வடமாநிலத்தில் கடும் பனி.. சென்னையில் 7 விமானங்கள் ரத்து

டில்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடுமையான பனிமூட்டம் காரணமாக சென்னையில் 7 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. டெல்லி, உத்தரபிரதேசம் மற்றும் அரியானா உள்ளிட்ட வட மாநிலங்களில் கடந்த ஒரு வாரமாக கடுமையான பனிமூட்டம், மோசமான வானிலை தொடர்ந்து நிலவி வருகிறது. இதனால், சென்னையில் இருந்து டெல்லி, கொல்கத்தா, வாரணாசி உள்ளிட்ட இடங்களுக்கு இயக்கப்படும் விமானங்கள், தொடர்ந்து பல மணி நேரம் காலதாமதம், விமானங்கள் ரத்து போன்றவைகள் ஏற்படுகின்றன. இந்தநிலை இன்றும் தொடர்கிறது. அதன் அடிப்படையில் சென்னையில் 7 விமானங்கள் […]

வடமாநிலங்களில் கடும் பனிப்பொழிவு

கடந்த ஆண்டுகளை விட இந்த ஆண்டு இந்தியாவின் வடமாநிலங்கள் அதிகப் படியான பனிப்பொழிவை எதிர்கொண்டு வருகின்றன. காஷ்மீரில் வெப்பநிலை மைனஸ் 4.2 டிகிரியாக குறைந்துள்ளது. இதனால் தெற்கு காஷ்மீர் பகுதியான ஷோபியன் உறைந்த பகுதியாக மாறியுள்ளது. இமாச்சலப் பிரதேசத்தில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால் அங்குள்ள பல நீர் நிலைகள் மற்றும் அருவிகள் உறைந்துபோய் பனிக்கட்டிகளாக காட்சி அளிக்கின்றன. டெல்லியிலும் கடும் பனிப்பொழிவு ஏற்பட்டுள்ளது. மூடுபனி போல் உள்ளதால் சாலையில் எதிரே வரும் வாக னங்கள் சரிவர […]