இபிஎஸ் உடன் ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் சந்திப்பு
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி உடன் ராமதாஸ் ஆதரவு எம்எல்ஏ அருள் சந்தித்து பேசினார். 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு மாநில அரசியல் சூழல் நாளுக்கு நாள் சூடுபிடித்து வருகிறது. தேர்தல் பணிகளில் அனைத்து கட்சிகளும் தீவிரமாக ஈடுபட்டு வரும் நிலையில், எதிர்க்கட்சியான அதிமுக முதற்கட்ட வேட்பாளர் பட்டியலை விரைவில் வெளியிடத் தயாராகி இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே அதிமுக கூட்டணியில் மேலும் பல கட்சிகள் வர உள்ளதாக இபிஎஸ் பேசியிருந்தார். இந்நிலையில் […]
அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட முயற்சி- ராமதாஸ்
விழுப்புரம் மாவட்டம், தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் ராமதாஸ் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அன்புமணி தரப்பை குறித்து கடுமையான விமர்சனங்களை அவர் முன்வைத்தார். அவர் பேசியது பின்வருமாறு;“ஒரு கூட்டம் பொய் செல்வதையே அரசியலாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மனம் புண்படும்படி பேசி வருகின்றனர். என்னை மட்டும் அல்ல.. அரசியல் அனுபவம் கொண்ட ஜி.கே.மணியை வசைபாடுகின்றனர். கட்சிக்காக ஓயாமல் உழைத்தவர் ஜி.கே.மணி. அரசியலில் இருந்து என்னை ஒழித்துக்கட்ட எதை, எதையோ பேசுகிறார்கள். அந்த கூட்டத்தை நாங்கள் கட்சியை விட்டு […]
இதற்கெல்லாம் பதில் சொல்வது எனக்கு அசிங்கம்”- ராமதாஸ்
இதற்கெல்லாம் பதில் சொல்வது எனக்கு அசிங்கம் என பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் கூறியுள்ளார். ஜிகே மணி துரோகி என்று அன்புமணி விமர்சனம் குறித்த கேள்விக்கு பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் இவ்வாறு பதிலளித்தார். திண்டிவனம் அருகே தைலாபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர்,மருத்துவர் ராமதாஸ், “கூட்டணி தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கவில்லை. முடிவு எடுக்கப்படும். முடிவு எடுப்போம். பேசிக் கொண்டிருக்கிறோம். டெல்லி உயர்நீதிமன்ற தீர்ப்பை பொறுத்திருந்து பாருங்கள். கூட்டணி தொடர்பாக, சில கட்சிகள் தொடர்பில் உள்ளனர் […]
அன்புமணிக்கு ‘அதிர்ச்சி’ கொடுத்த ராமதாஸ்
விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் அடுத்த தைலாபுரம் இல்லத்தில் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் திறமையில் நிர்வாக குழு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பாமக கௌரவ தலைவர் ஜி.கே.மணி, வன்னியர் சங்க தலைவர் அருள்மொழி, செயல் தலைவர் ஸ்ரீகாந்த் உள்ளிட்ட 20 பேர் கலந்து கொண்டனர். இந்த நிர்வாக குழு கூட்டத்தில் சேலம் மேற்கு சட்டமன்ற உறுப்பினர் அருள் மற்றும் வைத்தியலிங்கம் ஆகிய இருவரும் பங்கேற்கவில்லை. கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ், […]
ராமதாஸ் பற்றிய கேள்விக்கு கும்பிடு போட்டு கிளம்பிய எடப்பாடி…
பாமக உடனான கூட்டணியை எடப்பாடி பழனிசாமி உறுதி செய்த கையோடு, இன்று மாலை டெல்லி புறப்பட உள்ளதாக தெரிய வந்துள்ளது. ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் எஸ்பி வேலுமணி டெல்லிக்கு சென்றுள்ள நிலையில், எடப்பாடி பழனிசாமி அமித்ஷா மற்றும் பியூஷ் கோயல் ஆகியோரை சந்திக்க உள்ளதாக தெரிய வந்துள்ளது. இந்த சந்திப்பில் அதிமுக கூட்டணியில் பாஜகவுக்கான தொகுதி பங்கீடு தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என்றும் சொல்லப்படுகிறது.அண்மையில் தமிழ்நாடு வந்த மத்திய அமைச்சர் அமித்ஷாவை அதிமுக முன்னாள் அமைச்சர் […]
அன்புமணிக்கு ஒரு தகப்பனாக அனைத்தையும் செய்தேன்… கதறி அழுத ராமதாஸ்
ஒரு கும்பல் என்னை தூற்றுகிறது. என்னையும் கவுரவத் தலைவரைவும் ஒரு கும்பல் மிகக் கேவலமாக தூற்றுகிறது என ராமதாஸ் கண்ணீர் மல்க பேசினார். சேலத்தில் நடக்கும் பாமக செயற்குழுக் கூட்டத்தில் அக்கட்சியின் நிறுவனர் ராமதாஸ் பேச்சு… உலகத்தை ஒரு பிள்ளைக்கு தந்தை என்ன செய்வாரோ அதைவிட அதிகமாக நான் செய்துள்ளேன். நான் வளர்த்தவர்களை வைத்து ஒவ்வொரு நாளும் என்னை அவமானப்படுத்துகிறார்கள். என்னை வெட்டிகூட வீசியிருக்கலாம். ஆனால் ஒவ்வொரு நாளும் அவமானப்படுத்துகின்றனர். என்னை விட ஜி.கே. மணியை அவமானப்படுத்துகின்றனர். […]
இனி என் பெயர் – படத்தை பயன்படுத்தக் கூடாது -ராமதாஸ்..!
பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ், தைலாபுரம் பகுதியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், தேர்தல் ஆணையத்தை எதிர்த்துத் தாங்கள் வழக்குத் தொடுத்ததாகவும், ஆனால் “தானாகவே முன் வந்து பொய் மூட்டைகளை அவிழ்த்துவிடும் அன்புமணி தரப்பு ஆஜராகி வாதிட்டார்கள்” என்றும் தெரிவித்தார். இந்த வழக்கின் தீர்ப்பு தங்களுக்குச் சாதகமாக வந்துள்ளதாகவும், பாமகவைத் தான் உருவாக்கியதாகவும், எனவே கட்சியின் பெயரைச் சொல்லவோ, சொந்தம் கொண்டாடவோ யாருக்கும் அதிகாரம் இல்லை என்றும் அவர் திட்டவட்டமாகக் கூறினார். மேலும், “சொந்த தந்தையே எதிர்க்கும் […]
மாம்பழம் சின்னம் எங்களுக்கு ஒதுக்க வேண்டும்… ராமதாஸ் கடிதம்
மாம்பழம் சின்னத்தை எங்களுக்கு ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்துக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார். பீகார் சட்டப்பேரவைத் தேர்தலில் போட்டியிடப்போவதாக கூறி அன்பிமணி தரப்பு மாம்பழம் சின்னத்தை பெற்றது. பீகார் தேர்தல் நேற்றுடன் நிறைவடைந்த நிலையில் மாம்பழம் சின்னத்தை தமது தரப்புக்கு ஒதுக்கக் கோரி ராமதாஸ் கடிதம் எழுதியுள்ளார்.