தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டிடும் பட்ஜெட்”- மு.க.ஸ்டாலின்

தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல் என்று அனைவரும் பாராட்டிடும் பட்ஜெட் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு தெரிவித்துள்ளார். இன்று தமிழ்நாடு அரசின் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட நிலையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில், ““இதுதான் வளர்ச்சி! தமிழ்நாடுதான் இந்தியாவுக்கான மாடல்” என்று அனைவரும் பாராட்டிடும் ஐந்தாண்டு சாதனைகளின் தொகுப்பாக, இடைக்கால நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்திருக்கிறார் மாண்புமிகு தங்கம் தென்னரசு அவர்கள்! ஒன்றிய அரசின் ஓரவஞ்சனைகளை மீறி, அவர்களது வஞ்சகங்களைத் திறமையாகக் கையாண்டு, வளர்ச்சியில் சாதனை […]
எனக்கு மறைக்க ஒன்றும் இல்லை… எஃப்ஸ்டீன் வழக்கில் டிரம்ப் மீண்டும் மறுப்பு!
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், ஜெஃப்ரி எஃப்ஸ்டீன் வழக்கில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என்று மீண்டும் வலியுறுத்தியுள்ளார். ஏர் ஃபோர்ஸ் ஒன் விமானத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “எனக்கு எதுவும் மறைக்க ஒன்றும் இல்லை. நான் முழுமையாக விடுவிக்கப்பட்டேன் (exonerated). எஃப்ஸ்டீனுடன் எனக்கு எந்த தொடர்பும் இல்லை” என்று தெளிவாகக் கூறினார். எஃப்ஸ்டீன் கோப்புகள் வெளியான பின்னணியில் இந்த விளக்கத்தை அவர் அளித்துள்ளார்.சமீபத்தில் நீதித்துறை வெளியிட்ட எஃப்ஸ்டீன் கோப்புகளில் (மூன்று மில்லியன் ஆவணங்கள், புகைப்படங்கள், வீடியோக்கள்) […]
ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது: இந்தியாவில் பார்க்க முடியாது
பூமிக்கும், சூரியனுக்கும் இடையே நிலவும் வரும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இந்த ஆண்டின் முதல் சூரிய கிரகணம் நாளை நிகழ்கிறது. நாளை சரியாக பிற்பகல் 3.36 முதல் இரவு 7.57 வரை இந்த கிரகணம் நிகழ்கிறது.மொத்தம் 4 மணி நேரம் 31 நிமிடங்கள் கிரகணம் நிகழ உள்ளது.இந்த கிரகணத்தை இந்தியாவில் காண முடியாது. முழு சூரிய கிரகணம் அண்டார்டிகாவிற்கு மேலே தெரியும். மேலும், தென் ஆப்பிரிக்கா, ஜிம்பாப்வே, தான்சானியா, நமீபியா மற்றும் மொரீஷியஸ், தென் அமெரிக்காவின் பகுதிகளான […]
நடுக்கடலில் படகு கவிழ்ந்து 53 பேர் பலி…பரிதாபம்
மத்திய தரைக்கடல் (Mediterranean Sea) வழியாக ஐரோப்பாவிற்குள் சட்டவிரோதமாக நுழைய முயன்றபோது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. லிபியாவின் கடற்கரையிலிருந்து புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே படகின் எஞ்சினில் கோளாறு ஏற்பட்டுள்ளது. கடலின் நடுவே படகு நின்றபோது, வந்த ராட்சத அலையின் வேகத்தைத் தாங்க முடியாமல் படகு தலைகீழாகக் கவிழ்ந்தது. இந்த விபத்தில் 4 பச்சிளம் குழந்தைகள் உட்பட மொத்தம் 53 பேர் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். பலியானவர்களில் பெரும்பாலானோர் ஆப்பிரிக்க நாடுகளைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிகிறது. […]
இந்தியா–ரஷ்யா உறவில் அமெரிக்கா தலையீடு? – ரஷ்யா குற்றச்சாட்டு
ரஷ்யா: இந்தியாவுடன் தான் கொண்டுள்ள வர்த்தக மற்றும் ராணுவ உறவுகளை கட்டுப்படுத்த அமெரிக்கா முயற்சிப்பதாக கடும் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளது. ரஷ்ய வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ், மேற்கத்திய நாடுகள் தங்கள் முந்தைய ஆதிக்க மனநிலையை கைவிட மறுப்பதாகவும், ரஷ்யாவுக்கு எதிராக நியாயமற்ற வர்த்தக முறைகள் பயன்படுத்தப்படுவதாகவும் கூறியுள்ளார். இந்த குற்றச்சாட்டு ரஷ்யா – உக்ரைன் போர் பின்னணியில் இந்தியாவின் நிலைப்பாடு குறித்து அமெரிக்காவின் அழுத்தங்களை சுட்டிக்காட்டுவதாக அமைந்துள்ளது.லாவ்ரோவ் தனது அறிக்கையில், “மேற்கத்திய நாடுகள் அதன் முந்தைய ஆதிக்க […]
தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் சர்ச்சை – இந்தியா, EU-வை சாடிய அமெரிக்கா!
