ஆன்லைன் சூதாட்டத்தால் பல லட்சம் இழப்பு: தந்தை கண்டித்ததால் கல்லூரி மாணவர் தற்கொலை

கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம் ஜமகண்டி பகுதியைச் சேர்ந்த ரமேஷ் (21) என்ற இளைஞர், அங்குள்ள தனியார் கல்லூரியில் பி.சி.ஏ. பயின்று வந்தார். இவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகி, அதில் பல லட்சம் ரூபாயை இழந்ததுடன், அதனை ஈடுகட்ட பலரிடம் கடனும் வாங்கியுள்ளார். ரமேஷ் வாங்கிய கடனை அவரது தந்தை ஏற்கனவே இரண்டு முறை அடைத்துள்ளார். இருப்பினும், ஆன்லைன் சூதாட்டத்தில் ஈடுபடுவதை ரமேஷ் நிறுத்தவில்லை என்று கூறப்படுகிறது. தொடர்ந்து சூதாட்டத்தில் ஈடுபட்டு வந்த ரமேஷை அவரது தந்தை […]

ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமை… துப்பாக்கியை அடகு வைத்த எஸ்ஐ

ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம்  ராயச்சோட்டியைச் சேர்ந்த பானு பிரகாஷ் ரெட்டி, தெலுங்கானாவில் 2020 பேட்ச்சை சேர்ந்த சப் இன்ஸ்பெக்டராக  தேர்ந்தெடுக்கப்பட்டார். கடந்த ஆண்டு, அவர் அம்பர்பேட்டை  காவல் நிலையத்தில்  (துப்பறியும் எஸ்.ஐ.) யாக பணியில் சேர்ந்தார்.  இருப்பினும், கடந்த சில நாட்களில், அவர் ஆன்லைன் சூதாட்டத்திற்கு அடிமையாகிவிட்டார். இதனால் லட்சக்கணக்கான பணத்தை இழந்து கடனில் சிக்கினார். இதன் காரணமாக, அவர் ஒரு திருட்டு வழக்கில் மீட்கப்பட்ட 8 சவரன்  தங்கத்தை எடுத்து விற்று பணம் பெற்றார். […]