ரூ.3,000 வாங்குபவர்களை குடிகாரர்கள் என்பதா?.. அன்புமணி மீது அமைச்சர் MRK பாய்ச்சல்

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அமைச்சர் எம்ஆர்கே பன்னீர்செல்வம் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழகத்தில் இருப்பவர்கள் அனைவருமே குடிகாரர்களா?… எது செய்தாலும், அதில் குற்றம் எனக் கூறிக்கொண்டு இங்கே கட்சி நடத்துகிறார்கள். பாஜகவின் ஏஜெண்டாக பாமக இருந்து கொண்டு பி-டீமாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. 3,000 ரூபாய் வாங்குபவர்களை குடிகாரர்கள் என அன்புமணி கூறுவது தமிழ்நாட்டு மக்களை கொச்சைப்படுத்தும் விதமாக உள்ளது. அன்புமணிக்கு வேண்டுமானால் 3,000 ரூபாய் சாதாரணமாக இருக்கலாம். ஆனால் நடுத்தர, ஏழை மக்களுக்கு இது ஒரு மிகப்பெரிய உதவியாக […]

பொங்கல் அதிரடி: அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கும் ரூ. 3,000 ரொக்கப்பரிசு – முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு!

தமிழ்நாட்டில் அனைத்து குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.3000 ரொக்கப் பணம் வழங்கப்படும் என்று முதல்வர் முக.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஏற்கனவே பொங்கல் பரிசுத் தொகுப்பு அறிவிக்கப்பட்ட நிலையில் ரொக்கப்பரிசு அறிவித்துள்ளனர். 2.23 கோடி குடும்பங்களுக்கு தலா ரூ.3,000 பொங்கல் பரிசு வழங்கப்படும். இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் உள்ள குடும்பத்தினருக்கும் பொங்கல் பரிசாக ரூ.3,000 வழங்கப்படும். இயற்கையின் முதன்மை வடிவாய் அமைந்த சூரியனுக்கும் உழவர்களின் உழைப்பிற்கு உறுதுணையாய் விளங்கும் கால்நடைகளுக்கும் உலக மக்களுக்கு உணவளித்துப் பசி […]

ரூ.3,000 பொங்கல் பரிசு வழங்க தமிழக அரசு திட்டம்

2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் ரூ.3,000 ரொக்கப் பரிசு வழங்க தமிழக அரசு ஆலோசித்து வருவதாக கூறப்பட்டது. ஏற்கனவே ரூ.5,000 வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது அந்த தொகை ரூ.3,000-ஆக வழங்க வாய்ப்புள்ளதாக தலைமை செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்னும் சில வாரங்களில் பொங்கல் பண்டிகை வரவுள்ளதால், இதற்கான நிதி ஒதுக்கீடு மற்றும் பயனாளிகள் பட்டியல் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு முதலமைச்சரால் விரைவில் வெளியிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.