில் ஆபாசமான விளம்பரங்களைச் செய்துள்ளார். அதில் ஒரு வாட்ஸ்அப் எண்ணைக் குறிப்பிட்டு, “உங்களுக்குப் பிடித்த வயதுடைய இளம்பெண்களுடன் உல்லாசமாக இருக்கலாம், ஆபாச வீடியோ கால் மற்றும் சேட்டிங் செய்யலாம்” என ஆசைவார்த்தை […]
கார், பைக் வாங்குபவர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா என ஆசைவார்த்தை – மோசடி கும்பல் போலீசில் சிக்கியது
சேலத்தில் புதிதாக கார் மற்றும் பைக் வாங்குபவர்களைத் தொடர்பு கொண்டு, அவர்களுக்கு வெளிநாட்டுச் சுற்றுலா செல்ல வாய்ப்பு கிடைத்துள்ளதாகக் கூறி நூதன முறையில் மோசடி செய்த கும்பலைச் சூரமங்கலம் போலீசார் பிடித்துள்ளனர். சென்னையைச் சேர்ந்த இந்த கும்பல், சேலம் சூரமங்கலத்தில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் முகாமிட்டு சுமார் 35-க்கும் மேற்பட்டோருக்கு அழைப்பு விடுத்திருந்தது. அங்கு வந்தவர்களிடம், “25 ஆயிரம் முதல் 1.50 லட்சம் ரூபாய் வரை பேக்கேஜ் முறையில் பணம் கட்டினால், ஐந்து ஆண்டுகளுக்குள் எப்போது […]
ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் ரூ.192 கோடி முடக்கம் – அமலாக்கத்துறை அதிரடி!
இந்தியாவில் ஆன்லைன் விளையாட்டுகளுக்கு மத்திய அரசு தடை விதித்து உள்ளது. இந்தநிலையில், பெங்களூருவை தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் அமலாக்கத்துறையின் மண்டல அலுவலக அதிகாரிகள், ‘வின்சோ’ என்ற ஆன்லைன் விளையாட்டு நிறுவனத்தின் கணக்கு வழக்குகளைக் கவனிக்கும் தணிக்கை நிறுவனத்தில் கடந்த மாதம் 30-ந் தேதி அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையின்போது, வின்சோ நிறுவனத்தின் துணை நிறுவனமான ‘எம்.எஸ் இசட்.ஓ கேம்ஸ்’ நிறுவனத்தின் ரூ.192 கோடியை அதிகாரிகள் முடக்கினர். இதில் வங்கி இருப்பு, வைப்பு நிதி மற்றும் பரஸ்பர […]
பெண்ணிடம் ரூ.60 லட்சம் அபேஸ்.. கைதான 6 பேரும் கூலாக போஸ்
மதுரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் அவர்களின் உத்தரவின் பேரில், சைபர் க்ரைம் காவல்துறையினர் நடத்திய அதிரடி விசாரணையில், டிஜிட்டல் அரெஸ்ட் (Digital Arrest) மூலம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த கும்பலைச் சேர்ந்த 6 பேர் கேரளாவில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர். கடந்த நவம்பர் 10-ஆம் தேதி, பாதிக்கப்பட்ட நபரைத் தொடர்பு கொண்ட மர்ம நபர், தன்னை மும்பை காவலர் விஜய் கண்ணா என அறிமுகப்படுத்தியுள்ளார். மனுதாரரின் பெயரில் போலி வங்கி கணக்கு தொடங்கி […]
ஐபிஎஸ் அதிகாரி எனக்கூறி மோசடி- 17 ஆண்டு சிறை
ஐபிஎஸ் அதிகாரி எனக் கூறி பெண் சிறை வார்டனை ஏமாற்றிய வழக்கில் விஜயபானுவுக்கு 17 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது . 13 ஆண்டுகளாக நடைபெற்ற வழக்கில் விஜயபானுவுக்கு 17 ஆண்டு சிறை தண்டனை விதித்து பூவிருந்தவல்லி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. இவர் அறக்கட்டளை தலைவர், ஐபிஎஸ் அதிகாரி, அரசியல்வாதி என பல வேடங்களில் மக்களை நம்ப வைத்து மோசடி செய்துள்ளார். ஐ.பி.எஸ். அதிகாரி என பெண் காவலரை நம்ப வைத்து ஏமாற்றி 22 சவரன், […]
போலி பார்க்கிங் ரசீது தயாரித்து மோசடி… 2 பேர் கைது…
கன்னியாகுமரி சுற்றுலாத்தளத்தில் போலி பார்க்கிங் ரசீது கொடுத்து பணம் வசூல் செய்த முருகேஷ் (24) மற்றும் கணேஷ் (22) ஆகிய 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். இவர்கள் 2 பேரும் அனுமதி இல்லாமல் கள்ள ரசீது தயாரித்து சுற்றுலா பயணிகளிடம் பார்க்கிங் கட்டணம் வசூலித்து பல நாட்களாக மோசடி செய்தது விசாரணையில் உறுதியானது. அவர்களிடம் போலி ரசீதுகள், வசூலித்த பணம் பறிமுதல் செய்யப்பட்டு, 2 பேர் மீதும் மோசடி மற்றும் போலி ஆவணம் தயாரித்தல் பிரிவுகளில் […]