வாஷிங்டன் : இந்தியா – ஐரோப்பிய ஒன்றியம் இடையே தடையில்லா வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது உலக வர்த்தக வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்த ஒப்பந்தம் இரு பெரும் பொருளாதார சக்திகளை இணைத்து புதிய வர்த்தக வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஸ்காட் பெசன்ட் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அமெரிக்கா இந்த ஒப்பந்தத்தை தனது நலன்களுக்கு எதிரானதாக பார்க்கிறது என்பது அவரது கருத்தில் தெளிவாகத் தெரிகிறது. அமெரிக்க வர்த்தக அமைச்சர் ஸ்காட் […]
டி20 உலககோப்பை..பிப்.4ம் தேதி இந்தியா-தென்னாப்பிரிக்கா பயிற்சி ஆட்டம்
2026ம் ஆண்டு ஐசிசி டி20 உலகக் கோப்பை தொடருக்கு முன்னதாக, இந்திய கிரிக்கெட் அணி பயிற்சி ஆட்டத்தில் பலம் வாய்ந்த தென்னாப்பிரிக்காவை எதிர்கொள்கிறது. சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணிக்கு, டி20 உலகக் கோப்பை தொடர் தொடங்குவதற்கு முன்பு தங்களின் பலம் மற்றும் பலவீனங்களைச் சோதித்துப் பார்க்க இது ஒரு முக்கியமான வாய்ப்பாக அமையும். இந்த போட்டி வரும் பிப்ரவரி 4-ம் தேதி, நவி மும்பையில் உள்ள டி.ஒய். பாட்டில் மைதானத்தில், இந்திய நேரப்படி இரவு 7:00 […]
விண்வௌி வீரருக்கு அசோக சக்ரா விருது வழங்கிய குடியரசு தலைவர்
விண்வெளி வீரர் சுபான்ஷு சுக்லாவுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு அசோக சக்ரா விருது வழங்கினார். சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு சென்று திரும்பிய முதல் இந்தியரான சுபான்ஷு சுக்லாவுக்கு அசோக சக்ரா விருது வழங்கப்பட்டது.
மனைவிக்கு ஜீவனாம்சம்-ரூ.1.12 லட்சம் கோடியை வழங்கிய பில் கேட்ஸ்
பில் கேட்ஸ் மற்றும் அவரது மனைவி மெலிண்டா ஆகியோர் கடந்த ஆண்டு விவாகரத்து செய்து கொண்டனர். விவகாரத்து ஆகஸ்ட் 2021 இல் இறுதி செய்யப்பட்டது. அவர்களுக்கு ஜென்னர், ரோரி மற்றும் போப் என 3 பிள்ளைகள் உள்ளனர். 2000-ம் ஆண்டு, ‘பில் & மெலிண்டா கேட்ஸ்’ அறக்கட்டளை என்ற பெயரில், பில்கேட்ஸ் மற்றும் அவர் மனைவி மெலிண்டா கேட்ஸ் இருவரும் இணைந்து, ஒரு தனி அறக்கட்டளையை நிறுவினர். இந்த அறக்கட்டளையில் ஆரம்ப சுகாதாரம், கல்வி மற்றும் பருவநிலை […]
புவனேஸ்வர் அருகே விமானம் அவசரமாக தரையிறக்கம்- 6 பேர் காயம்
ஒடிசாவின் தலைநகர் புவனேஸ்வரில் உள்ள பிஜு பட்நாயக் சர்வதேச விமான நிலையத்திலிருந்து ரூர்கேலாவுக்குச் சென்ற 9 பேர் அமரக்கூடிய சிறிய ரகத் தனியார் விமானம் , நடுவானில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக விபத்துக்குள்ளானது. விமானம் புவனேஸ்வரில் இருந்து புறப்பட்டு ரூர்கேலா விமான நிலையத்தை நெருங்கிய போது (சுமார் 10 கி.மீ தொலைவில்), திடீரென எஞ்சின் அல்லது கட்டுப்பாட்டு அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளது. நிலைமையை உணர்ந்த விமானி, விமானத்தை ஓடுதளத்தில் தரையிறக்க முடியாது என்பதை அறிந்து, அருகிலிருந்த […]
ஈடி’ மூலம் தேர்தல் தகவல்களை திருடுவதாக குற்றச்சாட்டு- திரிணாமுல் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம்
கொல்கத்தா: அமலாக்கத்துறை மூலம் தேர்தல் தகவல்களை திருடுவதாக கூறி டெல்லியில் இருக்கும் அமித் ஷா ஆபீஸ் முன் திரிணாமுல் எம்பிக்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். மேலும் இன்று ஒன்றிய அரசுக்கு எதிராக கொல்கத்தாவில் பிரம்மாண்ட கண்டன பேரணி நடைபெற்றது. மேற்குவங்கத்தில் சட்டமன்றத் தேர்தலுக்கான ஏற்பாடுகள் தீவிரமடைந்துள்ள நிலையில், ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் வியூக நிறுவனமான ‘ஐ-பேக்’ அலுவலகங்களில் நேற்று அமலாக்கத்துறையினர் சோதனை நடத்தினர். இந்தச் சோதனையின் போது ஐ-பேக் நிறுவனர் பிரதிக் ஜெயின் வீட்டிற்கு நேரடியாகச் […]
தேசமே முதன்மையானது”: வங்கதேச கிரிக்கெட் தொடரிலிருந்து இந்திய பெண் வர்ணனையாளர் ரித்திமா பதக் விலகல்
வங்கதேசத்தில் சிறுபான்மை இந்துக்கள் மீது நடத்தப்படும் தாக்குதல்களால் இரு நாடுகளுக்கும் இடையே தூதரக ரீதியான மோதல் ஏற்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக, பிசிசிஐ அறிவுறுத்தலின்படி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்து வங்கதேச வீரர் முஸ்தபிசூர் ரஹ்மான் நீக்கப்பட்டார். இதற்குப் பதிலடியாக, வங்கதேச அரசு தங்கள் நாட்டில் ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்பத் தடை விதித்துள்ளதுடன், உலகக்கோப்பை போட்டிகளைப் பாகிஸ்தானைப் போல இலங்கைக்கு மாற்ற வேண்டும் என ஐசிசியிடம் கோரிக்கை வைத்துள்ளது. இதனால் இரு நாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையிலான […]
பாகிஸ்தானுக்கு உளவு பார்த்த 15 வயது சிறுவன் கைது
இந்திய ராணுவம் குறித்த ரகசியத் தகவல்களைப் பாகிஸ்தான் உளவு அமைப்பிற்குப் பரிமாறி வந்த ஜம்மு காஷ்மீரைச் சேர்ந்த 15 வயது சிறுவனைப் பஞ்சாப் மாநில போலீசார் அதிரடியாகக் கைது செய்துள்ளனர். இந்தியாவின் பாதுகாப்பு தொடர்பான முக்கியத் தகவல்கள் பாகிஸ்தானுக்குக் கசிந்து வருவதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்திருந்தது. இதனைத் தொடர்ந்து தீவிரக் கண்காணிப்பில் ஈடுபட்ட போலீசார், பஞ்சாப் மாநிலம் மதோபூர் பகுதியில் வைத்து அந்தச் சிறுவனைப் பிடித்தனர். ஜம்மு காஷ்மீரின் சம்பா மாவட்டத்தைச் சேர்ந்த அந்தச் சிறுவனிடம் இருந்த […]
மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்-கட்டிடம் இடிந்து 2 பேர் பலி
மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதில் வீடுகள் இடிந்து 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மெக்சிகோ நாட்டின் தெற்கு மற்றும் மத்திய பகுதிகளில் இன்று காலை 7.58 மணியளவில் ரிக்டர் அளவுகோலில் 6.5 அலகுகளாகப் பதிவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. குரேரோ மாநிலத்தில் உள்ள சான் மார்கோஸ் நகருக்குத் தென்மேற்கே 14 கிலோமீட்டர் தொலைவில், 35 கிலோமீட்டர் ஆழத்தில் இந்த நிலநடுக்கம் மையம் கொண்டிருந்தது. இந்த நிலநடுக்கம் ஏற்பட்ட சமயத்தில் நாட்டின் ஜனாதிபதி கிளாடியா ஷெய்ன்பாம், […]
விண்ணில் பாய்ந்த இஸ்ரோவின் பாகுபலி ராக்கெட்- இந்தியா மீண்டும் சாதனை
இந்தியாவின் ‘பாகுபலி’ ராக்கெட் என அழைக்கப்படும் இஸ்ரோவின் எல்.வி.எம்-3 ராக்கெட் மூலம், அமெரிக்காவைச் சேர்ந்த ப்ளூபேர்ட்-6 தகவல்தொடர்பு செயற்கைக்கோள் வெற்றிகரமாக விண்ணில் ஏவப்பட்டுள்ளது.ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோள்எந்தவொரு சிறப்பு சாதனங்களும் தேவையில்லாமல், சாதாரண 4G மற்றும் 5G ஸ்மார்ட்போன்களுடன் நேரடியாக தொடர்பு கொள்ளும் வகையில் அடுத்த தலைமுறை செயற்கைக்கோள் அமைப்பின் ஒரு பகுதியாக ப்ளூபேர்ட் பிளாக்-2 செயற்கைக்கோள் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து LVM3 ராக்கெட் மூலம் ஏவப்பட்ட மிக அதிக எடை கொண்ட பேலோடாகவும் இதுவே அமைந்துள்ளது. இந்த செயற்கைக்கோளின் […]
டிட்வா புயல்…ரூ. 4 ஆயிரம் கோடி நிதியுதவி வழங்கும் இந்தியா
இலங்கையை இம்மாத தொடக்கத்தில் டிட்வா புயல் தாக்கியது. இந்த புயலால் இலங்கையில் 643 பேர் உயிரிழந்தனர். மேலும், ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். டிட்வா புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு உதவிடும் வகையில் இந்திய அரசு ஆபரேஷன் சாகர் பந்த் என்ற திட்டத்தின்கீழ் நிவாரண உதவிகளை செய்து வருகிறது. மேலும், பிரதமர் மோடியின் சிறப்பு தூதராக மத்திய வெளியுறவுத்துறை மந்திரி ஜெயசங்கர் இலங்கை சென்றுள்ளார். அவர் இலங்கையில் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு செய்தார். மேலும், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவை […]
கடும் பனிமூட்டம்… டில்லியில் 40 விமானங்கள் ரத்து
கடும் பனிமூட்டம் காரணமாக டெல்லியில் 40 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. 4 விமானங்கள் திருப்பிவிடப்பட்டன. டெல்லி உள்ளிட்ட வடமாநிலங்களில் கடும் பனிமூட்டத்தால் விமான சேவைகளில் பாதிப்பு ஏற்படலாம் என்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விமான நேரம் குறித்து அறிந்து கொண்டு பயணிகள் விமான நிலையத்துக்கு செல்ல விமான போக்குவரத்து அமைச்சகம் அறிவுறுத்தல் வழங்கி உள்ளது. டெல்லி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலவும் அடர்ந்த பனிமூட்டம் சாலைப் போக்குவரத்து மட்டுமின்றி, விமானப் போக்குவரத்தையும் வெகுவாகப் பாதித்துள்ளது. பனிமூட்டம் […]
நேருவை வெறுப்பது போலவே, காந்தியையும் வெறுக்கும் பாஜக.. காங்., விமர்சனம்
