தெலங்கானாவில் பயங்கரம்: இன்ஸ்டா காதலுக்காகப் பெற்றோரையே தீர்த்துக்கட்டிய மகள்

தெலங்கானா மாநிலம் விகராபாத் மாவட்டம் யச்சாரம் கிராமத்தைச் சேர்ந்த தசரத் (60) மற்றும் அவரது மனைவி லட்சுமி (55) ஆகியோருக்கு சுரேகா (26) என்ற மகள் உள்ளார். தனியார் மருத்துவமனையில் செவிலியராக (நர்ஸ்) பணியாற்றி வரும் சுரேகாவிற்கு, இன்ஸ்டாகிராம் வாயிலாக ஒரு இளைஞருடன் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியுள்ளது. இவர்களது காதலுக்குப் பெற்றோர் கடும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, சுரேகாவிற்குத் திருமண ஏற்பாடுகளையும் தீவிரமாகச் செய்து வந்துள்ளனர். இதனால் ஆத்திரமடைந்த சுரேகா, தனது காதலுக்கு முட்டுக்கட்டையாக இருக்கும் பெற்றோரைத் […]