சமயபுரம் கோவிலுக்குச் சென்று திரும்பியபோது விபத்து: அரியலூர் அருகே வேன் கவிழ்ந்து 14 பெண் பக்தர்கள் படுகாயம்

திருச்சி சமயபுரம் மாரியம்மன் கோவிலுக்குச் சென்றுவிட்டு வேனில் திரும்பிக் கொண்டிருந்த கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பக்தர்கள், அரியலூர் அருகே விபத்தில் சிக்கி படுகாயமடைந்தனர். கடலூர் மாவட்டம் சேத்தியாதோப்பு, குடலாயூத்தூர் மற்றும் காவாளக்கடி ஆகிய கிராமங்களைச் சேர்ந்த 16-க்கும் மேற்பட்டோர் இன்று காலை வேன் ஒன்றில் சமயபுரம் கோவிலுக்குச் சென்றுள்ளனர். வழிபாடுகளை முடித்துவிட்டு ஊர் திரும்பிக் கொண்டிருந்தபோது, அரியலூர் மாவட்டம் பொய்யூர் கிராமம் அருகே வேனின் டயர் திடீரென வெடித்தது. இதனால் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வேன், சாலையோரம் […]