வாக்காளர் பட்டியலில் 1.63 லட்சம் போலி பெயர்கள்: 7 அதிகாரிகள் சஸ்பெண்ட் – தேர்தல் ஆணையம் அதிரடி
வாக்காளர் பட்டியலில் முறைகேடு செய்த 7 அதிகாரிகள் மீது தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது. மேற்குவங்க மாநிலத்தில் நடைபெற உள்ள சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர் பட்டியலைச் சரிசெய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்தப் பணிகளின் போது சுமார் 1.63 லட்சம் தகுதியற்ற வாக்காளர்கள் பட்டியலில் சேர்க்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. குறிப்பாக வங்கதேசம் எல்லையை ஒட்டியுள்ள கூச் பெஹார், மால்டா, முர்ஷிதாபாத் மற்றும் வடக்கு, தெற்கு 24 பர்கானா ஆகிய 5 மாவட்டங்களில் போலி ஆவணங்களைப் […]
தமிழக இறுதி வாக்காளர் பட்டியல் பிப்ரவரி 23 வெளியீடு : தேர்தல் ஆணையம் அறிவிப்பு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகள் (எஸ்.ஐ.ஆர்.) கடந்த நவம்பர் மாதம் 4-ந்தேதி தொடங்கியது. எஸ்.ஐ.ஆர். பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பெயர்கள் நீக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து முன்பு 6.41 கோடி என்றளவில் இருந்த வாக்காளர் எண்ணிக்கை 5.44 கோடி என்றளவில் குறைந்தது.இறந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 26 லட்சத்து 94 ஆயிரத்து 672 பேர், நிரந்தரமாக இடம் பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காதவர்கள் 66 லட்சத்து 44 […]
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீட்டிக்கப்பட்ட அவகாசம் நாளையுடன் நிறைவு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க நீட்டிக்கப்பட்ட அவகாசம் நாளையுடன் (ஜன. 30) முடிகிறது. வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க தமிழகத்தில் இதுவரை 16.02 லட்சம் பேர் மனு அளித்துள்ளனர். எஸ்ஐஆர் பணிகளுக்கு பின் வெளியான வரைவு வாக்காளர் பட்டியலில் 97.38 லட்சம் பேர் நீக்கப்பட்டிருந்தனர். 6.41 கோடியாக இருந்த தமிழக வாக்காளர்களின் எண்ணிக்கை எஸ்ஐஆர் பணிக்கு பின் 5.43 கோடியாக குறைந்தது. ஜன.18ஆம் தேதியுடன் முடிவடைந்த பெயர் சேர்ப்பு பணியை ஜன. 30 வரை நீட்டித்து […]
தமிழக வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க ஜனவரி 30 வரை கால அவகாசம் நீட்டிப்பு
தமிழகத்தில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் இந்திய தேர்தல் ஆணையம் தீவிர வாக்காளர் திருத்தப் பணிகளை மேற்கொண்டது. இதனைத் தொடர்ந்து கடந்த மாதம் 19-ஆம் தேதி வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில், 97 லட்சத்திற்கும் மேற்பட்ட பெயர்கள் நீக்கப்பட்டு, மொத்தம் 5 கோடியே 43 லட்சத்து 76 ஆயிரத்து 755 வாக்காளர்கள் இடம் பெற்றிருந்தனர். இதில் 66 லட்சம் பேர் இடம் மாறிச் சென்றவர்களாகக் காட்டப்பட்ட நிலையில், விடுபட்டவர்கள் மற்றும் புதிய வாக்காளர்களைச் சேர்க்க கடந்த டிசம்பர் […]
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பபு- கால அவகாசம் நாளையுடன் நிறைவு
தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணிகளை தொடர்ந்து வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 97.37 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்பட்டன. இதன்படி, உயிரிழந்த வாக்காளர்கள் 26,95,672 பேர், இடம்பெயர்ந்தோர் மற்றும் குறிப்பிட்ட முகவரியில் வசிக்காத 66,44,881 பேர், இரட்டை பதிவு வாக்காளர்கள் 3,98,278 பேர் என மொத்தம் 97 லட்சத்து 37 ஆயிரத்து 831 வாக்காளர்களின் பெயர்கள் நீக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து, பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கடிச.19ம் தேதி முதல் ஜன 18ம் […]
வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம்… கலெக்டர் ஆய்வு
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் கந்தர்வகோட்டை அரசு நடுநிலைப் பள்ளியில் நடைபெற்றுவரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் ,2026ன் சிறப்பு முகாமினைஆட்சியர் மு.அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். உடன் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் க.பிரேமலதா உள்ளார்.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம்
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 4 நாட்கள் சிறப்பு முகாம் நடைபெறுகிறது என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் அறிவித்து உள்ளார்.தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியலில் சிறப்பு தீவிர திருத்தம் மேற்கொள்ளப்பட்டு, வரைவு வாக்காளர் பட்டியல் கடந்த 19-ந்தேதியன்று வெளியிடப்பட்டது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டதைத் தொடர்ந்து, ஏற்புரைகள் மற்றும் மறுப்புரைகள் பெறும் காலம் அடுத்த […]
வாக்காளர் பட்டியல் திருத்த பணி…வாக்குச்சாவடி நிலை அலுவலர் தற்கொலை
உத்தரபிரதேச மாநிலம் முராதாபாத் மாவட்டத்தை சேர்ந்த ஆசிரியர் சர்வேஷ் சிங். இவர் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப்பணியில் வாக்குச்சாவடி நிலை அலுவலராக பணியாற்றி வந்தார். இவர் கடந்த அக்டோபர் 7ம் தேதி முதல் இந்த பணி மேற்கொண்டு வந்த நிலையில் அவருக்கு பணிச்சுமை ஏற்பட்டுள்ளது. இதனால் விரக்தியடைந்த சர்வேஷ் சிங் நேற்று தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். வீட்டிற்கு வந்த அவரது மனைவி அறையை திறந்து பார்த்தபோது சர்வேஷ் தூக்கில் தொங்கிய நிலையில் […]