செங்கோட்டையன் வைத்த குற்றச்சாட்டு- இ.பி.எஸ் விளக்கம்
அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி, கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனின் விமர்சனங்களுக்கு கடுமையான பதிலடி கொடுத்துள்ளார். செங்கோட்டையன் அதிமுகவில் குடும்ப அரசியல் நடப்பதாகக் கூறியதை “வேறு குற்றச்சாட்டு இல்லாததால்” என்று கூறி நிராகரித்தார். “என் மகனை யாராவது கட்சி நிகழ்ச்சியில் பார்த்துள்ளீர்களா?” என்று கேள்வி எழுப்பிய எடப்பாடி பழனிச்சாமி, வாரிசு அரசியல் குற்றச்சாட்டை முற்றிலும் மறுத்தார். அதிமுக ஆட்சியை குறை சொல்ல முடியாததால் பாஜகவுடனான கூட்டணியை திமுக விமர்சிப்பதாகவும், திமுக ஆட்சியில் […]