கத்தரிக்காய் விலை கடும் வீழ்ச்சி..விவசாயிகள் கவலை

தென்காசி, ஆலங்குளத்தில் கத்திரிக்காய் விலை கடும் வீழ்ச்சி அடைந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். ஜனவரியில் 40 கிலோ மூட்டை ரூ.3000 வரை விற்பனையான கத்திரிக்காய் தற்போது ரூ.300 வரை விலை வீழ்ச்சி அடைந்துள்ளது. கத்திரிக்காய் விளைச்சல் அதிகரித்தாலும் போதிய விலை கிடைக்கவில்லை என விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர்.

மின் இணைப்பு இல்லை- புதிய நெல் கொள்முதல் நிலையத்தில் கிடக்கும் நெல்மணிகள்

புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்திற்கு மின் இணைப்பு வழங்கப்படாததால் கொள்முதல் செய்வதில் தாமதம் இரண்டு நாட்களுக்கு மேலாக காத்திருக்கும் விவசாயிகள். தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா தாலடி சாகுபடி சுமார் மூன்று லட்சம் ஏக்கரில் செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது சம்பா அறுவடை பணிகள் மாவட்ட முழுவதும் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது. விவசாயிகள் அறுவடை செய்த நெல்மணிகளை நேரடி நெல் கொள்முதல் நிலையங்களுக்கு விற்பனைக்கு சென்று கொண்டுள்ள நிலையில் தஞ்சாவூர் அருகே வேங்கராயன் குடிக்காடு […]

தொடர் கனமழை-நீரில் மூழ்கிய பயிர்கள்.. தஞ்சை விவசாயிகள் வேதனை

தஞ்சாவூர் மாவட்டத்தில் அதிகாலை முதல் இடைவிடாமல் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த கனமழை காரணமாக பல்வேறு பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட சம்பா தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. இதே போல் தஞ்சாவூர் மாவட்டம் அம்மாபேட்டை அருகே புத்தூர் பகுதிகளில் சாகுபடி செய்யப்பட்ட ஒரு மாதமே ஆன இளம் சம்பா தாளடி பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. ஏற்கனவே கடந்த தின சில தினங்களுக்கு முன்பு பெய்த மழையால் பயிர்கள் மூழ்கிய நிலையில், தற்போது பெய்து வரும் […]