புதுகை-புதிய தார்சாலை அமைக்கும் பணி-அமைச்சர்கள் அடிக்கல்
புதுக்கோட்டை மாவட்டம் புதுக்கோட்டை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட பட்டத்திக்காடு மற்றும்கரு.வடதெரு பகுதிகளில் நெடுஞ்சாலை துறையின் சார்பில் புதுக்கோட்டை நெடுஞ்சாலை (நபார்டு )கிராம சாலைகள் மூலம் புதிதாக அமைக்கப்படவுள்ள தார்சாலை அமைக்கும் பணிகளுக்கு இயற்கை வளங்கள் துறை அமைச்சர் எஸ்.ரகுபதி, பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன், ஆகியோர் அடிக்கல் நாட்டினர். உடன் புதுக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் வை.முத்துராஜா, முன்னாள் அரசு வழக்கறிஞர் கே.கே.செல்லபாண்டியன், மற்றும் த.சந்திரசேகரன்,தல.பாஞ்சாலன்,மு.க.ராமகிருஷ்ணன், உள்ளிட்ட பலர் உள்ளனர்.
தஞ்சை பெரிய கோவிலில் தரைதளம் அமைக்கும் பணி
தஞ்சாவூர் பெரிய கோயிலில் மழைநீர் தேங்காத வகையில், இந்திய தொல்லியல் துறை சார்பில் தரைதளம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கோயில் கோபுரத்துக்கு அதிர்வு ஏற்படாதபடி தொழிலாளர்கள் உளி, சுத்தியலால், பழைய தரைதளத்தை அகற்றி வருகின்றனர். உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு நாள்தோறும் ஏராளமான சுற்றுலாப் பயணிகள் வந்து, கோயிலில் உள்ள கல்வெட்டுகளும், சிற்பங்களையும் பார்த்து வியந்து செல்கின்றனர்.இந்நிலையில் கோயிலின் உள்பிரகாரத்தில் பல இடங்களிலும் மழைநீர் தேங்கியதால், சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல முடியாமலும், […]
புதிய தார் சாலை அமைக்கும் பணி.. தஞ்சை மேயர் நேரில் ஆய்வு
தஞ்சை மாநகராட்சி கோடியம்மன் கோவில் அருகே சுங்காதிடல் பகுதியில் சாலை குண்டு குழியுமாக இருந்தது . இந்த சாலையை தினமும் ஏராளமான பொதுமக்கள் பயன்படுத்துகின்றனர். எனவே குண்டும் குழியுமான சாலையை மாற்றி புதிதாக தார்சாலை அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர் .இதனைத் தொடர்ந்து புதிய சாலை அமைக்க நிதி ஒதுக்க வேண்டும் என்று தமிழ்நாடு அரசுக்கு மாநகராட்சி நிர்வாகம் கோரிக்கை விடுத்தது. இதையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் , துணை முதலமைச்சர் , துறை அமைச்சர் […]