பானி பூரிக்கு ஆசைப்பட்ட பெண்… வாயை மூட முடியாமல் தவித்த பரிதாபம்
உத்தரப் பிரதேச மாநிலம், ஔரையா மாவட்டத்தில் திபியாபூர் பகுதியைச் சேர்ந்தவர் இன்கலா தேவி (42) இவர் பானி பூரி சாப்பிடுவதற்காக வாயைத் திறந்தபோது அவரது தாடை விலகியதாக கூறப்பட்டது. தாடை விலகியதால் கடும் அவதி அடைந்தார். இதனையடுத்து வாயை மூட முடியாமல் தவித்த தேவியை அவரது உறவினர்கள் முதலில் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். மருத்துவர்கள் மனோஜ் குமார் மற்றும் சத்ருகன் சிங் ஆகியோர் தாடையை மீண்டும் அதன் இடத்திற்குக் கொண்டு வர முயற்சித்தனர், ஆனால் […]