கலைஞரின் கனவு திட்டத்தில் மேலும் 1 லட்சம் வீடுகள்..! அமைச்சர் தங்கம் தென்னரசு

2026-2027 ம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்வதற்காக தமிழக சட்டப் பேரவை இன்று (செவ்வாய்கிழமை) மீண்டும் கூடியது. காலை 9.30 மணிக்கு தமிழ்நாடு நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

விடியல் பயணம் மூலம் மகளிர் மாதந்தோறும் ரூ.888 சேமிப்பு- அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழக அரசின் 2026-27ம் நிதி ஆண்​டுக்​கான இடைக்​கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்தார். அதில் அவர் பேசியது, *மகளிர் உரிமைத் தொகை திட்டம் இந்தியாவின் முன்னோடி திட்டமாக திகழ்கிறது. இந்த திட்டத்தை பிற மாநிலங்களும் பின்பற்றுவதே இத்திட்டத்தின் வெற்றி. எதிர்வரும் மாதங்களிலும் தடையின்றி கிடைத்திடும் வகையில் அண்மையில் மூன்று மாதங்களுக்கான உரிமைத் தொகையோடு கோடைகால சிறப்புத் தொகையும் சேர்த்து 5 ஆயிரம் ரூபாய் விடுவிக்கப்பட்டுள்ளது. இந்த தொகை செலுத்தும் போது தமிழ்நாடே இன்ப அதிர்ச்சி […]

திமுகதான் ஆட்சிக் கட்டிலில் அமரும்-அமைச்சர் தங்கம் தென்னரசு

விருதுநகர் மாவட்டத்தில் நடைபெறும் தென் மண்டலக் கழக இளைஞர் அணி நிர்வாகிகள் சந்திப்புக் கூட்டத்தில் தமிழ்நாடு அமைச்சர் தங்கம் தென்னரசு பேசினார். அதில், “இனி எத்தனை தேர்தல்கள் வந்தாலும் திமுகதான் ஆட்சிக் கட்டிலில் அமரும்,”இவ்வாறு தெரிவித்தார்.

சிவகாசி ரயில் நிலையத்தில் இந்தித் திணிப்பு: அமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்

தொழில் நகரமான சிவகாசியில் பட்டாசு, தீப்பெட்டி மற்றும் அச்சுத் தொழில்கள் உலகப் புகழ்பெற்றவை. இந்த வர்த்தக நிமித்தமாக இந்தியா முழுவதிலும் இருந்து நாள்தோறும் ஏராளமான வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் சிவகாசி ரயில் நிலையத்திற்கு வந்து செல்கின்றனர். சிவகாசி ரயில் நிலையத்தைத் தரம் உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று, மாணிக்கம் தாகூர் எம்.பி-யின் முயற்சியால் கடந்த சில வாரங்களாக அங்கு மேம்பாட்டு மற்றும் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், ரயில் நிலைய நடைமேடையில் புதிதாக வைக்கப்பட்டிருந்த […]

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 16% அதிகரிப்பு.. அமைச்சர் தங்கம் தென்னரசு

தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 16 சதவீதமாக அதிகரித்துள்ளதாக அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காலநிலை மாற்றத்துக்கான நிர்வாகக் குழுவின் 3வது கூட்டம் இன்று தொடங்கியது. இந்த கூட்டத்தில் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் பாதிப்புகள் தொடர்பாக ஆலோசனை வழங்க தமிழக அரசு குழு அமைந்தது. இந்த நிலையில் செய்தியாளர் சந்தித்த அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், 16% பொருளாதார வளர்ச்சி – சாதித்த தமிழ்நாடு தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சி விகிதம் 16 சதவீதமாக […]