திருமண அழைப்பிதழ் கொடுத்துவிட்டு வீடு திரும்பிய இளைஞர் வேன் மோதி பலி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே திருமணத்திற்கு இன்னும் சில நாட்களே இருந்த நிலையில், சாலை விபத்தில் மணமகன் உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உசிலம்பட்டி திருவள்ளுவர் நகரைச் சேர்ந்தவர் கருப்பையா. இவரது மகன் பிரசன்ன வெங்கடேஷ் (26). பெங்களூருவில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்த இவருக்கு, வரும் ஜனவரி 28-ம் தேதி திருமணம் நடைபெற இருந்தது. இதற்காக விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த பிரசன்ன வெங்கடேஷ், தனது திருமணத்திற்கான அழைப்பிதழ்களை உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு […]