இனி ஆன்லைன் ரயில் டிக்கெட் முன்பதிவுக்கு ஆதார் கட்டாயம்

இந்திய ரயில்வே உணவு மற்றும் சுற்றுலா கழகம் எனப்படும் ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், 85 சதவீதம் பேர் டிக்கெட் முன்பதிவு செய்கின்றனர். முறைகேடுகளை தடுக்கும் வகையில், ஆதார அட்டை இணைப்பு முறையை ரயில்வே கொண்டு வந்துள்ளது. அதன்படி, ஐ.ஆர்.சி.டி.சி., இணையதளத்தில், காலை 8:00 மணி முதல் 10:00 மணி வரை ரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய ஆதார் எண் இணைப்பு கட்டாயம் என்பது தற்போது அமலில் இருக்கிறது. இதையடுத்து, மற்ற நேரங்களிலும் ஆதார் இணைப்பை படிப்படியாக கட்டாயமாக்கப்பட உள்ளது. […]