ஸ்ரீரங்கம் கோயில் உண்டியலில் ரூ.2 கோடியே 20லட்சம் காணிக்கை

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோவிலுக்கு தினமும் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவது வழக்கம் அந்த பக்தர்கள் கோவிலில் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ள உண்டியல்களில் காணிக்கையாக தங்கம் வெள்ளி மற்றும் ரொக்கத்தை உண்டியலில் செலுத்துவது வழக்கம் அவ்வாறு செலுத்தப்படும் காணிக்கைகள் மாதம் தோறும் எண்ணப்படுவது வழக்கம் அதன்படி இன்று மாதாந்திர உண்டியல்கள் திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய உண்டியல் காணிக்கைகள் கருடாழ்வார் மண்டபத்தில் கோயில் பணியாளர்கள் மற்றும் தன்னார்வலர்கள் மூலமாக என்ன பட்டது… கடந்த டிசம்பர் […]

திருச்சி வழியாக சிறப்பு ரயில் அறிவிப்பு

குடியரசு தின விழா கூட்ட நெரிசலை குறைப்பதற்காக, தாம்பரத்திலிருந்து திருச்சி வழியாக செங்கோட்டைக்கு சிறப்பு ரயில் இயக்கப்பட உள்ளது. இந்த ரயிலானது இன்று (ஜன.24) இரவு 11:50 மணிக்கு, 23 பெட்டிகளுடன் தாம்பரத்தில் இருந்து புறப்பட்டு ஸ்ரீரங்கம், திருச்சி வழியாக நாளை (ஜன.25) காலை 11:40 மணிக்கு செங்கோட்டை சென்றடையும் என திருச்சி கோட்ட ரயில்வே நிர்வாகம் தெரிவித்துள்ளது.

பழைய சென்டரல் பஸ் ஸ்டாண்டை, பெரம்பலூர் பஸ் ஸ்டாண்டாக்க கோரிக்கை

சத்திரம் பேருந்து நிலையத்தில் இருக்கும் அரியலூர் பெரம்பலூர் பேருந்துகளை மத்திய பேருந்து நிலையத்திற்கு மாற்றுங்கள்? பிளீஸ்… திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து அரியலூர் பெரம்பலூர் ஜெயங்கொண்டம் ஆகிய அரசு மற்றும் தனியார் பேருந்துகள் அங்கிருந்து புறப்படுகின்றன பேருந்துகள் அனைத்தும் அவர்களது நேரத்திற்கு முன்பாகவே அங்கு வந்து நிறுத்துவதன் காரணமாக சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து ஸ்ரீரங்கம் லால்குடி மண்ணச்சநல்லூர் சமயபுரம் ஆகிய பகுதிகளுக்கு செல்லும் பேருந்துகள் அஸ்வின் ஸ்வீட்ஸ் கடை அருகே திரும்ப முடியாமல் சிரமப்படுகின்றனர். இதன் காரணமாக […]

ஸ்ரீரங்கத்தில் எடப்பாடி போட்டி… சன்னாசிப்பட்டி கனகராஜ் விருப்ப மனு

அதிமுக பொதுச்செயலாளர் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி கே பழனிச்சாமி 2026 சட்டமன்ற தேர்தலில் ஸ்ரீரங்கம் மற்றும் மணப்பாறை தொகுதிகளில் போட்டியிட வேண்டி திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட புரட்சித்தலைவி பேரவை இணைச் செயலாளர் ஏ. கனகராஜ் தலைமை கழகமான புரட்சித்தலைவர் எம்ஜிஆர் மாளிகையில் அண்ணா தொழிற்சங்க பேரவை செயலாளர் ஆர். கமலக்கண்ணனிடம் விருப்பமனு வழங்கினார்.

ஸ்ரீரங்கம் கோவிலில் சொர்க்கவாசல் திறப்பு-லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் திருக்கோயிலில் வைகுண்ட ஏகாதசியின் முக்கிய நிகழ்வான சொர்க்கவாசல் இன்று அதிகாலை திறக்கப்பட்டது – லட்சக்கணக்கான பக்தர்கள் தரிசனம்.. 108 வைணவ திருதலங்களில் முதன்மையானதும், பூலோக வைகுண்டம் என அனைவராலும் போற்றப்படும் சிறப்புகளை பெற்றது திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோயில் ஆகும். இங்கு ஆண்டுதோறும் பல்வேறு விழாக்கள் கொண்டாடப்படும். இதில் முக்கியமான விழாவாக கருதப்படும் வைகுண்ட ஏகாதசி திருவிழா கடந்த 19ம்தேதி இரவு திருநெடுந்தாண்டகத்துடன் துவங்கியது. தொடர்ந்து திருமொழி திருநாள் எனப்படும் பகல்பத்து உற்சவம் […]