ஜவஹர்லால் நேருவை தொடர்ந்து மகாத்மா காந்தி மீது ஒன்றிய பாஜக அரசு வெறுப்பு அரசியல் செய்வதாக காங்கிரஸ் விமர்சித்துள்ளது. மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தை பெயரை மாற்ற ஒன்றிய அரசு திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் பொது செயலாளர் எம்.பி. ஜெய்ராம் ரமேஷ். ஏற்கனவே திட்டங்களுக்கு பெயர் மாற்றுவதில், விளம்பரப்படுத்துவதிலும் பாஜகவினர் வல்லுனர்கள் என்று விமர்சித்துள்ளார். நேருவை வெறுப்பது போலவே, மகாத்மா […]
மன்னிச்சிக்கோங்க- மெஸ்ஸி ரசிகர்களிடம் மம்தா வேண்டுகோள்
அர்ஜென்டினா கால்பந்து நட்சத்திரம் லியோனல் மெஸ்ஸி கொல்கத்தா சால்ட் லேக் மைதானத்தில் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் ஏற்பட்ட குழப்பத்திற்கு மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி மன்னிப்பு கோரியுள்ளார். மெஸ்ஸியைப் பார்க்க ஆயிரக்கணக்கான ரசிகர்கள் குவிந்திருந்த நிலையில், மெஸ்ஸி சிறிது நேரம் மட்டுமே இருந்து சென்றதால் ரசிகர்கள் ஆத்திரமடைந்து பொருட்களை வீசியெறிந்து, மைதானத்தில் ரகளையில் ஈடுபட்டனர். இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தை கலைத்தனர். மம்தா பானர்ஜி தனது எக்ஸ் பதிவில், “சால்ட் லேக் மைதானத்தில் ஏற்பட்ட […]
தென் ஆப்ரிக்க அணிக்கு எதிரான 2வது டி20 கிரிக்கெட் போட்டி…இந்திய அணி பந்துவீச்சு தேர்வு
இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி 5 போட்டிகள் கொண்ட 20 ஓவர் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் கட்டாக்கில் நடந்த தொடக்க ஆட்டத்தில் இந்தியா 101 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி தொடரில் 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.இந்த நிலையில் இந்தியா- தென்ஆப்பிரிக்கா இடையிலான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி பஞ்சாப் மாநிலம் மொகாலி மாவட்டத்தில் உள்ள நியூ சண்டிகாரில் இன்று (வியாழக்கிழமை) நடக்கிறது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை […]
சபரிமலை மண்டல பூஜை தரிசனம் – இன்று முதல் முன்பதிவு
சபரிமலையில் மண்டல பூஜை தரிசனத்திற்கு இன்று (டிச.11) மாலை 5 மணி முதல் ஆன்லைனில் முன்பதிவு செய்து கொள்ளலாம். சபரிமலையில் வரும் டிசம்பர் 27ம் தேதி மண்டல பூஜை நடைபெற உள்ளது. 26 மற்றும் 27ம் தேதிகளில் பக்தர்கள் தரிசனத்துக்கு ஆன்லைன் முன் பதிவு மாலை 5 மணிக்கு தொடக்கம். sabarimalaonline.org என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்யலாம். டிச. 26இல் 30,000 பேர், 27 ஆம் தேதி 35,000 பேருக்கு அனுமதி- ஸ்பாட் புக்கிங்கில் தலா […]
இந்தியா வரும் புதினை சந்திக்க ராகுலுக்கு அனுமதி மறுப்பு
இந்தியாவிற்கு வருகை தரும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்திக்க தனக்கு அனுமதி மறுத்துவிட்டதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டினார். இந்தியா – ரஷ்யாவின் 23-வது உச்சி மாநாடு டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பங்கேற்க 2 நாள் பயணமாக ரஷ்ய அதிபர் புதின் இன்று மாலை டெல்லி வருகிறார். அவருக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் சிறப்பு வரவேற்பு அளிக்கப்படுகிறது. மேலும், அதிபர் புதினுக்கு குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு சிறப்பு விருந்துக்கு ஏற்பாடு […]
தங்கம் விலை குறைய வாய்ப்பு..
