ஏ.ஆர்.ரஹ்மான் ரூ. 2 கோடி செலுத்த சுப்ரீம் கோர்ட் உத்தரவு
பொன்னியின் செல்வன் 2 பட பாடல் வழக்கில் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடி செலுத்த உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வீர ராஜ வீர பாடல், சிவ ஸ்துதி பாடலின் மெட்டு போல் உள்ளதாகக்கூறி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. டாகர் வாணி பாரம்பரியத்தின் இசை பங்களிப்பை அங்கீகரிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் கூறிய நிலையில், பதிவாளரிடம் ஏ.ஆர்.ரஹ்மான் ரூ.2 கோடியை டெபாசிட் செய்ய உத்தரவிட்டுள்ளது.
வங்கதேச வீரர் கேகேஆர் அணியிலிருந்து நீக்க பிசிசிஐ உத்தரவு
கொல்கத்தா அணிக்காக விளையாடி வரும் முஸ்தபிசுர் ரஹ்மானை அணியிலிருந்து விடுவிக்க கொல்கத்தா அணிக்கு பிசிசிஐ/ஐபிஎல் உத்தரவிட்டுள்ளது. வங்கதேசத்தில் இந்துக்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் சூழலில் அந்நாட்டு வீரர்கள் ஐபிஎல்லில் விளையாட எதிர்ப்பு கிளம்பியுள்ளது. சிவசேனா உள்ளிட்ட கட்சிகள், அமைப்புகளின் எதிர்ப்பை அடுத்து உத்தரவிடப்பட்டுள்ளது. வங்கதேசத்தில் சமீபகாலமாக இந்து சிறுபான்மையினருக்கு எதிராக நடந்து வரும் வன்முறைச் சம்பவங்கள் இந்தியாவில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளன. இதன் காரணமாக, வங்கதேச வீரர்களை ஐபிஎல் போட்டிகளில் விளையாட அனுமதிக்கக் கூடாது என்று பல்வேறு […]
தூண் இருக்கும் இடமெல்லாம் தீபமேற்ற வேண்டுமென்றால் எப்படி?… அறநிலையத்துறை
திருப்பரங்குன்றம் தீப விவகாரத்தில் தனி நீதிபதி உத்தரவுக்கு எதிரான மேல்முறையீடு, இரு நீதிபதிகள் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது தர்கா தரப்பு வாதங்களை முன்வைத்தது. அப்போது, “நெல்லித்தோப்பு பகுதியில் இஸ்லாமியர்கள் தொழுகை செய்தபோது, இந்து முன்னணி அமைப்பினர் அங்கு தொழுகை நடத்தக் கூடாது என எதிர்ப்பு தெரிவித்தனர். ’ஆடு, கோழி பலியிட்டதாக எந்த ஆதாரமும் இல்லை; உரிமையியல் நீதிமன்றத்தில் போய்தான் நிவாரணம் பெற முடியும்’ என்றும் அவர்கள் கூறினர்; இதே கருத்துதானே தீபம் ஏற்றுவதற்கும் பொருந்தும். இந்த […]
இனி இளையராஜா படங்களை பயன்படுத்தக் கூடாது… கோர்ட் அதிரடி
இசையமைப்பாளர் இளையராஜா, சமூக வலைதளங்களில் தனது புகைப்படம், பெயர், “இசைஞானி” என்ற பட்டம், குரல் போன்றவற்றை தன்னை அடையாளப்படுத்தும் வகையில் பயன்படுத்துவதைத் தடுக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். நவம்பர் 21, 2025 அன்று நீதிபதி ச.ம.சுப்ரமணியன் அவரது மனுவை விசாரித்து, யூடியூப் சேனல்கள், சோனி மியூசிக், சபாஸ், ஸ்பாடிஃபை, பேஸ்புக், இன்ஸ்டாகிராம், எக்ஸ் (டிவிட்டர்) போன்ற சமூக வலைதளங்களுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவு பிறப்பித்துள்ளார். இளையராஜாவின் வழக்கறிஞர் அரவிந்த் பாண்டே, […]