ஸ்ரீரங்கம் கோவிலில் போலீசார் குவிப்பு…

ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலில் வைகுண்ட ஏகாதசி பெருவிழா கடந்த 10 நாட்களாக நடைபெற்று வருகிறது. இவ்விழாவின் உச்ச நிகழ்ச்சியான சொர்க்கவாசல் திறப்பு நாளை அதிகாலை நடக்க இருக்கும் நிலையில், இன்று (டிச.29) அதிகாலை முதலே திருச்சி மற்றும் பிற மாவட் டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான போலீசார் ஸ்ரீரங்கத்தில் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

ஸ்ரீரங்கம் பகல் பத்து 5ம் நாள்..நம்பெருமாள் வைரக்கல் ரங்கூன் அட்டிகையுடன் சேவை

அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் வைகுந்த ஏகாதசி பெருவிழாபகல் பத்து ஐந்தாம் திருநாள் அர்ஜுன மண்டபத்தில் திருமாலை பிரபந்தம் செவிமடுக்க சௌரிக் கொண்டை சாற்றி ; அதில் புஜ கீர்த்தி; இரு வெள்ளை கல் வில்வ பத்ர பதக்கம்; முத்து பட்டை ; முல்லை பூ சரம் சுற்றி ; வைர‌அபய ஹஸ்தம் சாற் றி; அதில் தங்க கோலக்கிளி எடுத்து ; கீழே தொங்கல் பதக்கம் ஆட ; திருமார்பில் – ஸ்ரீ ரங்க […]

ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து 4ம் நாள்.. சிகப்புக் கல் சூர்ய பதக்கம் அணிந்து நம்பெருமாள் சேவை

ஸ்ரீரங்கத்தில் பகல் பத்து நான்காம் நாள்; செந்தூர பட்டுடுத்தி நம்பெருமாள் சேவை அருள்மிகு ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி திருக்கோயில் நம்பெருமாள் திருஅத்யயன வைகுந்த ஏகாதசி பெருவிழா பகல் பத்து நான்காம் திருநாள். அர்ஜுன மண்டபத்தில் நம்பெருமாள் இன்று நிருமொழித் திருநாள் (பகல் பத்து) 4 ஆம் நாளில் – பெருமாள் திருமொழிக்காக கல் இழைத்த அரைக் கொண்டை சாற்றி ; அதில் சிறிய நெற்றி சுட்டி சாற்றி; மகர கர்ண பத்ரம் அணிந்து ; வைர‌அபய ஹஸ்தம் […]

ஸ்ரீரங்கம் லாட்ஜில் 4 பேர் தற்கொலை -பரபரப்பு

திருச்சியின் ஸ்ரீரங்கத்தில், தஞ்சையை சேர்ந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் லாட்ஜ் ஒன்றில் தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் இன்று வெளிச்சத்திற்கு வந்துள்ளது. தஞ்சாவூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் (தந்தை, தாய் மற்றும் இரண்டு மகள்கள்), கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஸ்ரீரங்கத்தில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்துத் தங்கியுள்ளனர். இன்று காலை நீண்ட நேரமாகியும் அவர்கள் தங்கியிருந்த அறை கதவு திறக்கப்படவில்லை. ஊழியர்கள் பலமுறை தட்டியும் பதில் […]

ஸ்ரீரங்கத்தில் அனுமதியின்றி மணல் திருட்டு

திருச்சி சென்னை சர்வீஸ் ரோடு பகுதியில் இரணியன் அம்மன் கோவில் அருகில் திருவரங்கம் சப்-இன்ஸ்பெக்டர் ரவி வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்பொழுது அந்த வழியாக வந்த ஒரு வேனை நிறுத்தி சோதனை செய்தபோது அனுமதி இன்றி மணல் ஏற்றி வந்தது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் வேன் டிரைவரை பிடிக்க முயன்ற போது அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார்.இதையடுத்து மணல் ஏற்றி சென்ற வேனை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர். இதே போன்று பொன்னி டெல்டா அடுக்குமாடி குடியிருப்பு அருகில் காவேரி […]

ஸ்ரீரங்கம் கோயிலில் சகஸ்ர தீபம்- நாளை துவங்கி வைக்கிறார் அமைச்சர் சேகர்பாபு

ஸ்ரீரங்கம், காட்டழகிய சிங்கப்பெருமாள் கோவிலில் லெட்சுமி நரசிம்மர் சன்னதியில் 24ம் ஆண்டு சகஸ்ர தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நாளை 23ம் தேதி ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது. இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் 24வது பீடம் ஸ்ரீ ஸ்ரீ ஸ்ரீ சடகோப ராமானுஜ ஜீயர் சுவாமி மங்களா சாசனத்துடன் சுவாமி முன்னிலையில் தமிழக இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர் பாபு குத்து விளக்கேற்றி சர ஸ்ர தீப நிகழ்ச்சியை தொடங்கி வைக்கிறார். முன்னதாகநாளை காலை நாதஸ்வர […]