ரஷ்ய அதிபர் புதினின் இந்தியா வருகையால் தங்கம் விலை குறைய வாய்ப்புள்ளதாக தங்கம் மற்றும் வைர நகை வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் சலானி தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புதின் 2 நாள் அரசு முறை பயணமாக இன்று (டிச.04) இந்தியா வருகிறார். 23வது இந்தியா-ரஷ்யா உச்சி மாநாட்டில் பங்கேற்கும் அவர், இந்தியா- ரஷ்யா இடையே முக்கிய விவகாரங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தி ஒப்பந்தங்களில் கையெழுத்திடலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில், புதின் வருகையால் தங்கம் விலை குறைய வாய்ப்பு […]
இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத வீழ்ச்சி
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90.14 ஆக சரிந்துள்ளது. மோடி ஆட்சிக்கு வந்தால் ஒரு டாலரின் மதிப்பு ஒரு ரூபாய் என்று ஆகும் என 2014 ஆம் ஆண்டு மிகப்பெரிய பரப்புரை செய்யப்பட்ட நிலையில், அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவு வீழ்ச்சியடைந்துள்ளது.முதல் முறையாக ஒரு டாலருக்கு ரூ.90-த் தாண்டியுள்ளது. அமெரிக்கா – இந்தியா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தான பின் ரூபாய் மதிப்பு மீட்சியடையும் என நிபுணர்கள் […]
தென்னாப்பிரிக்காவுக்கு தக்க பதிலடி கொடுத்த இந்தியா.. த்ரில் வெற்றி
டெஸ்ட் தொடரில் தோல்வியடைந்து ஏமாற்றத்தை சந்தித்த இந்திய கிரிக்கெட் அணி, ODI தொடரில் சிறப்பான திரும்பி அடியை கொடுத்துள்ளது. தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் (நவம்பர் 30) இந்தியா 349/8 ரன்கள் என நல்ல ஒரு டார்கெட்டை வைத்தது. விராட் கோலி 135 ரன்கள் (120 பந்துகள்) உட்பட அபாரமாக விளையாடி, 52வது ODI சதத்தை அடைந்தார். ரோஹித் ஷர்மா 57 ரன்கள் (50 பந்துகள், 5 சிக்ஸ்) அடித்து ODIயில் அதிக சிக்ஸ் அடி […]
சட்டவிரோதமாக தங்கி இருந்த வங்காளதேசத்தினர்… 12 பேர் கைது
வங்காளதேசம், மியான்மர் நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக எல்லை வழியாக இந்தியாவுக்குள் நுழையும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்குள் நுழையும் நபர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் மாற்று பெயர் மற்றும் அடையாள அட்டையுடன் சட்டவிரோதமாக வசித்து வருகின்றனர். அந்த நபர்களை கைது செய்ய மத்திய, மாநில அரசுகள் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றன. இந்நிலையில், மேற்கு வங்காளத்தின் முர்ஷிதாபாத் மாவட்டம் இஸ்லாம்பூரில் வங்காளதேசத்தை சேர்ந்த சிலர் சட்டவிரோதமாக தங்கி இருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் […]
துபாய் கண்காட்சியில் விபத்துக்குள்ளான தேஜஸ் விமானம்
