பிரியாணி மாஸ்டரின் இருசக்கர வாகனம் திருட்டு: 2 பேர் கைது

திருச்சி அரியமங்கலம் காமராஜர் நகர் பி.டி.காலனியைச் சேர்ந்தவர் முகமது இஸ்மாயில் (28). பிரியாணி மாஸ்டராகப் பணிபுரிந்து வருகிறார். இவர், கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது வேலையை முடித்துவிட்டு, வீட்டின் முன் இருசக்கர வாகனத்தை நிறுத்தியிருந்தார். மறுநாள் காலையில் பார்த்தபோது வாகனம் திருடு போயிருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். இது குறித்து அவர் அரியமங்கலம் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், காவல் ஆய்வாளர் இமானுவேல் ராயப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தார். இந்நிலையில், அப்பகுதியில் போலீசார் […]