இன்றுடன் SIR பணிகள் நிறைவு – இறுதி வாக்காளர் பட்டியல் தேதி அறிவிப்பு!

தமிழ்நாட்டில் சிறப்பு தீவிர சரிபார்ப்பு (Special Intensive Revision – SIR) பணிகள் இன்றுடன் (பிப்ரவரி 10) நிறைவடைகின்றன. இந்தப் பணிகள் காரணமாக மாநிலம் முழுவதும் வாக்காளர் பட்டியலில் பெரிய அளவிலான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. வரும் பிப்ரவரி 17ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதன்பிறகு தேர்தல் ஆணையத்தின் அனுமதியின்றி பெயர் சேர்ப்பு அல்லது நீக்கம் செய்ய முடியாது. சிறப்பு தீவிர சரிபார்ப்பு பணியின் போது வரைவு வாக்காளர் பட்டியலில் இருந்து மொத்தம் 97.37 […]

சென்னையில் 5 அடுக்கு பாதுகாப்பு- மெரினா கடற்கரை சிவப்பு மண்டலமாக அறிவிப்பு

சென்னை காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “வருகிற 26.01.2026 அன்று இந்திய குடியரசு தினத்தை முன்னிட்டு, தமிழக ஆளுநர் சென்னை, காமராஜர் சாலை – வாலாஜா சாலை சந்திப்பில் உள்ள மெரினா உழைப்பாளர் சிலை அருகே தேசிய கொடியேற்றி சிறப்பிக்க உள்ளார். இதனையொட்டி சென்னை, காமராஜர் சாலை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் 5 அடுக்கு பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. சென்னை பெருநகர காவல் ஆணையாளர் உத்தரவின் பேரில், காவல் கூடுதல் ஆணையாளர்கள் அறிவுரையின்பேரில், காவல் இணை ஆணையாளர்களின் […]

தனியார் வேலைவாய்ப்பு முகாம்- திருச்சி கலெக்டர் அறிவிப்பு

திருச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையம் சார்பில், தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் வரும் ஜன.24-ம் தேதி, வயலூர் சாலையில் உள்ள தனியார் கல்லூரியில் நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மதியம் 3 மணி வரை நடைபெறும் இம்முகாமில், 150க்கும் மேற்பட்ட தனியார் நிறுவனங்கள் கலந்து கொண்டு தகுதியுள்ள நபர்களை தேர்ந்தெடுக்க உள்ளனர். இந்த வாய்ப்பை வேலை நாடுநர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டுமென ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.

ஓய்வூதிய திட்டம் அறிவிப்பு.. பள்ளிகளில் ஆசிரியர்கள் இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

கடந்த 3 தேதி தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 22 ஆண்டுகளாக போராட்டத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கும் விதமாக தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட‌ ஓய்வூதியத் திட்டம் அறிவித்து ஆசிரியர்கள் அரசு ஊழியர்களை மகிழ்ச்சி கடலில் ஆழ்த்தினார். இது குறித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்க மாவட்ட செயலாளர் உதுமான் அலி கூறியதாவது:கடந்த 2006-ல் கருணாநிதி பெறுப்பேற்ற உடன் 53 ஆசிரியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்கி எங்கள் வாழ்வில் ஒளியேற்றி வைத்தார். அவரது புதல்வர் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 2026 -ல் […]

பிரபல கிரிக்கெட் வீரர் திடீர் ஓய்வு அறிவிப்பு

ஆஸ்திரேலிய வீரர் உஸ்மான் கவாஜா, இங்கிலாந்து அணிக்கு எதிரான கடைசி டெஸ்ட் போட்டியுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது;”கடந்த சில காலமாவே ஓய்வு குறித்து யோசித்து வந்தேன். இந்தத் தொடர் தொடங்குவதற்கு முன்பே, இதுதான் எனது கடைசித் தொடராக இருக்கும் என்ற உள்ளுணர்வு எனக்கு இருந்தது. பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டுடன் இதுபற்றிப் பேசினேன். 2027-ல் நடைபெறும் இந்தியச் சுற்றுப்பயணம் வரை நான் விளையாட […]

கிறிஸ்துமஸ் கிப்ட் – ராணுவ வீர‌ர்களுக்கு தலா ரூ.1.60 லட்சம்- டிரம்ப் அறிவிப்பு

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க ராணுவத்தில் பணியாற்றும் சுமார் 14.5 லட்சம் வீரர்களுக்கு கிறிஸ்துமஸுக்கு முன் தலா $1,776 (தோராயமாக ரூ.1.60 லட்சம்) வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இதை “வாரியர் டிவிடெண்ட்” (Warrior Dividend) என்று அழைத்த டிரம்ப், அமெரிக்காவின் சுதந்திரம் பெற்ற 1776-ஆம் ஆண்டை கௌரவிக்கும் வகையில் இந்தத் தொகை நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகக் கூறினார். “செக்குகள் ஏற்கனவே அனுப்பப்பட்டு விட்டன” என்று அவர் தேசிய தொலைக்காட்சி உரையில் தெரிவித்தார். டிரம்ப் இந்தத் தொகையை ராணுவ […]

நெருங்கும் டிட்வா புயல்… செங்கல்பட்டு மாவட்டம் உதவி எண்கள் அறிவிப்பு

தென்மேற்கு வங்கக்கடலில் வலுப்பெற்று வரும் டிட்வா (Ditwah) புயல் தமிழ்நாட்டை நோக்கி நகர்ந்து வருவதால், மயிலாடுதுறை, கடலூர், விழுப்புரம், செங்கல்பட்டு ஆகிய நான்கு மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையத்தின் (ஐஎம்டி) சமீபத்திய தகவலின்படி, புயலின் மையம் தற்போது சென்னைக்கு 400 கி.மீ. தென்கிழக்கே, புதுச்சேரிக்கு 300 கி.மீ. தென்கிழக்கே, காரைக்காலுக்கு 190 கி.மீ. தென்கிழக்கே உள்ளது. மணிக்கு 7 கி.மீ. வேகத்தில் வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (நவம்பர் 30) […]

நாளை முதல் SIR பணிகள் புறக்கணிப்பு..வருவாய்த்துறை சங்கம் அறிவிப்பு

தமிழ்நாடு வருவாய்த் துறை சங்கம், நாளை 18) தொடங்கும் சிறப்பு தீவிர திருத்தப்பணிகள் (Special Intensive Revision – SIR) வாக்காளர் பட்டியல் பணிகளை முழுமையாக புறக்கணிக்க முடிவு செய்துள்ளது. அதீத பணி நெருக்கடி மற்றும் கூடுதல் பணிப்பளுவை களைய வலியுறுத்தி இந்த போராட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. சங்கத்தின் அறிக்கையின்படி, கிராம நிர்வாக அலுவலர்கள், உதவியாளர்கள் உள்ளிட்ட அனைத்து வருவாய்த் துறை ஊழியர்களும் இதில் பங்கேற்பார்கள். SIR பணிகள் தொடர்பான ஆய்வுக் கூட்டங்கள், பணிகள் ஆகியவற்றை நாளை முதல் […]