லஞ்சம் வாங்கிய வி.ஏ.ஓ. கைது

துணை முதல்வர் வழங்கிய இலவச வீட்டு மனை பட்டாவை ஆன்லைனில் பதிவேற்றம் செய்ய லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலரை, லஞ்ச ஒழிப்பு போலீசார் கையும் களவுமாகப் பிடித்துக் கைது செய்தனர். திருவள்ளூர் மாவட்டம் குமாரசேரி பகுதியைச் சேர்ந்த 12 பேருக்கு, சமீபத்தில் திருவேற்காட்டில் நடைபெற்ற அரசு விழாவில் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் இலவச வீட்டு மனை பட்டாக்களை வழங்கினார். இந்தப் பட்டாக்களை முறையாக அரசு இணையதளத்தில் (Online) பதிவேற்றம் செய்வதற்காக, பயனாளிகள் குமாரசேரி கிராம […]

கடைக்கு லைசென்ஸ்… ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேளாண்மை அதிகாரி கைது

ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் தாலுகாவை சேர்ந்த ஒருவர், முதுகுளத்தூரில் கடந்த மாதம் புதிதாக உரிமம் பெற்று பூச்சிக்கொல்லி மருந்து கடை நடத்தி வருகிறார். முதுகுளத்தூர் வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் அந்த நபரின் கடைக்கு வந்து, நான்தான், உனக்கு உரிமம் கொடுத்த அதிகாரி. எனக்கு அலுவலக செலவுக்கு ரூ.15 ஆயிரம் கொடுக்குமாறு கேட்டுள்ளார். பின்னர் 2 நாட்களுக்கு முன்பு வேளாண்மை உதவி இயக்குநர் கேசவராமன் கடைக்காரருக்கு போன் செய்து ரூ.15 ஆயிரத்தை கேட்டுள்ளார். பேரம் பேசியதில் கடைசியாக […]

ரூ.1000 லஞ்சம்-திருச்சியில் வட்டார போக்குவரத்து அதிகாரி கைது

திருச்சியை சேர்ந்தவர் பழனியப்பன். இவர் தனக்கு லைசன்ஸ் எடுக்க அங்குள்ள ஒரு புரோக்கர் மூலம் திருச்சி பிராட்டியூரில் உள்ள மேற்கு வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு சென்றார்.அங்கு மோட்டார் வாகன ஆய்வாளராக பணியாற்றி வந்த மணி பாரதி என்பவரிடம் விண்ணப்பம் செய்தார். அப்போது அவர் லைசன்ஸ் எடுப்பதற்கு முன்னதாக எல் எல் ஆர்(பழகுணர் உரிமம்) எடுக்க வேண்டும் அதற்கு நீங்கள் ரூ.1000 லஞ்சம் தர வேண்டும் என்று கூறியுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத பழனியப்பன் இது குறித்து திருச்சி […]

பட்டா மாறுதலுக்கு ரூ.13,000 லஞ்சம்… விஏஓ கைது

ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி சார்பதிவாளர் அலுவலகத்தில் ஒருவர் தனது தாயார் பெயரில் இடத்தை கிரையம் செய்துள்ளார். பெயர் கூற விரும்பாத புகார்தாரர் தனது தாயார் பெயரில் பட்டா பெயர் மாறுதல் செய்ய வேந்தோணி விஏஓ கருப்புசாமி (58) தொடர்பு கொண்டுள்ளார். அப்போது என்னிடம் வரவில்லை, வந்தவுடன் சொல்கிறேன் என கூறி மனுதாரரின் போன் நம்பரை வாங்கியுள்ளார். தொடர்ந்து மனுதாரரின் மொபைல் எண்ணுக்கு பட்டா பெயர் மாறுதலாகி விட்டதாக மெசேஜ் வந்ததாக அழைத்துள்ளார். பின்னர் நான் பரிந்துரை செய்ததால் […]

வாரிசு சான்றிதழுக்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம்… வி.ஏ.ஓ கைது…

கரூர் மாவட்டம் குளித்தலை அருகே மகாதானபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் செல்வராஜ் மகன் சதீஷ்(36). இவர் கட்டுமான வேலை பார்த்து வருகிறார். இவரது தாயார் வீரம்மாள் இறந்துவிட்டார். வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக சதீஷ் கிருஷ்ணராயபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தை அணுகினார்.மகாதானபுரம் வடக்கு விஏஓ பிரபு(46) என்பவர் வாரிசு சான்றிதழ் வழங்குவதற்கு ரூ.3 ஆயிரம் லஞ்சம் கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விரும்பாத சதீஷ், கரூர் லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் ரசாயனம் தடவிய ரூ.3 ஆயிரம் […]

லஞ்சம் வாங்கிய வருவாய் ஆய்வாளர் கைது

கடலூர் மாவட்டம், திருமுட்டம் தாலுக்கா, தோப்புத் தெரு பகுதியை சேர்ந்தவர் நேரு இவரின் மாமனார் நாகராஜன். இவருக்கு விருத்தாசலம் வருவாய் வட்டம், கோட்டுமுளை கிராமத்தில் 8.50 செண்ட் நிலம் உள்ளது. இந்நிலத்திற்கான பட்டா அந்நிலத்தின் பக்கத்து நிலத்தின் உரிமையாளரான சங்கரன் என்பவரில் தவறாக இருந்துள்ளது. அதனை சரிசெய்ய மேற்படி நாகராஜன் விருத்தாசலம் வருவாய் கோட்டாட்சியர் அலுவலகத்தில் மனு செய்துள்ளார். இந்த மனுகுறித்து விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அறிக்கை அளிக்க விருத்தாசலம் வருவாய் வட்டாட்சியர் அலுவலகத்தில் பணிபுரியும் முதுநிலை […]

லஞ்சம் வாங்கிய வழக்கு… செயல் அலுவலருக்கு 2 ஆண்டு சிறை…

திருச்சி மாவட்டம், மணப்பாறை மாரியம்மன் கோவிலில் கடந்த 2021ம் வருடம் மணிகண்டன் என்பவர் மொட்டை அடிக்கும் தொழில் செய்து வந்தார். மணிகண்டனிடம் கோவில் செயல் அலுவலர் வினாயகவேல் கோவிலில் தொடர்ந்து மொட்டை அடிக்கும் தொழில் செய்ய ரூ.700ஐ லஞ்சமாக கேட்டுள்ளார். லஞ்சம் கொடுக்க விருப்பமில்லாத மணிகண்டன் திருச்சி ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு ஆய்வாளர் பிரசன்னவெங்கடேஷிடம் புகார் செய்துள்ளார். வினாயகவேலை பிரசன்னவெங்கடேஷ் கையும் களவுமாக பிடித்து கைது செய்தார். இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது. […]