இடைநிலை ஆசிரியர்களின் ஒரு மாத கால போராட்டம் வாபஸ்

‘சம வேலைக்குச் சம ஊதியம்’ என்ற கோரிக்கையை வலியுறுத்தி கடந்த ஒரு மாத காலத்திற்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்த இடைநிலை ஆசிரியர்கள், தற்போது தங்கள் போராட்டத்தைத் தற்காலிகமாக ஒத்திவைப்பதாக அறிவித்துள்ளனர். பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி விடுத்த வேண்டுகோளை ஏற்று இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது. மூன்று நபர் ஊதியக் குழுவின் அறிக்கை விரைவில் சமர்ப்பிக்கப்பட்டு, ஊதிய முரண்பாடுகள் களையப்படும் என அமைச்சர் அளித்த உறுதியின் பேரில், முதல்வர் ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்துப் […]

இடைநிலை ஆசிரியர்கள் ஊதியப்பிரச்சனை தொடர்பாக முடிவு எடுக்கப்படும்- அமைச்சர் மகேஸ்

 இடைநிலை ஆசிரியர்கள் ஊதியப்பிரச்சனை தொடர்பாக முடிவு எடுக்கப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். இடைநிலை ஆசிரியர்களின் ஊதியப் பிரச்சனை தொடர்பாக விரைவில் மூவர் குழு அறிக்கை வெளியிடப்படும் என்று கூறியுள்ளார்.

இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் மகேஸ் பேச்சுவார்த்தை

சென்னையில் இடைநிலை ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை நடத்தினார். சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வலியுறுத்தி இடைநிலை ஆசிரியர்கள் 21 நாட்களாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதியம் ரூ.15,000ஆக உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.2,500 ஊதியம் உயர்வு வழங்கி ரூ.15,000ஆக ஊதியம் தரப்படும். பொங்கல் பண்டிகையை இடைநிலை ஆசிரியர்கள் கொண்டாட வேண்டும் என்பதற்காக இடைக்கால நிவாரணமாக ஊதியம் உயர்ந்துள்ளது. இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கை நிச்சியம் நிறைவேற்றப்படும் […]

இடைநிலை ஆசிரியர்கள் குண்டுக்கட்டாக கைது-சென்னையில் பரபரப்பு

சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, சென்னையில் இடைநிலை ஆசிரியர்கள் மேற்கொண்டு வரும் போராட்டம் இன்று 14-வது நாளை எட்டியுள்ளது. அரையாண்டு விடுமுறை முடிந்து கடந்த ஜனவரி 5-ம் தேதி பள்ளிகள் திறக்கப்பட்ட போதிலும், ஆசிரியர்கள் தங்கள் போராட்டத்தைக் கைவிடாமல் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர். அரசின் “நோ ஒர்க் – நோ பே” அதிரடி: ஆசிரியர்களுடன் நடத்தப்பட்ட பலகட்ட பேச்சுவார்த்தைகளில் உடன்பாடு எட்டப்படாத நிலையில், தொடக்கக் கல்வித்துறை தற்போது கடுமையான நடவடிக்கைகளைத் தொடங்கியுள்ளது. அதன்படி, […]

7-வது நாளாக போராட்டம்…இடைநிலை ஆசிரியர்கள் கைது

சமவேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கையை வலியுறுத்தி, தொடக்க பள்ளிகளில் பணியாற்றும் இடைநிலை ஆசிரியர்கள், சென்னையில் கடந்த சில நாட்களாக தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூர் காந்தி இர்வின் சாலை அருகே, வட்டார கல்வி அலுவலகத்தை முற்றுகையிட்டு நேற்று 6வது நாளாக போராட்டம் நடத்தினர். காந்தி இர்வின் மேம்பாலத்தின் ஒருபுறத்தில், இடைநிலை ஆசிரியர்கள் அமர்ந்து போராட்டம் நடத்தினர். தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இந்த நிலையில், தங்களது கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி புத்தாண்டு […]