புதுகையில் கண்காட்சி அரங்குகளை பார்வையிட்ட கலெக்டர்

புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டை ஊராட்சி ஒன்றியம் புதுநகர் ஊராட்சியில் குடியரசு தினத்தை யொட்டி நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் மு.அருணா கலந்து கொண்டு அங்கு அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்குகளை பார்வையிட்டார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர்பா. ஜெயசுதா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

புதுகை.. மாற்றுதிறனாளிகளிடம் கோரிக்கை மனுவை பெற்ற கலெக்டர்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரகத்தில் இன்று நடைபெற்ற மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் மு.அருணா மாற்றுத்திறனாளிகளிடம் இருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு குறைகளை கேட்டறிந்தார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் அ.கோ.ராஜராஜன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் பா.சூரியபிரபு மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.

மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கான ஆர்டரை கலெக்டர் வழங்கினார்

புதுக்கோட்டை மாவட்ட ஆட்சியரக கூட்டரங்கில் மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை யின்சார்பில்நடைபெற்ற மாவட்ட மீன்வளர்ப்போர்முகமை மேலாண்மை குழு கூட்டத்தில்ஆட்சியர் மு.அருணா கருணை அடிப்படையில் மீன்வள உதவியாளர் பணியிடத்திற்கு நேரடிபணிநியமன ஆணைகளை வழங்கினார் . உடன் திருச்சி மண்டல மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை துணை இயக்குநர் வெ.பிரபாவதி, புதுக்கோட்டை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறைஉதவி இயக்குனர் ந.பஞ்சராஜா மற்றும் அரசு அலுவலர்கள் பலர் உள்ளனர்.