துபாய் விமான கண்காட்சியில் கீழே விழுந்து விபத்துக்குள்ளான தேஜஸ் விமானம். துபாய் கண்காட்சியில் சாகசம் செய்த போது கீழே விழுந்த இந்தியாவின் தேஜஸ் விமானம். விமானம் தீப்பிடித்து விழுந்த அதிர்ச்சி காட்சிகள் வௌியாகின. கீழே விழுந்த வேகத்தில் பயங்கரமாக வெடித்து சிதறியது. இந்தியாவிலேயே தயாரிக்கப்பட்ட போர் விமானமான தேஜஸ் விமானம் கீழே விழுந்து விபத்தானது. 2வது முறையாக விபத்துக்குள்ளான தேஜஸ் விமானம். விமானியி்ன் நிலை என்ன என்று இதுவரை மத்திய அரசு தரப்பில் தௌிவுப்படுத்தவில்லை. இந்தயிாவைச் சேர்ந்த […]
ரஷ்யா கூட வர்த்தகம் செய்தால் 500% வரி விதிப்பேன்– இந்தியாவுக்கு டிரம்ப் எச்சரிக்கை
அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஒரு புதிய சட்டத்தை ஆதரித்துள்ளார். இதன்படி, ரஷ்யாவுடன் எண்ணெய், எரிவாயு, ஆயுதம் உள்ளிட்ட எந்தப் பொருளையும் வாங்கும் நாடுகளின் பொருட்களுக்கு அமெரிக்காவில் 500% வரி (அதாவது 5 மடங்கு வரி) விதிக்கப்படும். இந்தியா, சீனா, துருக்கி, பிரேசில் போன்ற நாடுகள் இப்போது ரஷ்யாவிடமிருந்து மலிவு விலை எண்ணெய் அதிகமாக வாங்கி வருவதால், இந்த சட்டம் நிறைவேறினால் இந்தியாவுக்கு பெரும் பாதிப்பு ஏற்படும். ட்ரம்ப் செய்தியாளர்களிடம், “ரஷ்யாவுடன் வியாபாரம் செய்யும் எந்த நாடும் […]
டில்லி கார் வெடிப்பு- குற்றவாளிகள் ஓடி ஒளிந்தாலும் வேட்டையாடப்படுவார்கள் – அமித் ஷா!
சிவப்பு கோட்டை (Red Fort) அருகே நவம்பர் 10 அன்று நடந்த கார் குண்டுவெடிப்பு தாக்குதலில் 15 பேர் உயிரிழந்தனர், 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தீவிரவாத தாக்குதலாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஹரியானாவின் ஃபரிதாபாத்தில் நடந்த வடக்கு மண்டல கவுன்சில் கூட்டத்தில் பேசுகையில், “குற்றவாளிகள் பாதாள உலகத்தின் ஆழத்திலிருந்தும் கண்டுபிடித்து, கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள்” என்று உறுதியளித்தார். “யாருக்கும் தாக்குதல் நடத்தும் எண்ணமே வராத அளவுக்கு தண்டனை இருக்கும்” என்று […]
டில்லி கார் வெடிப்பு சம்பவம்.. 13 பேர் பலி….ஒருவர் கைது
டில்லி, செங்கோட்டை அருகே உள்ள சுபாஷ் மார்க் சிக்னல் பகுதியில் நேற்று (நவம்பர் 10, 2025) மாலை 7 மணியளவில் ஹூண்டாய் i20 காரில் பயங்கர வெடிப்பு நடந்தது. இந்த வெடிப்பில் 13 பேர் உயிரிழந்தனர், 30-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்து மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர். வெடிப்பு நடந்த கார் மெதுவாக இயக்கப்பட்ட நிலையில் திடீரென வெடித்ததால், அப்பகுதியில் பெரும் பீதி ஏற்பட்டது. சம்பவ இடத்தில் காரின் பாகங்கள் சிதறி, சுற்றியுள்ள வாகனங்கள் சேதமடைந்தன.வெடிப்பு நடந்த உடனே […]