அரியமங்கலத்தில் கார் டிரைவரை தாக்கிய 2 பேர் கைது
அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்தவர் கார்த்திகேயன் (45). கார் டிரைவரான இவருக்கும் அரியமங்கலம் காமராஜ் நகர் முத்துராமலிங்க தேவர் தெருவை சேர்ந்த யுவராஜ் (25), அரியமங்கலம் கணபதி நகரை சேர்ந்த பழனி தீபக் ( 21) ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இதன் காரணமாக கடந்த 23ந்தேதி (நேற்று) மதியம் கார்த்திகேயன் அரியமங்கலம் காமராஜ் நகரில் உள்ள ஓட்டலில் சாப்பிட்ட வந்துள்ளார். அப்போது அங்கு வந்த யுவராஜ் மற்றும் பழனி தீபக் இருவரும் கார்த்திகேயனை தகாத […]