SIR விவகாரம் வழக்கு… உச்சநீதிமன்றத்தில் மம்தா பானர்ஜி ஆஜர்

மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி இன்று உச்ச நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினார். மாநிலத்தில் இந்தியத் தேர்தல் ஆணையம் மேற்கொண்டு வரும் வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிரத் திருத்தப் பணிக்கு எதிராகத் தான் தாக்கல் செய்த மனு மீது தானே வாதிட அனுமதி கோரினார். மம்தா பானர்ஜி, வழக்கில் ஒரு தரப்பினராகத் தானே நேரில் ஆஜராகி வாதங்களை முன்வைக்க நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரி ஒரு இடைக்கால மனுவைத் தாக்கல் செய்துள்ளார். இந்த வழக்கை இந்தியத் தலைமை நீதிபதி […]

கரூர்- 4 போலீசார் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்.

கரூர் துயரச் சம்பவம் -சிபிஐ அலுவலகத்திற்கு, சம்பவத்தின் போது பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த 4 காவலர்கள் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் கூட்ட நெரிசல் காரணமாக 41 நபர்கள் உயிரிழந்தனர். இந்த நிலையில் இந்த வழக்கு விசாரணை சிபிஐக்கு மாற்றப்பட்டு சிபிஐ அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் இருந்த காவலர்கள் மற்றும் வேலுச்சாமிபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், […]

கரூர் வழக்கு-டில்லி சிபிஐ அலுவலகத்தில் தவெக நிர்வாகிகள் ஆஜர்

தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) மாநில மாநாட்டின் போது கரூரில் ஏற்பட்ட பயங்கர கூட்ட நெரிசல் மற்றும் அதில் 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கில், அக்கட்சியின் முக்கிய நிர்வாகிகள் இன்று டெல்லியில் உள்ள சிபிஐ (CBI) தலைமையகத்தில் விசாரணைக்கு ஆஜராகினர். சிபிஐ அனுப்பிய சம்மனின் அடிப்படையில், இன்று காலை 10:30 மணியளவில் பின்வரும் 4 நிர்வாகிகள் டெல்லி சிபிஐ அலுவலகத்திற்கு வந்தடைந்தனர்: புஸ்ஸி என். ஆனந்த் (தவெக பொதுச்செயலாளர்) ஆதவ் அர்ஜுனா (தவெக மாநிலத் துணைப் […]

சிபிஐ விசாரணை-ஆதவ், புஸ்ஸி, நிர்மல் ஆஜர்

கரூர் சிபிஐ அலுவலகத்திற்கு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் ஆனந்த், இணை பொது நிர்மல் குமார், தேர்தல் பிரிவு பொது செயலாளர் ஆதவ் அர்ஜுனா, மாவட்ட செயலாளர் மதியழகன், நிர்வாகி பவுன்ராஜ் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகி உள்ளனர். கரூர், வேலுச்சாமிபுரத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 110-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு […]

கரூர் நெரிசலில் சிக்கி காயமடைந்த 3 பேர் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்..

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் குறித்து உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது. கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து சிபிஐ அதிகாரிகள் கரூர் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். வேலுச்சாமிபுரம் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வியாபாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த காவல் துறையினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டனர். […]

கரூர் சம்பவம்.. தவெக வழக்கறிஞர் -2 நிர்வாகிள் சிபிஐ விசாரணைக்கு ஆஜர்

கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்தனர். இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் கடந்த மாதம் 17ஆம் தேதியிலிருந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் வேலுச்சாமிபுரம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள், வியாபாரிகள், பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினரிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தினர். மேலும், கரூர் கூட்ட நெரிசல் வழக்கு தொடர்பாக சிபிஐ அலுவலகத்தில் மூன்றாவது நாளாக ஆம்புலன்ஸ் […]

கரூர் சிபிஐ அலுவலகத்தில் ஆம்புலன்ஸ் டிரைவர்கள் ஆஜர்

கரூர் சிபிஐ அலுவலகத்தில் விசாரணைக்காக ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் 2 பேர் ஆஜராகி உள்ளனர். கரூர், வேலுச்சாமிபுரம் பகுதியில் செப்டம்பர் மாதம் 27ஆம் தேதி தவெக தலைவர் விஜய் பரப்புரையின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 நபர்கள் உயிரிழந்துள்ளனர். உச்ச நீதிமன்றம் சிபிஐ விசாரணை நடத்த உத்தரவிட்டது கரூரில் கடந்த மாதம் 17ம் தேதியிலிருந்து சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். வேலுச்சாமிபுரம் பகுதியில் உள்ள பொதுமக்கள் வியாபாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் துறையினருக்கு சம்மன் […]