வங்காளதேசத்தில் அரசியல் வன்முறை உச்சம்: தேசிய கட்சி இளைஞர் தலைவர் சுட்டுக்கொலை
வங்காளதேசத்தில் ஷேக் ஹசீனா தலைமையிலான ஆட்சி கவிழ்ந்து, பேராசிரியர் முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு செயல்பட்டு வரும் நிலையில், அங்கு அரசியல் படுகொலைகளும் வன்முறைகளும் தொடர்ந்து அதிகரித்து வருகின்றன. தலைநகர் டாக்காவின் தேஜ்துரி பஜார் பகுதியில் நேற்று இரவு 8.40 மணியளவில், வங்காளதேச தேசிய கட்சியின் இளைஞர் தலைவரான அஜிஜூர் ரகுமான் முசாபீர் மர்ம நபர்களால் துப்பாக்கியால் சுடப்பட்டு படுகொலை செய்யப்பட்டார். பஷுந்தரா மார்க்கெட்டுக்கு பின்னால் நடந்த இந்தத் தாக்குதலில் அவருடன் இருந்த மற்றொரு நபரும் […]